Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சபை வீழ்ச்சியடையாது!, ஜனவரி 24

    “....இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” - மத்தேயு 16:18Mar 47.1

    தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்பவர்கள் வலுசர்ப்பம், அவனது சேனை ஆகியோரது கோபத்திற்கு ஆளாக நேரிடும். இந்த உலகத்தில் உள்ளவர்களை தனது குடிமக்களாக சாத்தான் எண்ணி வைத்திருக்கிறான். விழுந்துபோன சபைகள் அனைத்தையும் அடக்கி ஆண்டுகொண்டிருக்கிறான்; ஆனால், அங்கு ஒரு சிறுகூட்டம் அவனது ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களை இந்தப் பூமியிலிருந்தே அவன் அழித்துப்போடக் கூடுமானால், அவனது வெற்றி நிறைவடைந்துவிடும். இஸ்ரவேல் புத்திரரை அளிப்பதற்கு எப்படி அஞ்ஞான ஜாதிகளை அவன் தூண்டி விட்டானோ, அதைப் போன்று, வருங்காலத்தில் வெகுசீக்கிரத்தில் தேவனுடைய மக்களை அலிப்பதர்காக, துன்மார்க்க சக்திகளைத் தூண்டிவிடுவான்... அவர்களது ஒரே நம்பிக்கை தேவனுடைய இரக்கத்தில்தான் இருக்கிறது! ஜெபம் மாத்திரமே, அவர்களது ஒரே பாதுகாப்பாக இருக்கும்.Mar 47.2

    எஸ்தர் இராணியின் நாட்களிலே, தேவனுடைய மக்களுக்கு வந்த கொடிய அனுபவங்கள், தனிப்பட்டவிதத்தில் அந்தக் காலத்திற்குமட்டும் உரியதல்ல. காலங்கள் நெடுகிலும், உலகின் முடிவு நேரம் வரை உற்றுநோக்கிய வெளிப்படுத்தின விசேஷகன்; “வலுசர்ப்பமானது ஸ்திரீயின் மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய, அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று” (வெளிப்படுத்தல் 12:17) என்று உறுதியாகக் கூறினார். இப்பொழுது உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற சிலர் அந்த வார்த்தைகளின் நிறைவேறுதலைக் காண்பார்கள்.Mar 47.3

    சாத்தானுக்கு அவனுடைய காலம் குறுகிக்கொண்டிருக்கிறதால், அவனுடைய கோபத்தின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவனுடைய வஞ்சகத்தின் ஐல்வின் வேலைகள், இக்கட்டுக் காலத்திலே உச்சக்கட்டத்தை அடையும்.Mar 48.1

    மக்களை வஞ்சிப்பதற்காக, சாத்தான் தன்னுடைய அற்புதங்களை நடப்பிப்பான். அவனது மேலாண்மையே மிகவும் உயர்ந்தது எனக்காட்டி நிலைநாட்டுவான். சபை விழுந்துபோகப்போவது போல் தோன்றும்; ஆனால் விழுந்துபோகிறதில்லை! சீயோனிலுள்ள பாவிகள், அருமையான கோதுமை மணியினின்று பதர் நீக்கப்படுவது போல், சலிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். சபை நிலைத்திருக்கும். இது ஒரு பயங்கரமான - கடுமையான - சோதனை நேரமாகும்; எனினும், இக்காரியம் நடைபெற்றே ஆகவேண்டும். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலே, தொடர்ந்து வெற்றி சிறந்தவர்களே இரட்சிக்கப்படுவார்கள். இவர்களது சாட்சியின் வசமானது உண்மையும் உத்தமுமாக இருக்கும். பாவத்தி மாசு - கறையின்றி அவர்கள் காணப்படுவார்கள். அவர்களது வாய்களில் கபடம் இருப்பதில்லை.Mar 48.2

    ஒரு தாய்கூட தன பாலகனை மறக்கலாம்; ஆனால், “நான் உன்னை மறப்பதில்லை” என்று தேவன் கூறுகிறார். தேவன் தமது பிள்ளைகளை மேன்மையான - உள்ளார்ந்த - ஆர்வமுள்ள அக்கறையோடு நினைத்துப்பார்க்கிறார். அவரது பராமரிப்பில் இருக்கும் பிள்ளைகளை ஒருபோதும் மறக்காமல் இருக்கத்தக்கதாக, தனக்கு முன்பாக ஒரு ஞாபகப் புத்தகத்தை வைத்திருக்கிறார்.⋆Mar 48.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 48.4

    “...மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்,” - சங்கீதம் 146:8.Mar 48.5