Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வெகுசீக்கிரத்தில் ஒரு பெரும் பயங்கரம் நிகழவிருக்கின்றது!, மே 10

    “...நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.” - 1 கொரிந்தியர் 4:9.Mar 259.1

    இந்த உலகம் ஒரு நாடக மேடை. இதன் குடிகள் அனைவரும் மாபெரும் கடைசி நாடகத்தில் தங்களது பாகத்தை நடிக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர் சதியுடன் கூடிய உள்ளார்ந்த நோக்கத்தோடு, தங்களது தன்னலமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கூடுவதைத்தவிர, இந்த மாபெரும் மானிட திரள்கூட்டத்தின் மத்தியில் ஒற்றுமை என்பது இல்லை. தேவன் நோக்கிப்பார்த்துக்கொண்டிருக்கிறார். கலகக் குணம் படைத்த அவரது குடிமக்களுக்காக அவர் கொண்டிருக்கும் நோக்கங்கள் நிறைவேறுதலை அடையும். இந்த உலகில் குழப்பம் மற்றும் ஒழுங்கற்ற நிலையிலுள்ள மூலக்கூறுகளை ஒரு காலகட்டம் வரை ஆதிக்கஞ்செலுத்தத்தக்கதாக தேவன் அனுமதிகொண்டிருந்தபோதிலும், இந்த உலகமானது மனிதரின் கையில் முற்றிலுமாக ஒப்படைக்கப்பட்டுவிடவில்லை. நாடகத்தின் கடைசி மாபெரும் காட்சிகளைக் கொண்டுவரத்தக்கதாக, அடிமட்டத்திலிருந்து ஒரு வல்லமை கிரியைசெய்துகொண்டிருக்கிறது. யாரெல்லாம் தங்களை இரகசியச் சங்கங்களிலே கூட்டாக இணைத்து, ஒன்றுபடுத்தி வைத்துக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களிலே அனைத்து அநீதியின் வஞ்சகத்தோடும் வேலை செய்வதற்காக, சாத்தான் கிறிஸ்துவைப்போன்று வருவான். குற்றத்திற்கு உடந்தையான கூட்டுறவுகளிலே, அதிக இச்சையோடு தங்களை ஒப்புக்கொடுப்பவர்கள் சத்துருவின் (சாத்தானின்) திட்டத்தைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்றார் போல் அதன் விளைவு அவர்களைப் பின்தொடரும்.Mar 259.2

    மீறுதலானது ஏறக்குறைய அதின் வரையறை எல்லையை அடைந்துவிட்டது. குழப்பம் இந்த உலகத்தை நிறைத்து இருக்கிறது. மானிடர்மீது ஒரு மாபெரும் பயங்கரம் சீகரத்தில் வரவிருக்கிறது. முடிவு வெகு சமீபம்; திணறடிக்கக்கூடிய எதிர்பாராத அதிர்ச்சி இந்த உலகத்தின்மீது தாக்குதல் நடத்தப் போகிறது. இதை எண்ணி சத்தியத்தை அறிந்தவர்களாகிய நாம் ஆயத்தமாகிக்கொண்டிருக்கவேண்டும்...Mar 259.3

    நாம் ஒரு கூட்டம் மக்களாக உறங்கிக்கொண்டிருக்கின்றோமா? இப்பொழுது ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தமில்லாமலிருக்கிற, ஆண்டவரின் குடும்ப அங்கத்தினராவதற்கு தகுதியற்றவர்களாக இருக்கிற, நமது நிறுவனங்களிலுள்ள இளம்பெண்களும், ஆண்களும் காலங்களின் அடையாளங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்களானால், அவர்களிலே எப்படிப்பட்ட ஒரு மாற்றத்தைக் காணமுடியும்! ஆண்டவராகிய இயேசு, சுயத்தை மறுத்து, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற ஊழியர்களை அழைத்துக்கொண்டிருக்கிறார். அவரோடு நடக்கவும், சிலுவையைச் சுமந்து அவரோடு ஊழியஞ்செய்யவும், அவர் எந்த வழியில் நடத்திச்செல்லுகிறாரோ அங்கு பின்தொடரவும் அழைக்கிறார்.Mar 260.1

    அற்பமான சேவையின் சில சிறுசெயல்களை ஆண்டவருக்காகச் செய்துவிட்டு, அநேகர் மனமார திருப்தியோடிருக்கிறார்கள். அவர்களது கிறிஸ்தவம் நலிந்த நிலையிலிருக்கிறது. கிறிஸ்து பாவிகளுக்காக தம்மையே ஒப்புக்கொடுத்தார். பாவத்திலே அழிந்துகொண்டிருக்கும் மானிடர்களை நாம் காணும்பொழுது, ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக நாம் எத்தகைய அக்கறையால் நிறைந்திருக்க வேண்டும்! இந்த ஆத்துமாக்கள் அளவிட முடியாத விலைக் கிரயத்தால் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். கல்வாரிச் சிலுவையின்மீது ஏற்பட்ட தேவகுமாரனின் மரணமே அவர்களது மதிப்பின் அளவாகும்! ஒவ்வொரு நாளும் தங்களுக்கு நித்திய வாழ்வா அல்லது நித்திய மரணமா என்பதை அவர்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள்.⋆Mar 260.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 260.3

    “கர்த்தர்...உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் உன்னை ஆசீர்வதிப்பார்.” — உபாகமம் 28:8.Mar 260.4