Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அமெரிக்காவில் தேவனுடைய பிரமாணம் அவமதிக்கப்படல்!, ஜூன் 20

    “நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.” - சங்கீதம் 119:126.Mar 341.1

    ஒரு காலம் வந்துகொண்டிருக்கிறது. அச்சமயத்தில் ஒரு குறிப்பிட்ட தன்மையிலே நமது நாட்டிலே (U.S.A) தேவனுடைய பிரமாணமானது வெறுமையாக்கப்பட்டுவிடும். நமது நாட்டை ஆள்பவர்கள் சட்டசபைகளில் சட்டங்களை இயற்றி, ஞாயிறு ஆசரிப்பை நடைமுறைப்படுத்துவார்கள்; இவ்வாறாக, தேவனுடைய மக்களை மாபெரும் இன்னலுக்கு உள்ளாக்குவார்கள். மக்களுடைய மார்க்கசம்பந்தமான சிறப்பு உரிமைகளைக்குறித்த காரியத்தில் ஞாயிறு ஆசரிப்பை நடைமுறைப்படுத்தி, ஏழாம் நாளில் ஓய்வு நாளைக் கைக்கொள்கிறவர்களுக்கு விரோதமாக, ஒடுக்குகின்ற வல்லமையை அனுமதித்து, மனிதரின் மனசாட்சியை கட்டிப் போடுவதற்காக, நம்முடைய நாடு (U.S.A) அதின் சட்டசபைக் கூட்டங்களிலே சட்டம் இயற்றும்போது, தேவனுடைய சித்தத்தின் பிரமாணமானது. அதின் அனைத்து உள்ளார்ந்த நோக்கங்களிலும் நாட்டிலே வெறுமையானதாக ஆக்கப்பட்டுவிடும்.Mar 341.2

    தங்களது சொந்த மனசாட்சியின் கட்டளைகளுக்கு ஏற்றபடி தொழுதுகொள்ளவும், சர்வவல்லவரின் கேடகமானது அநேக ஆண்டுகளாக விரிவெல்லையாக மேலே படர்ந்து காக்கப்படவும், இயேசுவின் தூய்மையான மார்க்கத்தின் சேமிப்பின் காப்பாளராக ஆதரவு கொடுத்து அமைக்கப்பட்டதுமான நாடானது, தனது சட்டமன்ற உறுப்பினர்கள்மூலமாக தேவனுடைய பிரமாணத்திலே குறுக்கிட்டு, மாற்றங்களை ஏற்படுத்தி, ரோமாபுரியின் மருள விழுகைக்கு உடன்பாடு தெரிவித்து, புரொட்டஸ்டாண்டு கொள்கைகளை ஒழித்துக்கட்டும்; அப்பொழுது, பாவமனிதனின் இறுதி வேலையானது வெளிப்படும். புரொட்டஸ்டாண்டுகள் தங்களது முழு செல்வாக்கையும் சக்தியையும் பாப்புமார்க்கத்தின் ஆதரவிற்காகக் கொடுப்பார்கள்; மேலும், ரோமாபுரியின் கேடடைந்த விசுவாசத்திற்கு ஆற்றலையும் புதிய ஜீவனையும் கொடுத்து, போலியான ஒய்வுநாளை நாட்டின் சட்டத்தின்மூலமாக நடைமுறைப்படுத்துவார்கள்; மேலும், ரோமாபுரியின் கொடுமைக்கு மீண்டும் புத்துயிரூட்டி, மனசாட்சியை ஒடுக்கி அடக்குவார்கள்; பின்பு, அதுவே அவரது சத்தியத்தை மெய்ப்பித்துக்காட்டத்தக்கதாக, மகா வல்லமையோடு தேவன் செயல்படுவதற்கான நேரமாக அமையும்.Mar 341.3

    தீர்க்கதரிசி பின்வருமாறு கூறுகிறார்: “இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது!...பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்” (வெளி. 18:1,2,4,5) என்றான்.. அவளுடைய பாவங்கள் எப்பொழுது வான பரியந்தம் எட்டுகிறது? தேவனுடைய பிரமாணமானது சட்டத்தின் மூலம் வெறுமையானதாக ஆக்கப்படும்போது, அவ்வாறு நடக்கும். தேவனுடைய மக்களின் இக்கட்டு நேரமானது, இந்த வானத்திற்கும் பூமிக்கும் யார் ஆளுநர் என்பதைக் காட்டும் ஒரு சந்தர்ப்பமாகிறது. அடிமட்டத்திலிருக்கும் மூலக்கூறுகளை ஒரு சாத்தானிய வல்லமையானது கிளரிவிடும்போது, சத்தியத் தூதானது உலகம் முழுவதும் கூறியறிவிக்கப்படத்தக்கதாக, தேவன் தமது மக்களுக்கு வெளிச்சத்தையும் வல்லமையையும் அனுப்புவார்.⋆Mar 342.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 342.2

    “மனுஷருக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்படுவான்” - நீதிமொழிகள் 29:25.Mar 342.3