Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நண்பர்களாலும் உறவினர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுதல்!, ஜூலை 8

    “ஒரு மனுஷனுக்கு சத்துருக்கள் அவன் வீட்டாரே.” -மத்தேயு 10:36Mar 377.1

    தேவனுடய பிரமாணமானது வெறுமையாக்கப்பட்டுவிடும் போது, பூமியில் வாழ்கின்ற அனைவரையும் பரீட்சித்துப் பார்க்க்க்கூடிய, கொடிய இடர்களால் சபையானது சலிக்கப்படும்பொழுது, உண்மையானவர்களென்று இதுவரை யூகிக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலான விகிதப்படியான மக்கள், வஞ்சிக்கின்ற ஆவிகளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து, துரோகிகளாக மறுதலிப்பார்கள். நம்மை உபத்திரவப்படுத்துகிறவர்களில், அவர்கள் தான் மிகவும் கொடியவர்களென்று தங்களை நிரூபிப்பார்கள். “உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்”-அப்போஸ்தலர் 20:30. அநேகர் இந்த வஞ்சிக்கின்ற ஆவிகளுக்கு செவிகொடுப்பார்கள்.Mar 377.2

    சோதனை வேளையின்பொழுது, மருளவிழுந்துபோனவர்கள் தங்களது சொந்தப் பாதுகாப்பை பெற்றுக்கொள்ளத்தக்கதாக, பொய்சாட்சி கூறி, சகோதரரைக் காட்டிக்கொடுப்பார்கள். தங்களது சகோதரர்கள் எங்கே மறைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறி, அவர்களது பாதைகளிலே ஓநாய்களை அனுப்பிவைப்பார்கள். கிறிஸ்து இதைக்குறித்து ஏற்கனவே எச்சரித்திருக்கிறார். நண்பர்களாலும், உறவினர்களாலும், இயற்கைக்கும் மாறான கொடிய வழிமுறைகள் பின்பற்றப்படுவதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்.Mar 377.3

    இயேசு கிறிஸ்துவின் கரத்தைத் தவிர அனைத்துக் கரங்களையும் நாம் விட்டுவிடவேண்டுமென்பதை நாம் கண்டுகொள்வோம். நண்பர்கள் துரோகிகளாகி, நம்மைக் காட்டிக்கொடுப்பார்கள். சத்துருவினால் வஞ்சிக்கப்பட்டு, நாம் நமது விசுவாசத்தை விட்டு விடுவோமென்று நம்பியவர்களால், நம்மை எதிர்த்து கடினமான இடத்தில் கொண்டுவந்து நிறுத்துவதற்காக தீவிரமான முயற்சிகளை எடுத்து,அவ்வாறு செய்யப்படுவது, தேவனுக்கு செய்யப்படும் சேவை என்று எண்ணுவார்கள்; ஆனால் ஆபத்துக்கள் இருள் ஆகியவைகளுக்கு மத்தியிலும், இயேசுவின் கரத்திலே நமது கரத்தை உறுதியாக நம்பி ஒப்படைக்க வேண்டும்.Mar 377.4

    கிறிஸ்துவின் பின்னடியார்கள் ஏளனப்பேச்சுகளுக்கு எதிராகப் போராடுவதை எதிர்பார்க்க வேண்டும். அவர்கள் வையப்படுவார்கள். அவர்களது வார்த்தைகளும் விசுவாசமும் தவறாக எடுத்துக்கூறப்படும். இரத்தசாட்சியாக மரிப்பதைவிட, மக்களின் நிந்தைகளயும், புறக்கணிப்புகளையும் தாங்கிக்கொள்வது மிகக் கடினமாக இருக்கும்...Mar 378.1

    பிரபலமில்லாத இந்த சத்தியதைப் பிள்ளைகள் ஏற்றுக்கொள்கிறதினால், அவர்களுக்கு எதிராக பெற்றோர்கள் கடுமையானவர்களாக மாறுவார்கள். மனசாட்சியின்படி தேவனை சேவிக்கிறவர்கள் கலகஞ்செய்கிறவர்களாகக் குற்றஞ்சாட்டப்படுவார்கள். நிகழ்கால சத்தியத்தை விசுவாசிக்கின்ற பிள்ளைகள் பெயரிலோ அல்லது மற்ற உறவினர்கள் பெயரிலோ எழுதிவைக்கப்பட்ட சொத்துக்களின் உயில்கள் வேறு மனிதர்களின் கரங்களில் கொடுக்கப்படும். அனாதைப் பிள்ளைகளுக்காகவும், விதவைகளுக்காகவும் நியாயப்படி கொடுக்கப்பட வேண்டிய பொருட்கள் அவர்களின் பாதுகாவலர்களால் திருடப்படும். தீமையினின்று தங்களுக்கு உரிமையில்லாத சொத்துகளை தங்களுக்கென்று எடுத்துக்கொள்வார்கள். “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிறவர்கள் அனைவரும் துன்பப்படுவார்கள்” என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகள் வெகு சீக்கிரத்தில் மெய்ப்பிக்கப்படும்.⋆Mar 378.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 378.3

    “கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.” --யோசுவா 3:7.Mar 378.4