Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மரணம் என்னும் அச்சுறுத்தலக்கு அடியில்...!, ஜூலை 9

    “நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்,” என்று சொல்ல சொன்னான். - எஸ்தர் 4:14.Mar 379.1

    அதிசயமான சம்பவங்கள் உலகத்திற்கு முன்பாக வெகு சீக்கிரத்தில் நடைபெறவிருக்கின்றன. அனைத்துக் காரியங்களின் முடிவும் மிகவும் நெருங்கிவந்துவிட்டது. இக்கட்டுக்காலமானது தேவனுடைய மக்கள் மீது வரவிருக்கிறது. ஆண்டவரின் நாளைகைக்கொள்கிறவர்களை, வாங்கவும்-விற்கவும் கூடாதபடி தடை செய்யத்தக்கதாக ஒரு சட்டம் இயற்றிக் கொண்டுவரப்படும். இவ்வாறு ஓய்வுநாளை ஆசரிப்பவர்களுக்கு, அவர்கள் வாரத்தின் முதல் நாளை ஓய்வு நாளாக ஆசரிக்காவிட்டால், தண்டனை, ஏன் மரணதண்டனைகூட விதிக்கப்படுமென்று பயமுறுத்தப்படுவார்கள்.Mar 379.2

    தேவனுடைய மக்களுக்கு விரோதமாக இயற்றப்படும் சட்டமானது, எஸ்தர் ராணி காலத்தில், அகாஸ்வேரு ராஜா யூத இனத்தவருக்கு விரோதமாக பிறப்பித்த சட்டத்தைப்போன்று இருக்கும்... உண்மையான தேவனைப்பற்றிய அறிவைப் பாதுகாத்த மக்களை பூமியினின்று அழித்து ஒழிக்கத்தக்கதாக, இந்தத் திட்டத்தை சாத்தானே பின்னின்று தூண்டிவிட்டான்; ஆனால், அவனது மறைவான இந்த சதித்திட்டங்கள், மானிடரிடையே ஆளுகைசெய்து கொண்டிருக்கும் எதிரான வல்லமையினால் தோற்கடிக்கப்பட்டன.Mar 379.3

    புரொட்டஸ்டாண்டு உலகமானது, ஓய்வு நாளைக் கைக்கொள்ளுகின்ற இச்சிறு கூட்டத்தில், வாயில் கதவண்டை அமர்ந்திருக்கும் மொர்தெகாயை பார்க்கிறது. அவனது குணமும் நடத்தையும் தேவனுடைய பிரமாணத்திற்கு ஒரு பயபக்தியை வெளிப் படுத்தியது. ஆண்டவருக்கேற்ற பயத்தைத் தூர எறிந்துவிட்டு, அவரது ஓய்வுநாளை காலின் கீழ்ப்போட்டு மிதித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இது ஒரு தொடர்ச்சியான கண்டனமாக அமைந்திருந்தது. அழையாது நுழைந்திருக்கும் இந்த வேண்டாத நபரை, எந்த வழிவகையிலாவது நமது வழியினின்று விலக்கிவிட வேண்டுமென்று எண்ணப்பட்டது.Mar 379.4

    அதே ஆதிக்க மனப்பான்மையானது, கடந்த காலங்களில் உத்தமமாக இருந்தவர்களுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டியது. அதே மனம் தேவனுக்குப் பயந்து, அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களை பூமியினின்று ஒழித்துப்போடவேண்டும் என்று தொடர்ந்து முயற்சிசெய்து கொண்டிருக்கிறது. பிரபலமான பழக்கவழக்கங்களையும் பாரம்பரியங்களயும் மனச்சாட்சியினிமித்தம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற சிறுபான்மையான-தாழ்மையான-ஒரு கூட்டத்திற்கு எதிராக, சாத்தான் கோபத்தைத் தூண்டிவிடுவான். தேவனுடைய மக்களுக்கு எதிராக, மேலான பதவிகளில் இருக்கும் புகழ்பெற்ற மனிதர்கள், சட்டத்திற்கு கீழ்படியாத தீயவர்களோடு இணைந்து, ஆலோசனை செய்வார்கள்... வேதாகம ஓய்வு நாளிற்கு ஆதரவாக பரிந்துவாதாடுபவர்களுக்கு விரோதமாக்க் கொண்டுவரத்தக்கதாக, “வேதவாக்கியங்கள் இவ்வாறு கூறுகின்றன” என்று சொல்லுவதற்கு எதுவுமே இல்லாததால், அந்தக் குறைவைச் சரிப்படுத்தத்தக்கதாக, “வேதவாக்கியங்கள் இவ்வாறு கூறுகின்றன” என்று சொல்லுவதற்கு எதுவுமே இல்லாததால், அந்தக் குறைவைச் சரிப்படுத்தத்தக்கதாக, ஒடுக்குகின்ற சட்டங்களைத் தங்களது வழிமுறையாக வைத்துக்கொள்வார்கள்... இந்த யுத்தக்களத்திலே, சத்தியத்திற்கும் பொய்க்குமிடையே இருக்கும் போராட்டத்தின் மாபெரும் இறுதிக்கட்டம் வருகிறது. இந்தக் காரியத்தைக்குறித்து நாம் எந்தவித சந்தேகத்திலும் விட்டுவிடப்படவில்லை. மொர்தெகாயின் நாட்களில் செய்ததைப்போல, இப்பொழுதுங்கூட ஆண்டவர் தமது சத்தியத்தையும் தமது மக்களையும் மெய்ப்பித்துக் காட்டுவார்.⋆Mar 380.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 380.2

    “ஐயோ, அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.” - எரோமியா 30:7.Mar 380.3