Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆசரிப்புக்கூடாரம் சுத்திகரிக்கப்படுதல்!, ஆகஸ்டு 28

    “இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.” - தானியேல் 7:13.Mar 479.1

    நமது மீட்பர் பரமேறிய பின்னர், நமது பிரதான ஆசாரியராக தமது ஊழியத்தை ஆரம்பித்தார். அந்தப்படி மெய்யான பரிசுத்த ஸ்தலத்திற்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்தஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்தில் தானே இப்பொழுது, நமக்காக தேவனுடைய சமூகத்தில் பிரத்தியட்சமாகும்படிப் பிரவேசித்திருக்கிறார் (எபிரெயர் 9:24) என்று பவுலார் கூறினார்.Mar 479.2

    18 நூற்றாண்டுகளாக ஆசரிப்புகூடாரத்தில் முதல் அறையிலே இந்த வேலயானது நடைபெற்றுவந்தது. (இந்த புத்தகம் 19-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும்). பாவ அறிக்கை செய்யும் விசுவாசிகளின் சார்பாக, கிறிஸ்துவின் இரத்தமானது, பரிந்துபேசி, பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்படுவதையும், மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதையும் செயல்படுத்துகிறது. எனினும், அந்தப் பதிவேடுகளிலே அவர்களது பாவங்கள் தொடர்ந்து தங்கியிருக்கும். அந்த நிழலாட்டமான ஆராதனையிலே- ஆண்டு முடிவிலே — பாவ நிவாரண வேலை நடைபெறும். மானிடரின் மீட்பிற்காக, கிறிஸ்துவின் ஊழியம் முடிவடையும் முன்பாக, ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து பாவத்தை அகற்றுவதற்காக, பாவநிவாரண வேலை இருக்கிறது. 2300 நாட்கள் முடிவடைந்தபின்பு, இந்த வேலை ஆரம்பமாயிற்று; அந்தச் சமயத்தில், நமது மகா பிரதான ஆசாரியர் ஆசாரியர் ஆசாரிப்புக்கூடாரத்தை சுத்திகரிக்கின்ற அவரது பக்திவிநயமான ஊழியத்தின் கடைசிப் பகுதியின் ஊழியத்தை செய்வதற்காக, மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் பிரவேசித்தார்...Mar 479.3

    ஆசரிப்புக்கூடாரத்தை சுத்த்கரிப்பதற்காக மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே மகா பிரதான ஆசாரியராக வருதல் தானியேல் 8:14-ல் நமது பார்வைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தானியேல் 7:13-ல் எழுதப்பட்டுள்ளபடி, மனுஷகுமாரன் நீண்ட ஆயுசுள்ளவருக்கு அருகில் வருவது முன்னறிவித்தப்படி, ஆண்டவர் அவரது ஆலயத்திற்க்குள் பிரவேசிப்பது ஆகியவை, அதே சம்பவத்தின் வருணனைகளே. மத்தேயு 25-ம் அதிகாரத்தில், கிறிஸ்துவால் கூறப்பட்ட அந்த பத்து கன்னிகைகளைப்பற்றிய உவமையிலேயும், கல்யாணத்திற்கு வருகைதரும் மணமகனின் வருகையிலேயும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Mar 480.1

    ஆசரிப்புக்கூடார சுத்திகரிப்பானது...ஒரு விசாரணையின் வேலை; அதாவது நியாயத்தீர்ப்பின் வேலை அதில் அடங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தமது மக்களை மீட்பதற்காக, கிறிஸ்து வருவதற்கு முன்பாக, இந்த வேலை நடைபெற வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கிரியைகளுக்குத்தக்கதாக, அவர் வரும்பொழுது அதற்கான வெகுமதியைக் கொண்டுவருவார்.Mar 480.2

    இறுதிநாள் காரியங்கள் மதிப்பீடுசெய்யப்படும்பொழுது, பதவி, உயர்ந்த படித்தரம் அல்லது செல்வம் ஆகியவை எவருடைய காரியத்திலும் ஒரு மயிரிழை அளவுகூட மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அனைத்தையும் பார்க்கின்ற தேவனால், கிறிஸ்துவிற்காக, தங்களது தூய்மையிலும்-மேன்மையிலும்-அன்பிலும் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.⋆Mar 480.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 480.4

    “...தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிரவர்களுக்காக, வேண்டுதல்செய்யும்படிக்கு, அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால், அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்.” - எபிரெயர் 7:25.Mar 480.5