Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மருள விழுகையினால் மிருகத்திற்கு ஓர் சொரூபம்...!, ஜூன் 6

    “எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.”- 2 தெச. 2:3.Mar 313.1

    ஆரம்பகால சபை சுவிசேஷத்தின் எளிமையைவிட்டு விலகி, அஞ்ஞான பழக்கவழக்கங்களையும் சமயச் சடங்குகளையும் அனுசரித்து, கேடான நிலைக்கு மாறிவிட்டது. தேவனுடைய வல்லமையையும் பரிசுத்த ஆவியையும் இழந்துவிட்டது; மேலும், மக்களின் மனசாட்சிகளை அடக்கியாளத்தக்கதாக, சமயம் சாராத உலகியல் சார்ந்த வல்லமைகளை நாடிற்று. இதன்விளைவே பாப்பானவரின் ஆட்சியாகும்; அதாவது, அரசாங்க வல்லமையை அடக்கியாண்ட ஒரு சபை, அந்த வல்லமையைத் தங்களது சொந்த நோக்கங்களை மேம்படுத்திக்கொள்ளத்தக்கதாக, அதுவும் குறிப்பாக சபையின் கருத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களைத் தண்டிப்பதற்காகப் பயன்படுத்தியது. எப்பொழுதெல்லாம் உலகியல் சார்ந்த வல்லமையை சபை பெற்றுக்கொண்டதோ, அப்பொழுதெல்லாம் தங்களது கொள்கைகளுக்கு மறுப்பு தெரிவித்தவர்களை தண்டிப்பதற்காக, அந்த வல்லமையைப் பயன்படுத்தியது. ரோமாபுரியின் வழித்தடங்களை பின்பற்றிய புரோட்டஸ்டாண்டு சபைகளும் உலக வல்லமைகளோடு நட்புத் தொடர்பு வைத்துக் கொண்டு, மனசாட்சியின் சுதந்தரத்தை கட்டுப்படுத்தத்தக்கதாக இதேபோன்ற விருப்பத்தையே வெளிப்படுத்தியது. உதாரணமாக, இங்கிலாந்திலுள்ள சபையானது, தனது கொள்கைக்கு மாறாக இருப்பவர்களை நீண்டகாலமாக உபத்திரவப்படுத்தியது. பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளிலே ஆங்கிலேய திருச்சபையின் கொள்கையை ஒப்புக்கொள்ளாத ஆயிரக்கணக்கான போதகர்கள் தங்களது சபைகளைவிட்டு ஓடும்படிக்கு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அநேக போதகர்களுக்கும் மக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டார்கள்; சித்திரவதைக்கும் உள்ளானார்கள்; இரத்தசாட்சியாகவும் மரிக்கவேண்டியதிருந்தது.Mar 313.2

    ஆதி சபையின் மருளவிழுகையே உள்நாட்டிலுள்ள அரசாங்கத்தின் உதவியை நாடச்செய்தது. இந்தக் காரியம் பாப்பானவரின் அதிகாரத்தின் முன்னேற்றத்திற்கான வழியை ஆயத்தஞ்செய்தது. இந்த பாப்பானவரின் அதிகாரமே மிருகமாகும். பவுலார், “எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய ‘பாவமனுஷன்’ வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது” (2 தெசலோனிக்கேயர் 2:3)என்று கூறினார்; எனவே, சபையின் கொள்கை மீருதலானது, மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்க வழியை ஆயத்தஞ்செய்யும்.Mar 314.1

    “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி, சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும்” - 2 தேசலோனிக்கேயர் 2:9,10. இவ்வாறு சாத்தான் அனைத்து வல்லமையோடும் கிரியைசெய்வான். இருள் விரைவாகப் பெருகிய நிலையின்மூலம், அவனது வேலையானது தெளிவாக வெளிப்படும். தனிப்பட்டோரின் நலத்தைவிட, பெருவாரியான மக்களின் நலத்தையே மிகுதியாக விரும்பும் கொள்கையின் பிழைகள், முரண்பட்ட சமயக் கருத்துக்கள், இறுதி நாட்களில் நடைபெறப்போகும் வஞ்சகங்கள் ஆகியவைகளின் மூலம் அவனது வேலையானது தெளிவாக வெளிப்படும். சாத்தான் இந்த உலகத்தையே சிறைப்படுத்திக்கொண்டுபோகிறது மட்டுமல்ல; அவனது வஞ்சகங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சபைகள் என்று அழைக்கப்படுபவைகளையும் ஊடுருவி-பரவி கேடடையச்செய்துகொண்டிருக்கிறது. இந்த மாபெரும் மருள விழுகையானது, இருளாகமாறி, நள்ளிரவின் காரிருளைப் போலாகிறது. தேவனுடைய மக்களுக்கு சத்தியத்தினிமித்தம் அது ஓர் சோதனையின் இரவாகவும், அழுகையின் ஓர் இரவாகவும், உபத்திரவத்தின் ஓர் இரவாகவும் இருக்கும்; ஆனால், அந்த இரவின் இருளிலிருந்து தேவனுடைய வெளிச்சம் பிரகாசிக்கும்.⋆Mar 314.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 314.3

    “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் செர்த்துக்கொள்ளுவார்.” - சங்கீதம் 27:10.Mar 314.4