Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இந்த உலகமே நமது பணித்தளமாகும்!, ஜனவரி 16

    “...நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே... ஞானஸ்நானங்கொடுத்து...” - மத்தேயு 28:19.Mar 31.1

    கலிபோர்னியாவில், 1874-ம் ஆண்டில் நான் இருந்தபோது, எனது உள்ளத்தில் ஆழ்ந்த எண்ணப்பதிவை உண்டாக்கத்தக்கதான ஒரு கனவு எனக்குக் கொடுக்கப்பட்டது.Mar 31.2

    கலிபோர்னியாவில் உள்ள அநேக சகோதரர்கள் ஒரு ஆலோசனை கூட்டத்தில், வரப்போகின்ற காலக்கட்டத்தில், பணிசெய்வதற்கான ஒரு சிறந்த திட்டத்தைப் பற்றி, கவனமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.Mar 31.3

    எனது கனவுகளிலே நான் அடிக்கடி கண்ட வாலிபன் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தான். பேசப்பட்ட வார்த்தைகளை ஆழ்ந்த ஆர்வத்தோடு உன்னிப்பாகக் கவனித்தான்; பின்பு, முதிர்ந்த சிந்தனையோடும், அதிகாரத்தோடும் கூடிய உறுதியான நம்பிக்கையோடும் பின்வருமாறு கூறினான்:Mar 31.4

    “பட்டணங்களும், கிராமங்களும், தேவனுடைய திராட்சைத் தோட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கின்றன. அங்கு வாழ்பவர்களும் எச்சரிப்பின் செய்தியைக் கேட்க வேண்டும். தேவனுடைய சத்தியத்தினின்று, பொய்யான காரியங்களுக்கு மக்களின் மனதைத் திருப்பத்தக்கதாக, சத்தியத்தின் எதிராளி வெறியோடு போராடிக்கொண்டிருக்கிறான்... அனைத்துத் தண்ணீர்களுக்கு அருகிலும் ஈன்கள் விதைக்க வேண்டும்.Mar 31.5

    உங்களது உழைப்பின் பலனை உடனடியாகக் காண முடியாமல் இருக்கலாம்; ஆனால், இக்காரியமானது உங்களை அதைரியப்படுத்தக்கூடாது. இயேசுவை உங்களுக்கு முன் மாதிரியாக வைத்துக் கொள்ளுங்கள். ஏராளமான மக்கள் அவருடைய அருளுரைகளைக் கேட்டார்கள்; ஆனால் வெகு சிலரே பின்பற்றினார்கள்...”Mar 31.6

    அந்தத் தூதுவர் தொடர்ந்து பின்வருமாறு கூறினார்: இந்தக் காலத்திற்குரிய ஊழியம்பற்றி ஒரு வரையறைக்கு உட்பட்ட கருத்துக்களையே நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்கள். உங்களது புயங்களால் அணைத்துக்கொள்ளத்தக்கதாக, அதற்கு ஏற்ற பிரகாரம் திட்டமிட முயற்சிக்கின்றீர்கள். உங்களது கருத்துக்கள் விசாலமானவைகளாக இருக்கவேண்டும். உங்களது வெளிச்சத்தைக் கட்டிலுக்கு அடியிலோ, மரக்காலிற்கடியிலோ மறைத்து வைத்துக் கொள்ளக்கூடாது. வீட்டிலிருக்கும் அனைவருக்கும் வெளிச்சம் கிடைக்கத்தக்கதாக, ஒரு விளக்குத் தண்டின்மேல் வைக்க வேண்டும். உங்களது இல்லமே உலகம்...Mar 32.1

    “அநேக நாடுகளிலுள்ள மக்கள், ஆண்டவர் அவர்களுக்காக வைத்திருக்கிற மிகவும் மேலான வெளிச்சத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களது விசுவாசம் எல்லைக்கு உட்பட்டு மிகவும் குறைவாக இருக்கிறது. ஊழியத்தைக் குறித்த உங்களது கருத்து மேலும் மிகப் பெரிய அளவில் விரிவாக்கப்பட வேண்டும்.. முன்னேறிச் செல்லுங்கள். தேவனுக்கு முன்பாக எல்லாத் தாழ்மையோடும் நடந்துகொள்வீர்களானால், தேவன் மாபெரும் வல்லமையோடு கிரியை செய்வார். செயல்படுத்தக்கூடாத காரியங்களென்று அவைகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருப்பது விசுவாசமல்ல. தேவனால் முடியாத காரியம் எதுவும் இல்லை. தேவனுடைய பிரமாணம் கட்டுப்படுத்துகிறது என்ற கோரிக்கைபற்றிய வெளிச்சமானது உலகத்தைச் சோதிப்பதற்காகவே...”Mar 32.2

    நேரம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்தத் தூதை விசுவாசிக்கின்ற அனைவரும், ஒரு பயபக்தியான கடமை தங்கள் மீது வைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து, தன்னலமற்ற ஊழியர்களாக இருந்து, சரியான பக்கத்தில் தங்களது செல்வாக்கை பயன்படுத்தவேண்டும். தேவனுடைய ஊழியம்பற்றிய காரியங்களில் முன்னேறிச்செல்ல முயல்பவர்களுக்கு விரோதமாக வார்த்தையிலாவது, அல்லது செயலிலாவது எதிர்த்து நிற்கும் அணியில் ஒருபோதும் காணப்படக்கூடாது... இந்த சத்தியமானது, உலக மக்களுக்கு முன்பாக வைக்கப்படுவது, காணப்பட்டாலொழிய, தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் வெளிச்சம், அந்தப் பயனைக் கொடுக்க முடியாமற் போய்விடும்.⋆Mar 32.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 32.4

    “கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக் கொள்ளாதபடி காப்பார்.” - நீதிமொழிகள் 3;26.Mar 32.5