Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உரத்த சத்தத்திற்கடியில் ஐக்கியமும் பிரிவினையும்!, ஜூலை 13

    “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.” - ஏசாயா 60: 1,2.Mar 387.1

    துன்ப துயரங்கள் நம்மைச் சூழும்பொழுது, நமது அணிகளிலே விலகிக்செல்லுதலும் இருக்கும்; ஐக்கியமும் இருக்கும்; இப்பொழுது, சண்டைசெய்யதற்கான ஆயுதங்களை எடுக்க ஆயுத்தமாயிருக்கின்ற சிலர், உண்மையாகவே ஆபத்து வருகின்ற வேளைகளில் அவர்கள் தாங்கள் உறுதியான கன்மலையின்மீது கட்டப்படவில்லை என்பதை வெளிப்படுத்திவிடுவார்கள்; அவர்கள் தங்களைச் சோதனைக்கு ஒப்புக்கொடுத்துவிடுவார்கள். சிலர் ஏராளமான வெளிச்சத்தையும் அருமையான சலுகைகளையும் பொற்றிருந்தபோதிலும், அவைகளை பெருகச்செய்யாமலிருந்து விட்டதால், ஏதாவது ஒரு அல்லது, வேறொரு சாக்குப்போக்கைச் சொல்லி, நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்கள். சத்தியத்தின் மீதுள்ள அன்பை அவர்கள் பெற்றுக்கொள்ளாததினால், சத்துருவின் வஞ்சகங்களினால் அவர்கள் இழுத்துக்கொள்ளப்படுவார்கள். வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் கொள்கைகளுக்கும் செவி கொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்; ஆனால. வேறுவகையாகப் பார்க்குமிடத்து, காரியம் பின்வருமாறு இருக்கும்; அதாவது, உபத்திரவம் எனப்படும் புயல் நம்மை மோதித் தாக்கும் பொழுது, உண்மையான ஆடு தனது உண்மையான மேய்ப்பனின் குரலைக் கேட்கும். இழக்கப்பட்டுப்போனவர்களை மீண்டும் கொண்டுவருவதற்காக, சுயத்தை மறுக்கும் முயற்சிகள் மிகுதியாகச் செய்யப்படும். சபையினின்று விலகி, வழிதப்பித்திரிந்த அநேகர், அந்த மாபெரும் மேய்ப்பனைப் பின்பற்றுவதற்காக, மீண்டும் திரும்பி வருவார்கள். தேவனுடைய மக்கள் ஒன்றாக இணைந்து, சத்துருவிற்குமுன்னர் ஒரு ஐக்கியமுள்ள கூட்டணியாக உருவாகி நிற்பார்கள். சாதாரணமாகக் காணப்படுகிற ஆபத்துகளினிமித்தம் மேலாதிக்கஞ்செலுத்தவேண்டுமென்பதற்காக ஏற்படும் சச்சரவுகள் நின்றுபோகும். யார் பெரியவராக மதிக்கப்படவேண்டுமென்பது குறித்து எந்தவிதமான சண்டையும் இருக்காது. உண்மையான விசுவாசிகளில் ஒருவர்கூட, ” நான் பவுலைச் சேர்ந்தவன் என்றும், நான் அப்பல்லோவைச் சேர்ந்தவனென்றும், நாம் கேபாவைச் சேர்ந்தவனென்றும்” கூறமாட்டன். ” நான் கிறிஸ்துவை விடாது பற்றிக்கொண்டிருக்கிறேன். அவரை என் சொந்த இரட்சகராக வைத்து அவரில் களிகூருகிறேன்” என்பதை அவர்களது சாட்சியாக இருக்கும்.Mar 387.2

    மூன்றாம் தூதனின் தூதானது, ஒரு உரத்தசத்தமாக பெருக்கமடையும்போது, அந்த அறிவிப்பானது, மகா வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் செய்யப்படும். தேவ மக்களின் முகங்கள் பரலோக வெளிச்சத்தால் பிரகாசிக்கும்.Mar 388.1

    அரசாங்கத்தில் ஆளுகைசெய்பவர்களில் அநேகர் சாத்தானின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் மத்தியிலும் தேவனுடைய பிரதிநிதிகள் உண்டு; எனினும், இனியும் சிலர் சத்தியத்திற்காக மனந்திரும்பவிருக்கிரார்கள்... தேவனுடைய பிரதிநிதிகளில் ஒரு சிலர் தீமையின் மாபெரும் தொகுதியையே நொறுக்கித் தள்ளிப்போடும் வல்லமை உடையவர்களாக இருப்பார்கள்; இவ்வாறு மூன்றாம் தூதனின் தூது அதன் பணியை முடிக்கும்வரை, இந்த வேலை தொடர்ந்து நடைபெறும்; பின்னர், அந்த மூன்றாம் தூதினின் உரத்தசத்தத்திலே இந்தப் பிரதிநிதிகளுக்கு சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அவர்களில் சிலர் மனமாற்றமடைந்து, இக்கட்டுக் காலத்திலே பரிசுத்தவான்களோடு துன்பத்தை அனுபவிப்பார்கள்.⋆Mar 388.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 388.3

    “... அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.” — சங்கீதம் 91:4. Mar 388.4