Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    எவர்கள் முத்திரையை பெற்றுக்கொள்வார்கள்?, ஆகஸ்டு 21

    “இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.” -வெளிப்படுத்தல் 14:5.Mar 465.1

    ஜீவனுள்ள தேவனின் முத்திரையைப் பெறுபவர்கள் மாத்திரமே பரிசுத்தப் பட்டணத்தின் வாசல் வழியாகச் செல்வதற்கான பிரயாண அனுமதிச் சீட்டைப் (Pass Port) பெற்றவர்களாக இருப்பார்கள்.Mar 465.2

    குணத்திலே கிறிஸ்துவைப்போன்ற சாயலைத் தரித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு மாத்திரமே ஜீவனுள்ள தேவனின் முத்திரை வைக்கப்படும்.Mar 465.3

    மெழுகானது முத்திரையின் பதிவை எடுத்துக்கொள்வதுபோல், தேவனுடைய ஆவியானவரின் பதிவை, ஆன்மா எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவின் சாயலை தன்னகத்தே வைத்துக்கொள்ள வேண்டும்.Mar 465.4

    அநேகர் தேவனுடைய முத்திரையைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை; ஏனெனில், அவர்கள் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்கிறதில்லை; நீதியின் கனிகளைக் கொடுக்கிறதுமில்லை.Mar 465.5

    கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களில் திரளானவர்கள், தேவனுடைய அந்த நாளிலே, கசப்பான ஏமாற்றத்தைச் சந்திப்பார்கள். ஜீவனுள்ள தேவனின் முத்திரை அவர்களது நெற்றியில் இருக்காது. அவர்கள் வெதுவெதுப்பாகவும் அரைமனதோடுமிருக்கிறார்கள். அவிசுவாசிகள் என்று மற்றவர்களால் எண்ணப்படும் ஒரு நபரைவிட, இவர்கள் அதிகமாக தேவனை அவமதிக்கிறார்கள்; பிழைசெய்யாத அந்த ஒருவரின் ஆலோசனையின் அடியில், வேத வசனமாகிய நண்பகல் வெளிச்சத்திலே நடந்து கொண்டிருக்கவேண்டியவர்கள், இருளிலே தடவித்திரிகிறார்கள்…Mar 465.6

    எவர்களை ஆட்டுக்குட்டியானவர் ஜீவத்தண்னீரின் ஊற்றண்டை நடத்திச்செல்வாரோ, எவர்களது கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பாரோ, அவர்கள் தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அறிவையும், புரிந்து கொள்ளும் திறனையும் இப்பொழுது பெற்றுக்கொள்கிறவர்களாக இருப்பார்கள்…Mar 465.7

    நாம் எந்த ஒரு மானிடனையும் முன்மாதிரியாக வைத்து, அவரைப் பின்பற்றக்கூடாது. நமக்கேற்ற கட்டளை விதியாக இருக்கத்தக்க அளவிற்கு, ஞானமுள்ள ஒரு மானிடனும் இல்லை. நீதி, பரிசுத்தம் ஆகியவைகளின் பரிபூரணத்துவத்திலே முழு நிறைவைப் பெற்றவராக இருக்கிற கிறிஸ்து இயேசு என்ற பெயர் கொண்ட மனிதரை நாம் நோக்கிப் பார்க்கவேண்டும். அவரே நமது விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிறார். அவரே நமது முன்மாதிரியான மனிதனாக இருக்கிறார்; அவரது அனுபவமே நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய அனுபவத்தின் அளவாகும்; அவரது குணமே நமக்கு முன்மாதிரியான எடுத்துக்காட்டாகும். இந்த உலகில் குழப்பங்கள், பிரச்சனைகள் ஆகியவற்றினின்று மனங்களை அகற்றி, அவர்மீது நமது கண்களை பதிப்போம்; இவ்வாறு, அவரை நோக்கிப் பார்ப்பதின் மூலமாக, அவரது சாயலிற்கு நாம் மாற்றப்படுவோம். நல்ல நோக்கத்திற்காக நாம் கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்போம். பாதுகாப்போடு நாம் அவரை நோக்கிப் பார்க்கலாம்; ஏனெனில், அவர் சகல ஞானம் உடையவர்; அவரை நோக்கிப் பார்த்து, அவரைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, மகிமையின் நம்பிக்கையாகிய அவர் நம்மிலே உருவாகுவார்.Mar 466.1

    நமக்கு தேவன் கொடுத்திருக்கின்ற அனைத்து வல்லமைகளையும் உடையவர்களாக, அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரில் ஒருவராக, இருக்க முயற்சிசெய்வோம்.⋆Mar 466.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 466.3

    “…அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாய் இருப்பீர்கள்…” - 2 கொரிந்தியர் 6:18.Mar 466.4