Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    குமுறுகின்ற பூமி!, மே 21

    “அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ பூமி மிகவும் அதிர்ந்தது…”- வெளிப்படுத்தல் 6:12.Mar 281.1

    கிறிஸ்துவின் வருகையின் நோக்கம், அவர் வருகின்றவிதம் ஆகியவைகளைமட்டும் தீர்க்கதரிசனம் முன்னுரைக்காமல், வருகை சமீபம் என்பதை மனிதர் அறிவதற்காக, சில அடையாளங்களையும் கூறுகிறது…இரண்டாம் வருகைக்கு முன்னர், காணப்படும் அடையாளங்களில் முதலாவது அடையாளத்தைப்பற்றி வெளிப்படுத்தின விசேஷகன் பின்வருமாறு கூறுகின்றார்; “இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று” — வெளிப்படுத்தல் 6:12.Mar 281.2

    19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு முன்னரே இந்த அடையாளங்களை மக்கள் கண்டார்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறை வேறுதலாக 1755-ம் ஆண்டு, இதுவரை என்றுமே பதிவு செய்யப்படாத அளவிற்கு, ஒரு மகா பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது லிஸ்பன் நிலநடுக்கமென்று பொதுவாக அறியப்பட்டிருந்தாலும், ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள்வரை மற்றும் ஆப்பிரிக்கா, அமெரிக்காவரையிலும் விரிந்து பரவியது; மேலும், கிரீன்லாந்திலும், மேற்கு இந்தியத் தீவுகளிலும், மெடிரா தீவுலும், நார்வேயிலும், ஸ்வீடனிலும், கிரேட் பிரிட்டனிலும், அயர்லாந்திலும் உணரப்பட்டது. 40 இலட்சம் சதுரமைல்களுக்கும் குறைவின்றி பரந்துவிரிந்து பாதித்தது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சியானது ஐரோப்பாவில் எப்படி கடுமையாக இருந்ததோ, அதுபோல ஆப்பிரிக்காவிலும் ஏறக்குறைய அந்த நிலை இருந்தது. அல்ஜீயர்ஸின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுப் போயிற்று. மொரக்கோவிற்கு சிறிது தூரத்திலிருந்த ஒரு கிராமத்திலுள்ள 8 அல்லது 10 ஆயிரம் மக்கள் அப்படியே விழுங்கப் பட்டுவிட்டார்கள். ஒரு மாபெரும் அலை ஸ்பெயின், ஆப்பிரிக்கா கடற்கரையோரங்களில் அடித்துச்சென்று, பட்டணங்களை விழுங்கி, மாபெரும் அழிவை ஏற்படுத்தியது.Mar 281.3

    ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் நில அதிர்வானது அதின் உச்ச வேக வன்மையோடு வெளிப்பட்டது. காடிஸ் என்ற பகுதியில் உள்ளே வந்த அலை 60 அடி உயரமாயிருந்தது என்று சொல்லப்பட்டது. “போர்ச்சுக்கலில் இருந்த மிகப் பிரமாண்டமான மலைகளில் சில அதின் அடித்தளத்தினின்று அசைக்கப்பட்டது போன்று விசை வேகத்தோடு அசைக்கப்பட்டன” என்று சர் சார்லள் லைல் (Sir Charles Lyell) எழுதிய Principles of Geology என்ற புத்தகத்தின் 495-ம் பக்கத்தில் குறிப்பிடப்படுகிறது. “ஒரு பரிசுத்த நாளிலே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மடங்களும் ஆலயங்களும் மக்களால் நிறைந்து காணப்பட்டன. வெகு சிலரே தப்பித்தனர்” — Encyclopaedia Americana, art, “லிஸ்பன்,” note( ed.1831)…அந்த சாவிற்குரிய நாளிலே 90 ஆயிரம் மக்கள் உயிரிழந்தார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.Mar 281.4

    எவ்வளவு அடிக்கடி நிலநடுக்கங்கள் பற்றியும், சூறைப் புயல் பற்றியும், நெருப்பினாலும், வெள்ளத்தினாலும் ஏற்பட்ட அழிவுகள் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம். வெளிப்படையாகச் சொல்லுமிடத்து, இந்தப் பேரிடர்கள் ஒழுங்குமுறையற்ற, சீராக அமையாத இயற்கையின் சக்திகளால் ஏறுமாறாக ஏற்படும் திடீர் வெடிப்புகளாகும். இவை முற்றிலும் மனிதக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாகும்; ஆனால், இவைகளனைத்திலும் தேவனுடைய நோக்கத்தை கண்டுணர முடியும். இத்தகைய பெண்களையும் தங்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை உணரத்தக்கதாக, அவர்களை விழிப்படையச் செய்யமுயற்சிசெய்கிறார்.⋆Mar 282.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 282.2

    “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.” - சங்கீதம் 91:14.Mar 282.3