Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    முன்பு நம்முடன் இருந்த சகோதரர்களே நம்மை கொடுமையாகத் துன்புறுத்துவார்கள்!, ஜூலை 7

    “அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.” - மத்தேயு 24:10.Mar 375.1

    புயல் நெருங்கிவரும்பொழுது, மூன்றாம் தூதனின் தூதில் நம்பிக்கைவைத்திருந்தும், சத்தியத்திற்குக் கீழ்ப்படியாததின் மூலமாக — பரிசுத்தமாக்கப்படாதவர்கள், தாங்கள் நின்றநிலையினின்று விலகி, எதிர் அணியினரோடு இணைந்து கொள்வார்கள். உலகத்தோடு இணைந்து, உலகத்தாரின் குணத்தில் அல்லது ஆவியில் பங்கு பெற்றவர்களாக, அவர்களைப்பால ஏறக்குறைய அதே கருத்தில் காரியங்களை நோக்கிப்பார்க்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள். சோதனை கொண்டுவரப்படும்பொழுது, இலகுவான — பொது மக்கள் சார்ந்த — பக்கத்தைத் தெரிந்தெடுத்துக்கொள்வார்கள். தாலந்துகளுள்ள, இனிமையாக அளவளாவும் பழக்கமுமுள்ள — ஒருகாலத்தில் சத்தியத்தில் களிகூர்ந்திருந்த அத்தகையோர், தங்களது வல்லமையால் ஆத்துமாக்களை ஏமாற்றி, தவறாக வழிநடத்துவார்கள். இவர்கள் தங்களது சகோதரர்களாயிருந்த (முன்பு) சபையருக்கு, மிகக் கசப்பான விரோதிகளாக மாறிவிடுவார்கள். ஓய்வுநாளை ஆசரிப்பவர்கள் தங்களது விசுவாசத்திற்கான பதிலைக்கொடுக்கும்படி நீதிமன்றங்களுக்குமுன்பாகக் கொண்டுவரப்படும்பொழுது, மருளவிழுந்துபோன இவர்கள், சாத்தானின் மிகவும் திறமியான பிரதிநிதிகளாகக் காரியங்களை திரித்துக்கூறி, குற்றஞ்சாட்டி, பொய்யான அறிக்கைகளின்மூலம், மாய்மாலஞ்செய்து, ஆளுநர்களை அவர்களுக்கு (கடவுளுடைய பிள்ளைகளுக்கு) எதிராக கிளர்ந்தெழச்செய்வார்கள்.Mar 375.2

    தேவனுடைய மக்களுக்கு முன்பாக இருக்கிற கடுந்துன்ப வேளையானது, தளராத விசுவாசம் மிகவும் அவசியமானது என்பதை எடுத்துக்கூறுகிறது. ஆண்டவர் ஒருவர் மாத்திரமே தங்களது தொழுகைக்குரியவர் என்பதை அவர்களது பிள்ளைகள் தெளிவாகக் காட்டவேண்டும். பொய்யான தொழுகைக்குத் தங்களது ஜீவனைப் பற்றிய காரியமானாலுங்கூட, எந்தவித முக்கியத்துவமோ அல்லது சலுகையோ அளிக்கும்படித் தூண்டக்கூடாது.Mar 376.1

    அந்த சமயத்திலே பொன்னிலிருந்து களிம்பு நீக்கப்படும். …நாம் வியந்து பாராட்டிய, நட்சத்திரம்போன்று பிரகாசித்த அநேகர், இருளிலே மங்கி, மறைந்து போவார்கள்.ஆசரிப்புக்கூடாரத்தின் அணிமணியாகக் கருதப்பட்டிருந்தவர்கள், கிறிஸ்துவின் நீதியினால் அணிவிக்கப்படாதிருந்தால், தங்களது சொந்த நிர்வாணத்தின் வெட்கத்தோடு காணப்படுவார்கள்.Mar 376.2

    இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும், சித்றிக்கிடக்கின்ற குடிமக்களில் பாகாலிற்குத் தங்களது முழங்கால்களை முடக்காத அநேகர் இருக்கின்றார்கள். இரவிலே மாத்திரம் பிரகாசிக்கின்ற வானத்தின் நட்சத்திரங்களைப்போல, விசுவாசமுள்ள இந்த மக்கள், இந்த பூமியை இருள் மூடும்பொழுதும், மக்களை காரிருள் மூடும்பொழுதும், ஒளிவிட்டு அதிகமாக பிரகாசிப்பார்கள்… அந்த மருள விழுகையின்போது, “சிறியோர்-பெரியோர், ஐசுவரியவான்கள்-தரித்திரர், சுயாதீனர்-அடிமைகள், யாவரும்…” (வெளி. 13:16) பொய்யான இளைப்பாறுதலின் நாளுக்கான அடையாளத்தை மரண தண்டனைக்கடியில் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, சாத்தான் தீவிர முயற்சியை மேற்கொள்ளும்போது, தேவனிடத்தில் விசுவாசமாக இருக்கும் மக்கள், “உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிப்பார்கள்” — பிலிப்பியர் 2:14. இரவின் இருள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவிற்கு அதிகமாக பிரகாசத்தோடு ஒளிர்வார்கள்.⋆Mar 376.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 376.4

    “…இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தபட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோட நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்.” - ஏசாயா 49:25.Mar 376.5