Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய மக்களுக்கு வரப்போகின்ற அசைக்கப்படுதலைப்பற்றிய ஒரு தரிசனம்!, ஜூலை 12

    “.. என் உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய அதிர்ச்சி உண்டாகி..” — எசேக்கியேல் 38:18,19.Mar 385.1

    சிலர் பலத்த விசுவாசத்தோடும், கடுந்துயர் நிறைந்த கூக்குரலோடும் தேவனிடத்தில் மன்றாடுவதைக் கண்டேன். அவர்களது உள்மனப்போராட்டத்தை வெளிப்படையாகக் காட்டும்வண்ணமாக, அவர்களது முகங்கள் வெளுத்தும், மிகவும் பதற்றமடைந்தும் காணப்பட்டன. அவர்களது நெற்றிகளிளிருந்துபெரும் வியர்வைத் துளிகள் விழுந்தன...Mar 385.2

    கேடுசெய்யும் தூதர்கள் சுற்றிலும் நெருக்கிநின்று, அங்கு இருள் கவியும்படிசெய்து, இயேசுவை அவர்களது பார்வையினின்று மறைக்கும்படியாகப் பெரும் முயற்சிகள் செய்தார்கள்; அதன்மூலம், அவர்களது எண்ணங்கள் தீயதூதர்களைச் சுற்றியே இழுக்கப்பட்டு, இவ்வாறாக, அவர்கள் தேவனை நம்பாமல், அவருக்கு விரோதமாக முறுமுறுக்கும்படி அவர்கள் வழிநடத்தலாம் என முயன்றார்கள். அவர்கள் தங்களது கண்களை மேலே உயர்த்தி நோக்குவதில்தான் அவர்களது ஒரே பாதுகாப்பு இருந்தது. தேவ தூதர்களுக்கு அவர்களது மக்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்வம் உள்ள மக்களைச் சுற்றிலும், தீய தூதர்களால் நச்சு நிறைந்த சூழ்நிலை நிறைந்திருந்தபோதிலும், பரலோகத்தின் தூதர்கள் தொடர்ச்சியாக அவர்கள் மீது தங்களது செட்டைகளால் தொடர்ந்து விசிறி, அங்கிருந்த அந்தகாரத்தை சிதறடித்துக்கொண்டிருந்தார்கள்.Mar 385.3

    ஜெபித்துக்கொண்டிருக்கும்தேவனுடைய பிள்ளைகள் தொடர்ந்து உருக்கமாகக் கதறும்பொழுது, சில சமயங்களில் இயேசுவிடமிருந்து வந்த ஒளிக்கதிர்கள் அவர்கள்மீது வீசியது; இவ்வாறாக, அவர்களது இதயங்களைத் திடப்படுத்தி, முகங்களைப் பிரகாசிப்பிக்கச் செய்தார். இந்தக் கடுந்துயரிலும் மன்றாட்டிலும் சிலர் பங்குகொள்ளவேயில்லை என்பதையும் நான் கண்டேன். அவர்கள் விருப்பு வெறுப்பின்றி, கவலையற்றுக் காணப்பட்டார்கள்... தேவ தூதர்கள்... உருக்கத்தோடு ஜெபிப்பவர்களின் உதவிக்குச் சென்றார்கள்... ஆனால், தங்களைத் காப்பற்றிக் கொள்ள எந்த உதவியையும் தேட முயற்சிக்காதவர்களைவிட்டு, தேவதூதர்கள் கடந்து சென்றுவிட்டார்கள்; அதற்குப்பிறகு நானும் அவர்களைக் காணமுடியவில்லை.Mar 386.1

    நான் பார்த்த இந்த அசைவின் பொருள் என்ன என்பதை வினவினேன். லவோதிக்கேயருக்குக் கொடுக்கப்பட்ட, உண்மையுள்ள சாட்சியின் ஆலோசனையால் அழைக்கப்பட்ட, நேரடி சாட்சியினால் ஏற்படுவதுதான் இந்த அசைவு என்று எனக்குக் காட்டப்பட்டது...Mar 386.2

    வெகுவாக அசைக்கப்பட்ட ஒரு கூட்டத்தைப் பார்க்கும்படி எனது கவனம் திருப்பப்பட்டது... அவர்களைச் சுற்றிலுமுள்ள பாதுகாக்கும் தூதர்களின் கூட்டம் இருமடங்காகியது. அவர்கள் (தேவமக்கள்) தலையிலிருந்து பாதங்கள்வரை ஆயுதங்களால் தரிப்பிக்கப்பட்டிருந்தார்கள்...Mar 386.3

    ஆயுதம் தரிப்பிக்கப்பட்டவர்கள் மிகுந்த வல்லமையோடு சத்தியத்தைப் போதிப்பதை நான் கேட்டேன்; அதற்குப் பலன் இருந்தது.. இத்தகைய பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது எது என்று கேட்டேன். ஒரு தூதன் என்னை நோக்கி: “இதை ஏற்ப்படுத்தியது பின்மாரியே, தேவ சமூகத்தினின்று வந்த புதுப்பெலனும் மூன்றாம் தூதனின் உரத்த சத்தமுமாகும்”” என்று பதிலளித்தான்.⋆Mar 386.4

    வாக்குத்தத்த வசனம்: Mar 386.5

    “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்..” - ஏசாயா 54:17.Mar 386.6