Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஞாயிறு ஆசரிப்புச்சட்டம் கொண்டுவரப்படல்!, ஜூன் 27

    “…என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” - மத்தேயு 24:9.Mar 355.1

    ஞாயிறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் இயக்கமானது மிகுந்த துணிகரத்தோடும் தீர்மானத்தோடும் செயல்படுகிற பொழுது, கற்பனைகளைக் கைக்கொள்வோர்க்கு விரோதமாக சட்டம் இயற்றப்படும். அபராதங்கள் மற்றும் சிறைவாசம் ஆகியவைகளால் பயமுறுத்தப்படுவார்கள். சிலருக்கு செல்வாக்கு மிகுந்த பதவிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு வெகுமதிகளும் சில நன்மைகளும் அவர்களது விசுவாசத்தை விட்டுவிடத்தக்கதாக, கவர்ச்சியான தூண்டுதல்களும் கொடுக்கப்படும்; ஆனால், “தேவனுடைய வார்த்தையினின்று எங்களுடைய தவறைச் சுட்டிக்காட்டுங்கள் என்பதே அவர்களது ஊறுதியான பதிலாக இருக்கும்.”… நீதிமன்றங்களுக்கு முன்பாகக் குற்றஞ்சாட்டப்படுகிறவர்கள், சத்தியத்தைப்பற்றி இதுதான் ஒரு உறுதியான கொள்கை என்று விளக்கிக் கூறுவார்கள். இந்தப் பதிலைக் கேட்கின்ற சிலர் தேவனுடைய அனைத்துப் பிரமாணங்களையும் கைக்கொள்ளத்தக்கதாக உறுதியாக நிற்பதற்கு வழிநடத்தப்படுவார்கள்; இவ்வாறு, சத்தியமானது அநேகமாயிரம் மக்களுக்கு முன்பாகக் கொண்டுவரப்படும். இப்படிப்பட்டவர்களுக்கு மற்றபடி வேறு எந்த வழியிலும் சத்தியத்தைப்பற்றி அறியமுடியாது.Mar 355.2

    மனசாட்சியின்படி தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிதலானது, கலகஞ்செய்ததாகக் கருதப்படும். சாத்தானால் குருட்டாட்டத்தில் அகப்பட்டு, இந்த சத்தியத்தை விசுவாசிக்கின்ற பிள்ளையை, பெற்றோர் வெறுப்போடும் கடுமையோடும் நடத்துவார்கள். வீட்டெஜமான் அல்லது எஜமாட்டி கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற வேலைக்காரனை ஒடுக்குவான் அல்லது ஒடுக்குவாள்; பாசம் முறிந்து போய்விடும்; பிள்ளைகளுக்கு மரபுரிமையின்படி வரவேண்டிய சொத்து மறுக்கப்பட்டு, வீட்டை விட்டு விரட்டப்படுவார்கள். பவுலாரின் பின்வரும் வார்த்தைகள் அப்படியே நிறைவேறுதலையடையும். “அன்றின் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” - 2 தீமோ. 3:12. சத்தியத்தின் காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாளை கனப்படுத்த மறுக்கும் பொழுது, சிலர் சிறைக்குள் தள்ளப்படுவார்கள்; சிலர் நாடு கடத்தப்படுவார்கள்; சிலர் அடிமைகளாக நடத்தப்படுவார்கள்…Mar 355.3

    இந்த உபத்திரவத்தின் நேரத்திலே, ஆண்டவருடைய ஊழியக்காரர்களின் விசுவாசம் பரிசோதிக்கப்படும். அவர்கள் தேவனையும் அவரது வார்த்தைகளையும் நோக்கிப்பார்த்தவர்களாக உண்மையோடும், உத்தமத்தோடும் எச்சரிப்பின் செய்தியைக் கொடுத்துவிட்டார்கள். அவர்களது இதயங்களில் தேவ ஆவியானவர் அசைவாடியதால், பேசும்படி அவர்களை வலுக்கட்டாயமாக ஏவினார். எனினும், எதிர்ப்பு, அவதூறு ஆகிய புயல்கள் சீறிப்பாய்ந்த போது, சிலர் பயத்தினால் மேற்கொள்ளப்பட்டு, “நாங்கள் கொடுத்த எச்சரிப்பின் வார்த்தைகளின் விளைவுகளை அறிந்திருந்தோமானால், நாங்கள் அமைதிகாத்திருப்போம் என்று கூக்குரலிட்ட ஆயத்தமாயிருப்பார்கள். இக்கட்டுகளால் அவர்கள் சூழப்பட்டார்கள். சாத்தான் கொடிய சோதனைகளால் அவர்களை முனைந்து தாக்குகிறான். தாங்கள் ஏற்றுக் கொண்ட பணியானது, நிறைவேற்றமுடியாத அளவிற்கு அவர்களது திறமைக்கு மிகவும் அப்பாற்பட்டதுபோன்று தோன்றுகிறது; அழிவைச் சந்திக்க நேரிடும் என்று பயமுறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு உயிரூட்டிய ஆர்வம் எங்கோ போய்விட்டது; எனினும், அவர்கள் திரும்பிச் செல்ல முடியாது; தங்களது முற்றிலும் உதவியற்ற நிலைமையை உணர்ந்து, வல்லமையை பெற்றுக்கொள்ளத்தக்கதாக, மகா வல்லமையுடைய அந்த ‘ஒருவரிடத்திற்கு’ ஓடினார்கள்.”⋆Mar 356.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 356.2

    “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுன்டு” - பிலிப்பியர் 4:13.Mar 356.3