Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஓய்வுநாளை ஆசரிப்பவர்களுக்கு எதிரான சாத்தானின் சூழ்ச்சியான போர்முறை!, ஜூன் 4

    “தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ? அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.” - சங்கீதம் 94:20,21.Mar 309.1

    இறுதிநாட்களின் இன்னல்களை தேவனுடைய மக்கள் நெருங்கிவரும்பொழுது, அவர்களது விசுவாசத்தை வீழ்த்திப்போடத்தக்கதாக, மிகவும் வெற்றியுள்ள திட்டத்தைத் தீட்டுவதற்கு சாத்தான் தனது தூதர்களோடு தீவிரமாகக் கலந்துபேசி, ஆலோசனைசெய்கிறான்...Mar 309.2

    மாபெரும் வஞ்சகனாகிய சாத்தான் பின்வருமாறு கூறுகின்றான்: ஆத்துமாக்களின் முடிவை நிர்ணயிப்பது ஓய்வுநாள் ஆசரிப்பு எனப்படும் கடும் தேர்வேயாகும். நாம் உண்டாக்கிய ஓய்வுநாளை உயர்த்திக்காட்ட வேண்டும். இவ்வுலக வாழ்க்கையில் பற்றுயோரையும் சபை அங்கத்தினரையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகச் செய்துவிட்டோம். இதை ஆதரிப்பதற்காக சபையை உலகத்தோடு இணையும்படி வழிநடத்த வேண்டும். சத்தியத்திற்கு எதிராக அவர்களது கண்களைக் குருடாக்கிப்போடத்தக்கதாக, நாம் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்யவேண்டும். தேவனுக்கேற்ற பயத்தையும் பகுத்தறிவையும் ஒதுக்கிவைத்துவிட்டு, பழக்கவழக்கங்களையும் பாரம்பரியங்களையும் பின்பற்றத்தக்கதாக, அவர்களை வழிநடத்த வேண்டும்.Mar 309.3

    “பிரபலமான போதகர்கள்மீது எனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அவர்களிடம் பிரசங்கம் கேட்கிறவர்களை தேவனுடைய பிரமாணங்களைவிட்டு வழிவிலகத்தக்கதாக பேசும்படிச்செய்வேன்...”Mar 309.4

    “ஆனால் நமது முதன்மையான அக்கறை என்னவென்றால், ஓய்வுநாளை கைக்கொள்ளும் இந்தக் தனியான சமயப்பிரிவினரை அமைதிப்படுத்துவதேயாகும். அவர்களுக்கு எதிராக, பொதுமக்களின் கடுங்கோபத்தைத் தூண்டிவிட வேண்டும். மாபெரும் மனிதர்களையும் உலக ஞானம் நிறைந்த மனிதரையும் நமது பக்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். நமது நோக்கங்களை செயல்படுத்தத்தக்கதாக, அதிகாரத்தில் இருப்பவர்களைத் தூண்டிவிட வேண்டும்” பின்னர், நான் ஏற்படுத்திவைத்துள்ள ஓய்வுநாளை மிகவும் கடுமையான-கொடுமையான சட்டங்களால் கட்டாயமாகச் செயல்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தைப் புறக்கணிப்பவர்களை கிராமங்களிலிருந்தும் பட்டணங்களிலிருந்தும் விரட்டியடித்து, பசியாலும், தாகத்தாலும், தனிமையாலும் வாடும்படிச்செய்ய வேண்டும். நமது கையில் ஒருமுறை அதிகாரம் கிடைத்துவிட்ட பிறகு, தேவன் மீது தங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியினின்று விலகாமல் இருப்பவர்களுக்கு, நாம் என்ன செய்வோம் என்பதைக் காட்டுவோம்...நமது வல்லமை என்னும் இந்த வலது புயத்தோடு, புரோட்டஸ்டாண்டு சபைகளையும் உலகத்தையும் இசைவாக இப்பொழுது கொண்டுவந்துகொண்டிருக்கின்றோம். இறுதியிலே, நமது அதிகாரத்திற்குக் கட்டுப்படாத அனைவரையும் ஓர் சட்டத்தின் மூலமாக, நாம் கூண்டோடு அழித்துவிடுவோம். நமது ஓய்வுநாளை (ஞாயிறு ஆசரிப்பு) மீறுபவர்களுக்கு மரணதண்டனை என்று சட்டம் இயற்றிய பிறகு, இப்பொழுது பிரமாணத்தைக் கைக்கொள்வோரது அணியில் இருப்பவர்கள் நம் பக்கத்திற்கு வந்துவிடுவார்கள்.Mar 309.5

    “ஆனால் இத்தகைய தீவிரமான நடவடிக்கைகளைச் செயலாற்ற முற்படுவதற்கு முன்னர், உண்மையான ஓய்வுநாளை ஆசாரிப்பவர்களை கண்ணியில் அகப்படுத்த வேண்டும். உலகப் பிரகாரமான சிற்றின்பங்கள், இழிந்த இசைகள், பெருமை ஆகியவைகளின்மூலமாக அவர்களை கிறிஸ்துவைவிட்டுப் பிரித்துவிடலாம். சத்தியத்தை விசுவாசிப்பதினால், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் எண்ணிக்கொள்ளலாம்; ஆனால், இன்சுவை நுகர்ச்சிகளில் மிதமிஞ்சி திளைத்தல் அல்லது கீழ்த்தரமான-இழிவான இச்சைகளில் ஈடுபடுதல் ஆகியவை அவர்களது தீர்மானிக்கும் திறனை சீர்குலைத்து, வேறுபடுத்திப் பார்க்கத்தக்கதான உணர்வுகளை அழித்து, அவர்களது வீழ்ச்சிக்கு அடிகோலும்.”⋆Mar 310.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 310.2

    “...வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.” - ஏசாயா 59:19.Mar 310.3