Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    காட்சிகள், ஒலிகள், குற்றப்பழியுடைமை!, மே 17

    “தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது. மாறுபாடான இருதயம் என்னைவிட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.” - சங்கீதம் 101:3,4.Mar 273.1

    முன்னேறிச்செல்லுகின்ற ஒவ்வொரு படியிலும், சோதனைகளை எதிர்த்துப் போராடவேண்டிய நிலையிலிருகின்ற உங்களது பிள்ளைகளைப்பற்றி, உங்களுக்கு ஆழ்ந்த அக்கறை இருப்பதற்கான காரணமிருக்கிறது. தீய தோழர்களோடு உள்ள தொடர்பைத் தவிர்த்து அவர்களுக்குக் கூடாத காரியமாகும்…அவர்கள்மீது செல்வாககை ஏற்படுத்தி, அடக்கி ஆளுகின்ற காட்சிகளைக் காண்கிறார்கள்; தொனிகளைக் கேட்கிறார்கள். அவைகள் ஒழுக்கத்தைச் சீர்குலைப்பவையாக இருக்கின்றன. அவைகளினின்று அவர்கள் முற்றிலுமாகப் பாதுகாக்கப்பட்டாலொழிய இக்காரியங்கள் புலனால் உணரமுடியாத அளவிற்கு, ஆனால் நிச்சயமாக இதயத்தைக் கேடடையச் செய்து, குணத்தைப் பாழாக்கிவிடுகிறது…Mar 273.2

    சில தாய் தகப்பன்மார்கள் மிகவும் அக்கறையற்றவர்களாகவும், மிகவும் கவலையற்றவர்களாகவும் இருக்கிறார்கள். தங்களது பிள்ளைகள் ஒரு சபையைச் சார்ந்த பள்ளிக்கூடத்தில் படித்தாலும் சரி, அல்லது பொதுவாக நடத்தப்படும் பள்ளியில் படித்தாலும் சரி, அதில் எந்த வித்தியாசமுமில்லை என அவர்கள் நினைக்கிறார்கள். நாம் இந்த உலகத்திலிருக்கிறோம்; “நாம் இதைவிட்டு வெளியே செல்ல முடியாது” என்றும் கூறுகிறார்கள். நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோமானால், இந்த உலகத்தை விட்டு வெளியேற ஒரு நல்ல வழி நமக்குண்டு. இந்தக் கடைசி நாட்களில் துரிதமாகப் பெருகிவருகின்ற அநேகத் தீமைகளைக் கண்டு, நாம் அவைகளைத் தவிர்க்க முடியும்…Mar 273.3

    எதிர்காலத்தைப்பற்றிய கற்பனைத்திறனால் வெளிப்படுகின்ற காட்சிகள் சிறு பிள்ளைகள், வாலிபர்கள் ஆகியோரது சுறுசுறுப்பான உள்ளங்களில் உண்மையானவைகள்போன்று இருக்கின்றன. புரட்சிகள் முன்னுரைக்கப்பட்டு, சட்டத்தின் தடைவேலிகளையும் சுயகட்டுப்பாட்டையும் உடைத்து தள்ளிப்போடத்தக்கதாக, விவரிக்கப்பட்டுள்ள அனைத்துவகையான நடைமுறைகளும், இத்தகைய சார்புடைய தன்மையை இறுகப் பற்றிபித்துக் கொள்கிறது.Mar 274.1

    மன எழுச்சியூட்டத்தக்கதாக எழுதும் எழுத்தாளர்கள் நுட்பமாக விவரித்துக்காட்டுவதையும்விட, முடியுமானால் மிகவும் மோசமான குற்றங்களைச் செய்வதற்கும் அவர்கள் நடத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட செல்வாக்குகளின்மூலமாக, சமுதாயமானது சீர்குலைந்து கொண்டிருக்கிறது. சட்டச்செயலாட்சியற்ற நிலையில் மீறுதலின் விதைகள் விதைக்கப்பட்டிருக்கின்றன. குற்றங்களின் ஒரு அறுவடையே அதின் விளைவாக இருக்கும் என்பதைக்கண்டு எவரும் ஆச்சரியப்பட அவசியமில்லை…Mar 274.2

    “எனது அருமையான கணநேரங்களை, எனக்குப் பயனற்ற தாயிருப்பவைகளை வாசிப்பதற்காக, நான் செலவழிக்க மாட்டேன். அவைகள் நான் மற்றவர்களுக்குச் சேவைசெய்வதற்கு என்னைத் தகுதியற்றவனாக்கிவிடுகிறது. தேவனுடைய சேவைக்கு ஒரு தகுதியை அடைந்துகொள்வதற்காக, எனது நேரத்தையும் சிந்தனைகளையும் அதற்காக அர்பணிப்பேன். அற்புதமான-பொழுதுபோக்கான-பாவம்நிறைந்த-காரியங்களுக்கு என் கண்களை மூடிக்கொள்வேன். எனது காதுகள் ஆண்டவருடையவை. எதிராளியின் தந்திரமான பகுத்தறிவின் குரலிற்கு நான் செவிசாய்க்கமாட்டேன் தேவனுடைய ஆவியானவரின் செல்வாக்கிற்கடியில் இல்லாத ஒரு சித்தத்திற்கு எந்த வகையிலும் எனது குரல் கட்டுப்பட்டிருக்காது. எனது உடலின் அனைத்து சக்திகளும் தகுதியுள்ள குறிக்கோளிற்காக அர்பணிக்கப்படும்” என்று உறுதியோடு கூறுங்கள்.⋆Mar 274.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 274.4

    “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” — நீதிமொழிகள் 2:13.Mar 274.5