Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய மக்களை தனிப்படுத்திக் காட்டுகின்ற அடையாளம்!, ஆகஸ்டு 24

    “நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.” - எசேக்கியேல் 20:12.Mar 471.1

    பூமிக்குரிய கானானுக்குள் பிரவேசிக்கத்தக்கதாக இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு வெளியேறியபோது, அவர்களை வேறுபடுத்திக் காட்டிய ஒரே அடையாளம் ஓய்வுநாளே. அதேபோன்று, பரலோக இளைப்பாறுதலிற்குள் பிரவேசிக்கத்தக்கதாக, தேவனுடைய மக்கள் இந்த உலகைவிட்டு வெளியேறுவதானது, இப்பொழுது மற்ற மக்களினின்று அவர்களை வேறுபடுத்திக்காட்டும் அடையாளமாகும்.Mar 471.2

    தேவன் தம்மைப்பற்றிய அறிவை பாதுகாத்து வைப்பதற்காக, தேவனால் நியமிக்கப்பட்ட வழிவகையாக இருப்பது ஓய்வுநாள் ஆசரிப்பேயாகும்; மேலும், இந்த ஓய்வுநாளானது அவரது விசுவாசமுள்ள குடிமக்களினின்று அவரது பிரமாணத்தை மீறுபவர்களை வேறுபடுத்திக் காட்டுவதுமாகும்.Mar 471.3

    ஓய்வுநாள் கிறிஸ்துவிற்குச் சொந்தமானது…அவர் அனைத்துப் பொருட்களையும் படைத்து, ஓய்வுநாளையும் உண்டாக்கினார். அவரது படைப்பின் வேளையின் ஞாபகார்த்தமாக, அவரால் ஓய்வு நாள் தனியாகப் பிரித்துவைக்கப்பட்டது. அவர் படைத்தவராகவும் பரிசுத்தமாக்குகிறவராகவும் இருக்கிறார் என்பதை ஓய்வுநாள் சுட்டிக்ககாட்டுகிறது. வானத்தையும் பூமியையும் அனைத்துப் பொருட்களையும் படைத்தவர் என்றும், அவராலே அனைத்தும் ஒன்றாக இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும், அவரே சபையின் தலைவர் என்றும், அவரது வல்லமையினாலே நாம் தேவனோடு ஒப்புரவாகிறோம் என்றும் உறுதியாகக் கூறுகிறது. ஆண்டவர் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து கூறும்பொழுது: “நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாக இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்” (எசேக்கியேல் 20:12) என்றார்; எனவே, ஓய்வுநாளானது நம்மைப் பரிசுத்தமாக்குகின்ற கிறிஸ்துவின் வல்லமைக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. கிறிஸ்து பரிசுத்தமாக்குகின்ற அனைவருக்கும், இந்த ஓய்வுநாள் கொடுக்கபடுகின்றது. அவரது பரிசுத்தமாக்கும் வல்லமைக்கு ஒரு அடையாளமாக, கிறிஸ்துவின்மூலமாக, தேவனுக்குச் சொந்தமான இஸ்ரவேலருக்குள்ளே ஒரு பங்கை வைப்பதற்காக, இப்படிப்பட்ட அனைவருக்கும் ஓய்வுநாள் கொடுக்கப்பட்டுள்ளது.Mar 471.4

    ஓய்வுநாளை கிறிஸ்துவின் படைப்பின் - மீட்பின் — வல்லமைக்கும் ஒரு அடையாளமாக ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும், அந்தநாள் ஒரு மகிழ்ச்சியாக அமைந்திருக்கும். ஓய்வு நாளிலே கிறிஸ்துவைக் கண்டு, அவரிலே அவர்கள் களிகூருகிறார்கள். மீட்பிலே அவரது மகத்தான வல்லமைக்கு ஒரு சான்றாக, படைப்பின் கிரியைகளுக்கு ஓய்வுநாள் சுட்டிக்காட்டுகிறது. ஏதேனில் இழக்கப்பட்டுப்போன சமாதானத்தை நினைவிற்குக் கொண்டுவரும்பொழுது, மீட்பரின் மூலமாக சமாதானம் மீண்டும் கொண்டு வரப்பட்டது என்பதையும் அது கூறுகிறது. இயற்கையின் ஒவ்வொரு பொருளும் அவரது அழைப்பை மீண்டும் கூறுகிறது. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” —மத்தேயு 11:28.Mar 472.1

    ஓய்வுநாளானது தேவனையும் அவரது மக்களையும் இணைக்கும் பொற்சங்கிலியின் ஒரு கண்ணியாகும்.⋆Mar 472.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 472.3

    “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில்போடுவான்; பத்து நாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உம்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்.” - வெளிப்படுத்தல் 2:10.Mar 472.4