Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சமாதானம்பற்றி கூக்குரலிடுபவர்கள்!, மே 16

    “வாருங்கள், திராட்சைரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம் போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும்” என்பார்கள். - ஏசாயா 56:12.Mar 271.1

    பொல்லாத ஊழியக்காரன் எனது எஜமான் வர நாட்செல்லும் என்று தனது இருதயத்தில் சொல்லிக்கொள்கின்றான். கிறிஸ்து வர மாட்டார் என்று அவன் சொல்லுகிறதில்லை. அவரது இரண்டாம் வருகையைப்பற்றிய கருத்தைக்குறித்து பரிகாசஞ்செய்கிறதில்லை; ஆனால், அவனது இதயத்திலும் அவனது வார்த்தைகள், செயல்கள் மூலமாகவும் ஆண்டவரின் வருகையானது தாமதமாயிருக்கிறது என்று உறுதியாகக் கூறுகின்றான். ஆண்டவர் சீக்கிரம் வரப் போகிறார் என்ற உறுதியான எண்ணத்தை மற்றவர்களது உள்ளங்களிலிருந்து அகற்றிப்போடுகிறான். அவனது செல்வாக்கானது துணிகரமான அக்கறையற்ற தாமதத்திற்கு மனிதரை வழிநடத்து கிறது. அவர்கள் தங்களது உலகப்பற்றிலும் மதிமயங்கிய நிலையிலும் நன்கு ஊன்றியிருக்கிறார்கள். பூமிக்குரிய இச்சைகள், சிந்தனைகளைக் கொடுத்து, உள்ளத்தை ஆட்கொண்டுவிடுகின்றான். அந்தப் பொல்லாத ஊழியக்காரன் குடிகாரனோடு சேர்ந்து புசித்து, குடித்து சிற்றின்பத்தைத் தேடி, உலகத்தோடு இணைந்துக்கொள்கிறான். அவன் தனது சக ஊழியர்களை அடித்து, தங்களது எஜமானர்களுக்கு உண்மையாயிருப்பவர்களை குற்றஞ்சாட்டி, கண்டனஞ்செய்கிறான்...Mar 271.2

    கிறிஸ்துவின் வருகையானது பொய்யான போதகர்கள் திடீரென்று அதிர்ச்சியில் மூழ்கடிக்கும். அவர்கள், “சமாதானம், சவுக்கியம்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எருசலேமின் விழுகைக்கு முன்னாலிருந்த ஆசாரியர்களையும் போதகர்களையும் போன்று, இந்த பூமிக்கடுத்த செழுமையையும் மகிமையையும் அனுபவிக்கவேண்டுமென்று சபையை நோக்கிப் பார்க்கிறார்கள். காலங்களின் அடையாளங்கள் இதை முன்குறித்துக் காட்டுகிறது என்று விளக்கங்கொடுக்கிறார்கள்; ஆனால், ஆண்டவரின் அருள் வார்த்தை என்ன கூறுகிறது? “அழிவு திடீரென்று அவர்கள்மேல் வரும்...”Mar 271.3

    ஆண்டவரின் வருகையை மனிதர் எட்டத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எச்சரிப்புகளைக்கேட்டுச் சிரிக்கிறார்கள். “சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே” என்றும், “நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும்” என்றும், பெருமையான தற்புகழ்ச்சி செய்யப்படுகிறது-2 பேதுரு 3:4; ஏசாயா 56:12. மேலும், இன்பங்களை நேசிப்பதில், நாம் ஆழ்ந்து ஈடுபடுவோம் என்கிறார்கள். ஆனால் கிறிஸ்து, “இதோ, திருடனைப்போல் வருகிறேன்” (வெளிப்படுத்தல் 16:15) என்று கூறுகிறார். “அவர் வருவாரென்ற வாக்குத்தத்தம் எங்கே?” என்று ஏளனமாக இந்த உலகத்தார் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் தானே, அடையாளங்களும் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. “சமாதானம், சவுக்கியம்” என்று அவர்கள் உரத்த சத்தமிடும்போழுது, அழிவு சடிதியாக வருகின்றது. சத்தியத்தைப் பரிகாசஞ்செய்பவரும், தள்ளிப்போடுபவரும் துணிகரமடைகின்ற பொழுது, கொள்கைக்கு எந்த மதிப்பும் கொடுக்கப்படாமல், பலதரப்பட்ட வழிகளில் பணம் சம்பாதிக்கும் தொழிலானது தொடர்ந்து நடைபெறும்பொழுது, வேதாகமத்தைத்தவிர அனைத்து அறிவையும் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று கற்றுக்கொள்பவர் ஆவலோடு நாடித்தேடும்போழுது, கிறிஸ்து ஒரு திருடனைப் போல வருகிறார்.⋆Mar 272.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 272.2

    “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால், அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்” - யோவான் 12:26.Mar 272.3