Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அநேக குரல்கள் உருவாக்கும் குழப்பம்!, ஜூன் 30

    “பின்பு, வேறோரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனxங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” - வெளிப்படுத்தல் 18:4.Mar 361.1

    உலகத்தை எச்சரிக்கும் இந்தக் கடைசி ஊழியத்தில், சபைகளுக்கு இரண்டு தெளிவான அழைப்புகள் கொடுக்கப்படுகின்றன. இரண்டாம் தூதனின் தூதானது, “வேறொரு தூதன் பின் சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே!” (வெளி. 14:8) என்பதாகும். மூன்றாம் தூதனின் தூதிலுள்ள உரத்தசத்தத்திலே பின்பு வானத்திலிருந்து வேறோரு சத்தம் உண்டாகி, அது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்; அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது. அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்” - வெளி. 18:4.5Mar 361.2

    ஓய்வுநாளைக் கைக்கொள்ளத்தக்கதாக, தேவன் இஸ்ரவேல் புத்திரரை எகிப்தினின்று வெளியேற்றியதுபோல, மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்காதபடி, பாபிலோனைவிட்டு வெளியே வாருங்கள் என்று தமது மக்களை அழைக்கின்றனார்...Mar 361.3

    அனைத்து நாடுகளிலும் இந்த சத்தியமானது சாட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னர், எண்ணிப்பார்க்கத்தக்கதான ஒவ்வொரு தீயசக்தியும் செயல்பட ஆரம்பிக்கும். “இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார் என்றும், இதோ, கிறிஸ்து அங்கே இருக்கிறார் என்றும், மேலும் இதுவே சத்தியம், தேவனிடம் இருந்து வந்த செய்தி என்னிடத்தில் இருக்கிறது; மாபெரும் வெளிச்சத்தை என்னிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்” என்று தொனிக்கும் குரல்கள் மக்களது உள்ளங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். சபையின் முக்கியக்கொள்கைகள், நிகழச்சிகள் அகற்றப்படும். விசுவாசத்தின் தூண்களை அடித்துநொறுக்க முயற்சிகள் எடுக்கப்படும். பொய்யான ஓய்வுநாளை உயர்த்திக்காட்டி, அவர் ஆசீர்வதித்து பரிசுத்தமாக்கிய அந்த நாளிற்குப் பதிலாக, வேறொரு நாளை நியமிப்பதின்மூலம் தேவன்மீது நிந்தனை கூறப்படத்தக்கதாக பொய்யான ஒய்வுநாள் கடுமையான ஒரு சட்டத்தின்மூலம் நடைமுறைப்படுத்தப்படும்… சாத்தான் தனது பொய்யான அற்புதங்களைச் செய்யும்பொழுது, வெளிப்படுத்தல் புத்தகத்தில் முன்னறிவிக்கப்பட்ட நேரம் நிறைவேறுதலை அடையும். பூமியை தனது மகிமையினால் நிரப்புகின்ற அந்த மகா வல்லமையுள்ள தூதன், பாபிலோனின் விழுகையைக் கூறியறிவித்து, அவளைக் கைவிட்டு வெளியே வரச்சொல்லி, தேவனுடைய மக்களை அழைப்பான்.Mar 361.4

    எப்பொழுது அவளுடைய பாவங்கள் வானபரியந்தம் எட்டும்? தேவனுடைய பிரமாணமானது சட்டத்தின்மூலம் இறுதியிலே வெறுமையாக்கப்படும்போது, அந்தக் காரியம் நடைப்பெறும்; பின்னர் தேவனுடைய மக்களின் இக்கட்டுக் காலமானது, வானத்திற்கும் பூமிக்கும் அவரே அரசர் என்பதைக் காட்ட, அவரது சந்தர்ப்பமாக அமையும். ஒரு சாத்தானிய வல்லமையானது பூமிக்கு அடியிலுள்ள மூலகங்களை கிளர்ந்தெழச்செய்யும் போது, உலக முழுவதும் சத்தியத்தின் தூதானது கூறியறிவிக்கப் படத்தக்கதாக, தேவன் தமது மக்களுக்கு வெளிச்சத்தையும் வல்லமையையும் அனுப்புவார்.⋆Mar 362.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 362.2

    “நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்திரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.” - உபாகமம் 30:16.Mar 362.3