Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இறுதி யுத்தத்திற்காக சாத்தான் போடும் அடித்தளம்!, ஜூன் 3

    “உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லு மட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.” - தானியேல் 7:25.Mar 307.1

    கிறிஸ்துவ இறைமையின் அருள்முறை வகுப்பாட்சி காலத்தில், மனிதரின் மகிழ்ச்சிக்கு எதிரான மாபெரும் சத்துரு, நான்காம் கற்பனையின் ஓய்வுநாளை ஓர் குறிப்பிட்ட தாக்குதலுக்கான குறியிலக்காக ஆக்கிவிட்டான். “நான் தேவனோடு முரண்பாடான நோக்கத்தோடு செயல்புரிவேன். தேவனுடைய ஞாபகச் சின்னமாகிய ஏழாம்நாள் ஓய்வுநாளை ஒதுக்கிவைக்கத்தக்கதாக எனது பின்னடியார்களுக்கு அதிகாரம் வழங்குவேன்; தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டு, ஆசிர்வதிக்கப்பட்ட நாள் மாற்றப்பட்டுவிட்டது என்பதை நான் உலகத்திற்கு இவ்வாறு காட்டுவேன். அந்தநாள் மனிதரின் உள்ளத்தில் நீடித்து வாழ்ந்திருக்கக்கூடாது. அந்த நாளைப்பற்றிய நினைவையே துடைத்து, இல்லாமற்செய்துபோடுவேன். அதற்குப்பதிலாக, தேவனுடைய ஆதாரச் சான்றைப் பெற்றிராத ஒரு நாளை தேவனுக்கும் அவரது மக்களுக்குமிடையே அடையாளமாக இராத ஒரு நாளை-அந்த இடத்திலே வைப்பேன். தேவன் அந்த நாளின்மீது பரிசுத்தத்தை வைத்ததுபோன்று ஞாயிற்றுக் கிழமையை ஏற்றுக்கொள்பவர்களை அந்த நாளின்மீது பரிசுத்தத்தை வைக்கும்படிச் செய்வேன்” என்று சாத்தான் கூறுகிறான்.Mar 307.2

    “எனது பிரதிநிதியின்மூலம் நான் என்னை உயர்த்துவேன். முதலாம் நாள் உயர்வாக மதிக்கப்படும். புரோட்டஸ்டாண்டு உலகம் இந்தப் போலியான ஓய்வுநாளை உண்மையானது என்று ஏற்றுக்கொள்ளும். தேவன் நியமித்த அந்த ஓய்வுநாளை ஆசிரிக்காமல் இருப்பதின்மூலமாக, அவரது பிரமாணத்தை அவமதிப்பிற்கும் புறக்கணிப்பிற்கும் உள்ளாக்குவேன். உங்கள் தலைமுறைதோறும் இது எனக்கும் உங்களுக்கும் அடையாளமாக இருக்கும் என்று சொல்லப்பட்ட வார்த்தைகளை, எனது ஒய்வு நாளின் பக்கத்தில் இருந்து செயல்படும்படிச்செய்வேன்.”Mar 307.3

    “இவ்வாறு இந்த உலகம் என்னுடையதாகும் (சாத்தான்). நான் இந்த பூமியில் ஆளுகைசெய்பவனாகவும், இந்த உலகத்தின் அரசனாகவும் இருப்பேன். தேவனுடைய ஓய்வுநாளை, ஒரு அவமதிப்பிற்கான-குறிப்பிட்ட குறியிலக்காகச் செய்யும்படி, என்னுடைய வல்லமையால், மக்களின் மனங்களைக் கட்டுப்படுத்துவேன். அந்த ஒரு அடையாளம் எது? ஏழாம் நாள் ஆசரிப்பை இந்த பூமியிலுள்ள அதிகாரிகளுக்கு கீழ்ப்படியாததற்கான அடையாளச் சின்னமாக ஆக்குவேன். மானிடர்க்கான சட்டங்களை மிகவும் கெடுபிடியானதாக ஆக்குவேன். ஆண்களும் பெண்களும் ஏழாம் நாள் ஓய்வுநாளை ஆசரிக்கும்படி துணிவடையாதபடிக்கு அவ்வாறு செய்வேன். உணவும் உடையும் வேண்டுமே என்ற பயத்தினால், தேவனுடைய பிரமாணத்தை மீறுவதிலே அவர்கள் உலகத்தார்களோடு சேர்ந்துகொள்வார்கள். இந்த பூமி முழுவதும் என்னுடைய ஆளுகைக்கு அடியில் இருக்கும்.”Mar 308.1

    ஓய்வுநாள் ஆசரிப்பு தான் நாம் தேவனுக்கு உண்மையாக இருக்கிறோமா என்பதைச் சோதிக்கும் மாபெரும் பரீட்சையாகும்; ஏனெனில், அது முக்கிய முரண்பாட்டை உருவாக்குகின்ற சத்தியக்கருத்தாக இருக்கிறது. இறுதிச் சோதனையானது மனிதர்மீது வரும்போது, தேவனை சேவிப்பவர்களுக்கும், சேவிக்காதவர்களுக்குமிடையே, அதுவே தனித்த நிலையில், ஒரு வேறுபாட்டை தெளிவாகக் கோடிட்டுக்காட்டும்.⋆Mar 308.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 308.3

    “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.” - பிலிப்பியர் 4:19.Mar 308.4