Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நோவாவின் நாட்களில் நடந்ததுபோல...!, மே 9

    “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமார னுடைய நாட்களிலும் நடக்கும்.” - லூக்கா 17:26.Mar 257.1

    நமது உலகில், காரியங்கள் ஒரு பயங்கரமான நிலையில் காணப்படுகின்றன என்பது எனக்குக் காட்டப்பட்டது. இரக்கத்தின் தூதன் தனது செட்டைகளை மடக்கிக்கொண்டு புறப்பட்டுச் செல்வதற்கு ஆயுத்தமாகிறான்...தேவனுடைய பிரமாணம் பயனற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. குழப்பம், கலக்கம், வறுமை, பஞ்சம், நிலநடுக்கங்கள், வெள்ளங்கள் ஆகியவைபற்றி நாம் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். மனிதர் பயங்கரமான அட்டூழியங்களை நடப்பிப்பார்கள். பகுத்தறிவு அல்ல, இச்சையே ஆதிக்கஞ்செலுத்தும். சோதோம் கொமோராவின் குடிகளைப்போன்று துரிதமாக மக்கள் கேடடைந்துவருவதால், தேவனுடைய உக்கிர கோபம் பூமியின்மீது படிகின்றது. ஏழைகளை ஒடுக்கி, தன்னலத்துடன் குவிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர்கள் நெருப்பினாலும், வெள்ளத்தினாலும் அழிந்துகொண்டிருக்கின்றன. ஆண்டவர் சீக்கிரத்தில் தமது பணியைக் குறைத்து, அதை முடித்துவிட்டு பாவத்திற்கு முடிவுகட்டப்போகிறார். இந்தக் கடைசி நாட்களிலே செயல்படுத்தப்படும் அக்கிரமங்கள்பற்றி எனது கண்களுக்கு முன்பாகக் காட்டப்பட்ட காட்சிகள், தேவனுடைய மக்களென்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்களுடைய உள்ளங்களில், ஒரு ஆழமான எண்ணத்தை ஏற்படுத்தினால், எவ்வளவு நன்றாக இருக்கும்!Mar 257.2

    நோவாவின் நாட்களில் எப்படி இருந்ததோ, அப்படியே மனுஷ குமாரன் வெளிப்படும் நாளிலும் இருக்கும். ஆண்டவர் பூமியிலே தாம் வைத்திருந்த தடைவரம்புகளை அகற்றிக்கொண்டிருக்கிறார். வெகுசீக்கிரத்தில் மரணமும், அழிவும், குற்றங்கள் பெருகுதலும், கொடுமையும், ஏழைகளுக்கு எதிராகத் தங்களை உயர்த்திக் கொண்ட செல்வந்தர்களுக்கு விரோதமாக, தீமை செயலாற்றுதலும் நடைபெறும். தேவனுடைய பாதுகாப்பில்லாதவர்கள் எந்த இடத்திலும், எந்த நிலையிலும் பாதுகாப்பைக் காணமுடியாது. காயப்படுத்தவும், கொலைசெய்யவுந்தக்கதாக மிகவும் சக்தி வாய்ந்த கருவிகளைத் தங்களது புதிய கண்டுபிடிப்பின் வல்லமையில் பயன்படுத்துவதற்காக, மானிடர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது...Mar 257.3

    என்னுடைய சகோதர, சகோதரிகளை...உங்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அநேகருடைய ஜீவியங்கள் இன்பத்தில் இழைந்து, நாகரிகத்தில் தோய்ந்துபோயிருக்கின்றது. தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால், செயலாற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் பொருள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. ஒரு கிறிஸ்தவனாக இருப்பது என்றால் அதன் பொருள் என்ன? கிறிஸ்துவைப்போன்று இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள்...அவரோடு இசைந்து வாழ்வதின்மூலம், அவருடன் ஒத்துழைக்க வேண்டும். விக்கிரகத்தின் வடிவத்தை எடுத்துக் கொள்ளும் அனைத்தையும், ஆத்தும ஆலயத்தினின்று வெளியேற்ற வேண்டும்; இப்பொழுது, தேவனுடைய நேரம்; அவருடைய நேரம் உங்களுடைய நேரமாகும். விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுங்கள். அவிசுவாசத்தைப்பற்றி நினைக்கவும், பேசவும் வேண்டாம். இந்த உலகம் கடைசி எச்சரிப்பின் தூதைக் கேட்க வேண்டும்.⋆Mar 258.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 258.2

    “உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்து போகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.” — உபாகமம் 9:3.Mar 258.3