Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    குணமானது ஆத்துமாவின் ஒரு தனி இயல்பு!, ஆகஸ்டு 3

    “பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துக்களைப் பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.” - யோபு 28:18.Mar 429.1

    இந்த உலகினின்று அடுத்த உலகிற்கு நாம் எடுத்துச்செல்லக்கூடிய ஒரே பொக்கிஷம், தெய்வீக சாயலிற்கு ஏற்றப்படி உருவாக்கப்பட்ட குணமேயாகும். இந்த உலகத்திலே கிறிஸ்துவின் போதனைக்கடியில் இருப்பவர்கள் பரலோக மாளிகைகளுக்கு தெய்வீக முயற்சியால் அடைந்த தேர்ச்சிப் பேறுகள் அனைத்தையும் தங்களுடன் எடுத்துச் செல்வார்கள்., பரலோகத்திலும் நாம் தொடர்ந்து மேம்பாடடைந்து கொண்டிருக்க வேண்டும்.Mar 429.2

    மனதின் திறனும் கூர்மதியும் குணமல்ல. பொதுவாக இப்படிப்பட்டவைகளை உடைமையாகப் பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும் நல்ல பண்பிற்கு எதிர்மாறானவர் களாகவே இருப்பார்கள். புகழானது குணமல்ல; உண்மையான குணம் ஆத்துமாவின் ஒரு தனித்தன்மையாக, அந்த நபரின் நடத்தையிலே தன்னை வெளிப்படுத்துகிறது.Mar 429.3

    ஒரு நல்ல குணமானது, தங்கத்தையோ அல்லது வெள்ளியையோவிட அதிக மதிப்புடைய ஒரு முதலீடுபோன்று இருக்கிறது. திடீர் அச்சங்கள், தோல்விகள் ஆகியவைகளால் பாதிக்கப்படுகிறதில்லை. பூமிக்கடுத்த பொக்கிஷங்கள் அடித்துக்கொண்டு போகப்படும் அந்த நாளிலே, அந்த நல்ல குணமானது வலிமை வாய்ந்த பயன்களைக் கொண்டுவரும். நேர்மை, மனத்திடம், விடாமுயற்சி ஆகிய குணங்களை ஊக்கத்தோடு பேணிவளர்த்து உருவாக்க முயற்சிசெய்ய வேண்டும். இந்தக் குணங்களை உடையவரை, எதிர்க்கமுடியாத வல்லமையால் அவருக்கு எது அணி செய்கிறது. இந்த வல்லமையானது நன்மை செய்வதற்கும், தீமையை எதிர்த்து நிற்பதற்கும், இன்னல்களைத் தாங்கிக்கொள்வதற்கும் வலிமைவாய்ந்தவர்களாக மாற்றுகிறது.Mar 429.4

    குணத்தின் வலிமையில் இரண்டு காரியங்கள் அடங்கியிருக்கின்றன; அதாவது, அவை சித்தத்தின் வல்லமை, சுயக்கட்டுப் பாட்டின் வல்லமை ஆகியவைகளாகும். வலுவான — அடக்கியாளக்கூடாத நிலையிலுள்ள இச்சையை அநேக வாலிபர்கள் வல்லமை வாய்ந்த குணமென மதிப்பீடுசெய்கிறார்கள். எந்த நபர் தனது இச்சைகளால் அடக்கி ஆளப்படுகிறாரோ, அவர் ஒரு பலவீனமான மனிதர் என்பது உண்மையாகும். உண்மையாகவே ஒரு மனிதனின் மேன்மையும் பெருந்தன்மையும் அவரது உணர்ச்சிகளின் வல்லமையாக அவரைக் கட்டுப்படுத்துவதில் அடங்கியிராமல், அவரது உணர்ச்சிகளை அவர் எப்படிக் கட்டுப்படுத்துகிறார் என்பதை வைத்தே அளவிடப்படுகிறது. தன்மேல் கூறப்படும் நிந்தனைகளை நுட்பமாக உணர்ந்துகொண்டபோதிலும், தனது உணர்ச்சிகளை கீழ்ப்படுத்தி, விரோதிகளை மன்னிப்பவரே மிகவும் பெலமுள்ள மனிதர் ஆவார். இன்றைய வாலிபர்கள் தங்களது உடைகளிலும் நடையுடை பாவனைகளிலும் உலக நாகரீகத்தைப் பின்பற்றுகிறார்கள். அன்புகொள்ளத்தக்கதான மனநிலையும் அழகிய நற்குணமும் உடையவர்களாயிருத்தல் முக்கியமானது என்று கருதப்படுமானால், சமுதாயத்திலே ஒரு மேம்பட்ட செல்வாக்கை செயல்படுத்துவதற்கு ஆயத்தமாக, சுறுசுறுப்பான வாழ்க்கையின் முன்னேற்றப்படியிலே, இன்று ஒரு வாலிபன் இருக்குமிடத்திலே, நூற்றுக்கணக்கான வாலிபர்களைக் காணலாம்.⋆Mar 429.5

    வாக்குத்தத்த வசனம்: Mar 430.1

    “புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டு விடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.” - நீதிமொழிகள் 4:13.Mar 430.2