Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இரண்டு மாபெரும் கிறிஸ்தவப் பிரிவுகள்!, ஜூன் 29

    “அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோட அந்த மிருகத்தைப் பின்பற்றி…” -வெளிப்படுத்தல் 13:3.Mar 359.1

    பாப்பானவரின் அதிகாரத்திற்கு வணக்கஞ்செலுத்தும் காரியத்தில் (U.S.A.) அமெரிக்க ஐக்கிய நாடு தனித்துச் செயல்படாது. முன்பு ரோமாபுரியின் ஆளுகையை ஏற்றுக்கொண்டிருந்த நாடுகளின்மீது ரோமாபுரியின் செல்வாக்கானது இன்னமும் ஒழிந்து போகவில்லை.Mar 359.2

    இறுதிப்போராட்டத்தில் ஓய்வுநாளே (Sabbath) கிறிஸ்தவ உலகம் முழுவதிலும் போராட்டத்தின் முக்கிய பொருளாக இருக்கும். ஞாயிறு ஆசரிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியல் ஆளுநர்களும் மார்க்கசம்பந்தமான தலைவர்களும் இணைவார்கள். மென்மையான (கடுமையற்ற) வழிமுறைகள் தோற்றுப் போகும் பொழுது, மிகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும். சபையின் ஒரு அமைப்பிற்கும் நாட்டின் சட்டத்திற்கும் எதிராக நிற்பவர்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமுடியாது என்ற காரியமானது, வற்புறுத்தப்படும். பழைய உலகின் ரோமானியக் கொள்கையும், சேர்ந்து, தெய்வீகக் கட்டளைகளை மதிப்பவர்களிடத்தில் ஒரே விதமான வழிமுறையைப் பின்பற்றுவார்கள்.Mar 359.3

    கிறிஸ்தவ உலகம் என்று இவ்வாறு அழைக்கப்படும் பகுதியானது, மாபெரும் தீர்மானிக்கும் ஆற்றலுள்ள செயல்களுக்கான அரங்கமாக இருக்கும். பாப்பானவரின் முன்மாதிரியைப் பின்பற்றி, மனசாட்சியைக் கட்டுப்படுத்துவதற்காக, அதிகாரப் பீடத்தில் இருக்கும் மனிதர் சட்டங்களை இயற்றுவார்கள். பாபிலோன் தனது வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை சகல ஜாதிகளையும் குடிக்க வைப்பாள். அனைத்து நாடுகளும் இக்காரியத்தில் ஈடுபட்டிருக்கும் (வெளிப்படுத்தல் 18:3-7).Mar 359.4

    வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரத்தில், மூன்றாம் தூதன் கொடுக்கும் எச்சரிப்பானது, வானத்தின் மத்தியிலே ஒரு தூதன் பறந்து, உரத்த சத்தத்தோடு செய்தியைக் கூறியறிவிப்பது போன்று, தீர்க்கத்தரிசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, உலகத்தின் முழுக்கவனத்தையும் ஆட்கொள்ளும்.Mar 360.1

    இந்தப் போராட்டத்தின் முக்கியக் காரியத்திலே கிறிஸ்தவ உலகம் முழுவதும் இரண்டு மாபெரும் பிரிவுகளாகப் பிரியும். ஒரு வகுப்பினர், தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொண்டவர்கள்; அடுத்த வகுப்பார், மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கி, அதின் முத்திரையைத் தரித்துக்கொண்டவர்கள். சபையும் அரசாங்கமும் தங்களது வல்லமைகளை இணைத்து, சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள்” (வெளி. 13:16) அனைவரையும் “மிருகத்தின் முத்திரையை”ப் பெற்றுக் கொள்ளும்படிக் கட்டாயப்படுத்தும்; எனினும், தேவனுடைய மக்கள் அதைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். “அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங் கொண்டவர்கள், தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்” அவர்கள் மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடினார்கள் என்பதை பத்மு தீவிலிருந்த தீர்க்கதரிசி காண்கிறார் —வெளி. 15:2,3.⋆Mar 360.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 360.3

    “நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும், கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்தி விடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.” - உபாகமம் 6:18,19.Mar 360.4