Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கெட்ட பழக்கங்களை மேற்கொள்ளுதல்!, ஆகஸ்டு 9

    “…உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.” - 1 தீமோத்தேயு. 5:22.Mar 441.1

    மனதின் — ஆத்துமாவின் — உடலின் தூய்மையை எது அமைத்து உருவாக்குகிறது என்பதை அறிவது கல்வியின் ஒரு முக்கியப் பகுதியாகும்.Mar 441.2

    குணத்தில் தூய்மை குறைவுபடும்போது, பாவமானது குணத்தின் ஒரு பகுதியாக மாறும்போது, அதற்கு மயக்கும் ஒரு வல்லமை இருக்கிறது. அது ஒரு குவளை வெறியூட்டும் மதுபானத்திற்குச் சமானமாகும். முழு மனிதனையும் கறைப்படுத்தக் கூடிய பழக்கவழக்கங்களால் மனக்கட்டுப்பாடு, பகுத்தறிவு ஆகியவைகளின் வல்லமைகள் நிலைகுலைந்துபோகின்றன. பாவம் நிறைந்த இந்த பழக்கவழக்கங்கள் தொடருமானால், மூளையானது நிலையற்று வியாதிப்பட்டு, அதின் சமநிலையை இழந்துவிடுகிறது. இப்படிப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களாகவே சாபமாகவும், தங்களிடத்தில் தொடர்புவைத்துக்கொண்டிருக்கிற அனைவருக்குங்கூட சாபமாகவும் இருப்பார்கள்…Mar 441.3

    நல்ல பழக்கங்களைவிட, கெட்ட பழக்கங்கள் சுலபமாக அமைந்துவிடுகின்றன; மேலும், மிகக் கடும் முயற்சியோடுதான் கெட்ட பழக்கங்களை விட்டுவிடமுடியும். இதயத்தின் இயல்பான தன்மையுள்ள சீர்கேடானது, மிகவும் நன்றாகத் தெரிந்த உண்மையான காரணமாக இருக்கிறது; அதாவது, வாலிபர்களிடத்தில் அவர்களது குணங்களிலே, நிலைத்துநிற்கின்ற தூய்மையின் கேடடையாத நீதியின் குணத்தை ஊன்றச்செய்வதைவிட, கட்டுப்பாட்டை சிதைப்பதற்கும் ஒழுக்கத்திற்கான மார்க்கசம்பந்தமான கருத்துகளை கேடடையச்செய்வதற்கும் மிகக் குறைந்த அளவில் முயற்சி செய்தாலே போதுமானது. தங்குதடையற்ற இன்பத் தோய்வுகளில் ஈடுபடுதல், கேளிக்கைகளின்மீதுள்ள விருப்பம், பகைமை, பெருமை, தன் மதிப்பு, எரிச்சல், பொறாமை ஆகியவை போதனையின்றியும் முன்மாதிரியின்றியும் புறத்தூண்டுதலின்றியும் தானே வளரும். நமது விழுந்துபோன, இப்பொழுது இருக்கும் நிலையிலே மனதையும் குணத்தையும் அதின் இயல்பான தன்மைக்கு விட்டுவிட்டால், காரியங்கள் பின்வருமாறுதான் நடைபெறும்; அதாவது, இயற்கை உலகிலே ஒரு வயலை அப்படி கிடக்கும்படி விட்டுவிடுவோமானால், முள்ளும் புதரும் அதை மூடிவிடுவதை நாம் காணலாம். அது அருமையான தானியத்தையும் அழகான பூக்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கும்போது, அங்கு கவனத்தோடு இடைவிடாமல் வேலைசெய்யப்படவேண்டும்.Mar 441.4

    தீமைக்கெதிராகத் தொடர்ந்து எதிர்ப்பினை கொடுத்துக்கொண்டிருக்கவேண்டியது அவசியம் என்பதை நாங்கள் உங்களுக்கு முன்பாக வைக்கிறோம். ஆண்களும் பெண்களும் மீட்கப்பட வேண்டுமென தேவன் அத்தனை அதிகமாக அந்தக் காரியத்தை மதிப்பீடுசெய்து, அவர்களை மீட்பதற்காக தமது நேசகுமாரனை மரிக்கக் கொடுத்தார் என்ற காரியத்தில், பரலோகம் முழுவதும் அக்கறை காட்டுகிறது. இத்தகைய முன்னேற்றம், இத்தகைய தூய்மையாக்கப்பட்ட தன்மை, இத்தகைய மேன்மை ஆகியவைகளுக்கு மனிதனைப்போன்ற தகுதியுடைய நிலையில், தேவன் படைத்த எந்த உயிரினமும் காணப்படவில்லை; ஆனால், மனிதன் தனது சொந்த இழிவான இச்சைகளால் அறிவு மழுங்கி, தீய ஒழுக்கத்தில் மூழ்கிப்போனதால், ஆண்டவரின் பார்வையில் எத்தகைய நிலைக்கு உருமாறிப்போயிருக்கிறான்!Mar 442.1

    மனிதன் தான் எப்படி இருக்கலாம், எப்படி மாறிவிடமுடியும் என்று எண்ணிப்பார்க்கவே முடியாது. கிறிஸ்துவின் கிருபையின் மூலமாகத் தொடர்ந்து மனவளத்தில் முன்னேற்றமடையும் திறமை படைத்தவனாக இருக்கிறான். சத்திய வெளிச்சமானது, அவனது உள்ளத்தில் பிரகாசிக்கட்டும்; அவனது இதயத்தினின்று தேவ அன்பு வெளியே பொழியட்டும். கிருபையின்மூலமாக, அவனை ஒரு வல்லமையுள்ள மனிதனாக ஆக்குவதற்கு, பூமியின் பிள்ளையாக-ஆனால் நித்திய வாழ்வைச் சுதந்தரிக்கும் பிள்ளையாக-அவனுக்குப் பங்களிப்பதற்காகவே கிறிஸ்து மரித்தார்.⋆Mar 442.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 442.3

    “நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.” - நீதிமொழிகள் 10:29.Mar 442.4