Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பெரிய பட்டணங்களைவிட்டு வெளியேறுவதற்கான அடையாளம்!, ஜூன் 21

    “மேலும், பாழாக்குகிற அவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக் கடவன். நீங்கள் அதைப் பரிசுத்தஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப் போகக்கடவர்கள்.” - மத்தேயு 24:15,16.Mar 343.1

    ஆரம்பகால சீடர்களைப்போல, பாழான-தனிமையான இடங்களில் ஒரு அடைக்கலத்தை நாம் கட்டாயமாக நாடித் தேடுவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. யூதேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு, ரோமப் படைகளால் எருசலேம் முற்றுகையிடப்படுவதே, ஓடிப்போவதற்கான ஒரு அடையாளமாக இருந்தது. பாப்பானவரின் ஓய்வுநாளை நடைமுறைக்குக் கொண்டுவர இயற்றப்படும் சட்டத்திலே, நமது நாடு (U.S.A.) தானாக அதிகாரத்தை எடுத்துக்கொள்வது, நம் அனைவருக்கும் ஒரு எச்சரிப்பின் செய்தியாக இருக்கும்; அதுவே, நாம் பெரிய பட்டணங்களைவிட்டுச் செல்லவும், அதன் பின்னர் மலைகளுக்கு மத்தியில் தனியாக அமைந்திருக்கும் ஓய்வுபெற்றோர் இல்லங்களுக்கும் செல்லவேண்டும்.Mar 343.2

    பட்டணங்களை மையமாகவைத்து, நமது வேலைகள் ஆரம்பிக்கப் படக்கூடாது என்ற காரியத்தில், ஒரு விசேஷித்த வெளிச்சமானது பல ஆண்டுகளாக எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டணங்களில் நிறைந்து காணப்படும் கலவரங்கள், குழப்பங்கள், தொழிற்சங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவைகளால் கொண்டுவரப்படும் நிலைமைகள், நமது வேலைக்கு மாபெரும் தடங்கலாக இருக்கும் என்பதை நிரூபிக்கும். பலவிதமான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறவர்களை சிறு தொழிற்சங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடவேண்டுமென்று மனிதர் முயற்சிக்கிறார்கள். இது தேவனுடைய திட்டம் அல்ல. இது வேறு ஒரு வல்லமையின் திட்டமாக இருக்கிறது. இதை நாம் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. தேவனுடைய வார்த்தை நிறைவேறிக் கொண்டிருக்கிறது. துன்மார்க்கர் தாங்கள் எரிக்கப்படுவதற்கு ஆயத்தமாக, தங்களைக் கட்டுகளாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.Mar 343.3

    இந்த தொழிற்சங்கங்களுக்கும் உலகின் நேச கூட்டுறவு அமைப்புகளும் ஒரு கண்ணியாக இருக்கிறது. சகோதரரே, அவர்களைவிட்டு விலகியிருக்கள்; அவர்களைவிட்டு வெகுதூரத்திலே இருங்கள; அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம். இத்தகைய தொழிற்சங்கங்களாலும், நேச கூட்டுறவு அமைப்புகளாலும் நமது நிறுவனங்கள் பட்டணங்களில் வேலைசெய்வது வெகு சீக்கிரத்தில் மிகக் கடினமாகிவிடும். பட்டணத்தைவிட்டு வெளியேறி, நாட்டுப்புறங்களில் வசிக்கத்தக்கதாக, நமது மக்களுக்குக் கற்றுக்கொடுங்கள். தங்களுக்காகவும் தங்களது பிள்ளைகளுக்காகவும் அங்கு ஒரு சிறு துண்டு நிலத்தை வாங்கி, வீட்டைக் கட்டிக்கொள்ளலாம்.Mar 344.1

    இதற்கு முன்பாக, கலகங்களும் குழப்பங்களும் பட்டணங்களில் நிறைந்துவிடும். அதைவிட்டு வெளியேற விரும்புபவர்கள் வெளியேற முடியாது. தேவனுடைய நாமத்தை கனப்படுத்தாதவர்களோடு, நாம் நெருங்கிய தொடர்புவைத்துக்கொள்ளத்தக்கதான கட்டாய நிலை ஏற்படும் இடங்களில், நாம் வீடுகட்டி வசிக்கக்கூடாது… ஞாயிறு ஆசரிப்பைப்பற்றிய காரியத்தில் ஒரு நெருக்கடி சீக்கிரத்தில் வரவிருக்கிறது…Mar 344.2

    ஞாயிறு ஆசரிப்பு கூட்டமானது தனது பொய்யான கோரிக்கைகளில் தன்னைப் பலப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆண்டவரின் ஓய்வுநாளை கைக்கொள்ளவேண்டுமென்று தீர்மானிப்பவர்களுக்கு இந்தக் காரியமானது, ஒடுக்கப்படுதல் என்ற நிலையில் வெளிப்படும்…தேவனுடைய முன்னறிவின் திட்டத்தால், பட்டணங்களை விட்டு வெகுதூரத்தில் நாம் தங்குமிடம் பெற்றுக்கொள்ளக் கூடுமானால், அதைச் செய்வதற்காக ஆண்டவர் நமக்குத் துணை நிற்பார். துன்பமான காலம் நமக்கு முன்பாக இருக்கிறது.⋆Mar 344.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 344.4

    “அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.” - சங்கீதம் 19:11.Mar 344.5