Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பெத்லகேம் கற்றுத்தந்த பாடம்!, ஜனவரி 2

    “கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.” - எபிரெயர் 9:28. Mar 3.1

    கிறிஸ்துவின் முதலாம் வருகையும் காலத்திலே, இறைவாக்கைக் காக்கின்ற பொறுப்பைப் பெற்றிருந்த, பரிசுத்த பட்டணத்தின் ஆசாரியர்களும், வேதபாரகர்ளும் காலங்களும் அடையாளங்களைத் தெளிவாகக் கண்டுணர்ந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவரின் வருகையை கூறியறிவித்திருந்திருக்கலாம். மேசியாவின் வருகையானது, வெகுசீக்கிரத்தில் இருக்கின்றது என்ற செய்தியை அவர்கள் அறியாமலும், அதை மக்களுக்கு அறிவிக்காமலும் இருக்கும்பட்சத்தில், அதைக்குறித்து அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை; ஏனெனில், மீகாவின் தீர்க்கதரிசனம், இயேசு பிறக்கப்போகும் இடத்தையும், தானியேலின் தீர்க்கதரிசனம் அவரது முதலாம் வருகையின் காலத்தையும் குறிப்பிட்டுக்காட்டியிருந்தது. அவர்கள் இக்காரியங்களை அறியாதிருந்த நிலையானது, பாவம் நிறைந்த அவர்களது அலட்சிய வாழ்க்கையின் விளைவேயாகும்...Mar 3.2

    உலக இரட்சகரை முதன்முதலாக வரவேற்பவர்களின் கூட்டத்தில், தாங்கள் காணப்படவேண்டுமென்று அனைத்து மக்களும் விழிப்புடன் காத்துக்கொண்டிருந்திருக்கவேண்டும்; ஆனால், அந்தோ, பரிதாபம்! நாசரேத்தின் மலைப்பாங்கான இடத்திலிருந்து வந்த, களைத்திருந்த அந்த இரு பயணிகளும் பெத்லகேமின் அந்த ஒடுக்கமான தெரு முழுவதும், குறுக்கும்மறுக்குமாகத் திருந்து, அந்த நகரின் கிழக்குப் பகுதியின் எல்லைவரை சென்று இளைப்பாறவும், இரவில் தங்குவதற்குப் பாதுகாப்பான ஓர் இடத்திற்ககாகவும் பயனின்றி வீணாக அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்களை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக, எந்த கதவுகளும் திறந்திருக்கவில்லை. இறுதியில், ஆடுமாடுகளுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருந்த- இழிந்த நிலையிலிருந்த-ஒரு தொழுவத்திலே அவர்கள் புகலிடத்தை கண்டடைந்தனர். அங்கேதான் உலக இரட்சகர் பிறந்தார்...!Mar 3.3

    கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்திருந்ததற்கான எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை; ஜீவாதிபதிக்கான எந்த ஆயத்தமும் செய்யப்படவில்லை. வியப்பில் ஆழ்ந்தவர்களாக, இந்த வெட்கந்தரும் செய்திகளோடு பரலோகத்திற்கு திரும்பிச்செல்லவிருந்த தூதர்கள், இரவிலே மந்தையை விழிப்போடு பார்த்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களின் குழாம் ஒன்றைக்கண்டார்கள். இந்த மேய்ப்பர்கள், உலக மீட்பரின் வருகைக்காக ஏக்கம் மிகுந்தவர்களாக, பூமிக்கு வரவிருக்கின்ற மேசியாவைக்குறித்த தீர்க்கதரிசனத்தைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தவர்களாக, நட்சத்திரங்கள் மின்னுகிற வானமண்டலங்களை உற்றுநோக்கிக்கொண்டிருந்தார்கள். இங்கு ஒரு கூடம் பரலோகத்தின் தூதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருந்தது. அவர்கள் எதிர்பாராத நிலையில், திடீரென்று கர்த்தரின் தூதன் தோன்றி, “மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் நற்செய்தியை கூறியறிவித்தார்”...Mar 4.1

    ஆ! பெத்லகேமின் இந்த அற்புத வரலாற்றில், எத்தகைய பாடம் நமக்கு இருக்கின்றது! நமது அவிசுவாசத்தையும், நமது பெருமையையும், சுயத்தின்மீது நாம் வைத்திருக்கும் மட்டில்லாத நம்பிக்கையையும், எத்தகையவிதத்தில் இப்பாடம் கண்டனஞ் செய்கிறது! நம்மைச் சந்திக்கப்போகும் நியாயத்தீர்ப்புகளை அறியாதவர்களாக, குற்ற இயல்புள்ள அக்கறையற்ற தன்மையினால், காலங்களின் அடையாளங்களைத் தெளிவாகக் கண்டறிந்து கொள்ள, நாமும் தவறிவிடாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி, பெத்லகேமின் பாடம் நம்மை எப்படிப்பட்டவிதத்தில் எச்சரிக்கின்றது!⋆Mar 4.2

    வாக்குத்தத்த வசனம்:Mar 4.3

    “இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆர்க்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியையும் வெளிப்படுத்துவேன்.” — எரேமியா 33:6Mar 4.4