Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வருங்கால சம்பவங்கள் அதன் ஒழுங்கின்படி வருதல்!, செப்டம்பர் 7

    “சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்கள் அல்லவே.” - 1 தெசலோனிக்கேயர் 5:4.Mar 499.1

    ஒவ்வொரு மனிதனும் நித்தியஜீவனுக்கோ அல்லது நித்திய அழிவிற்கோ தீர்க்கப்படும் வரை, கிறிஸ்து மகா பரிசுத்தஸ்தலத்தை விட்டு வெளியேறமாட்டார். அவர் மகா பரிசுத்தஸ்தலத்தில தமது வேலையை முடித்து, பிரதான ஆசாரியனுடைய ஆடையைக் களைந்து, பழிவாங்கும் வஸ்திரத்தை உடுத்தும்வரை, தேவகோபம் இப்பூமியின்மேல் இறங்காது. பின்பு, பிதாவிற்கும் மனிதனுக்குமிடையே நிற்பதினின்று இயேசு வெளியே அடியெடுத்துவைத்து விலகி நிற்பார். தேவன் மௌனமாயிராமல், சத்தியத்தை தள்ளிப்போட்டவர்கள்மீது உக்கிரமான கோபத்தை ஊற்றுவார். இராஜ்யங்களின் கோபம், தேவனுடைய உக்கிர கோபம், நித்திரையடைந்தவர்களின் நியாயத்தீர்ப்பு எல்லாம் வெவ்வேறு காலங்களில்- தனித்தனியாக — ஒன்றன்பின் ஒன்றாக — நடக்கிறதை நான் கண்டேன். அதோடு, மிகாவேல் இன்னும் எழுந்து நிற்கவில்லை. ஒருபோதும் நடைபெற்றிராத அந்த இக்கட்டுக்காலம் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதையும் கண்டேன். தேசங்கள் இப்போது ஒன்றுக்கொன்று விரோதமாக எழும்பிக்கொண்டிருகின்றன; ஆனால், நம்முடைய பிரதான ஆசாரியர் ஆசரிப்புக்கூடார ஊழியத்தை முடித்தபின்பு, எழுந்துநின்று பழிவாங்குதலின் ஆடையைத் தரித்துகொள்வார்; அதன்பின்னர், கடைசி ஏழு வாதைகளும் ஊற்றப்படும்.Mar 499.2

    இயேசு தமது ஆசரிப்புக்கூடார ஊழியத்தை நிறைவேற்றும் வரை நான்கு தூதர்களும் காற்றுகளைப் பிடித்திருப்பார்கள் என்பதை நான் கண்டேன். அதற்குப் பின்னர், கடைசி ஏழு வாதைகளும் ஊற்றபடும் என்பதையும் நான் கண்டேன். இந்த வாதைகள் நீதிமான்களுக்கு விரோதமாக துன்மார்க்கரை வெறிகொள்ளச்செய்யும். நாம்தான் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை அவர்கள் மேல் கொண்டுவந்துவிட்டோம் என்றும், நம்மை இந்த பூமியிலிருந்து நீக்கிவிட்டால், வாதை நிறுத்தப்படும் என்றும் நினைத்துக் கொண்டார்கள்; எனவே, பரிசுத்தவான்களை கொலைசெய்யத் தக்கதான ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனிமித்தம் விடுதலைக்காக இரவும் பகலும் பரிசுத்தவான்கள் கதறிக்கொண்டிருந்தார்கள்; இதுவே, யாக்கோபின் இக்கட்டுக்காலமாகும். பின்பு, மிகுந்த மனவேதனையோடு ஜெபித்த பரிசுத்தவான்கள் அனைவரும் தேவனுடைய குரலால் விடுவிக்கப்பட்டனர்.Mar 499.3

    சிலுவை மரணத்திற்கு முன்பாகவே, தாம் கொலைசெய்யப்படப்போவதையும், கல்லறையிலிருந்து உயிர்த்தெழப்போவதையும் நமது இரட்சகர் தமது சீடர்களுக்கு விளக்கிக் கூறினார்... ஆனால் சீடர்களோ ரோம நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து உலகப்பிரகாரமான விடுதலையை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களுடைய நம்பிக்கை நாயகனாக இருந்த கிறிஸ்து, இப்படிப்பட்ட அவமானமுள்ள சாவைச் சந்திப்பார் என்கிற நினைவை அவர்களால் சகிக்க முடியவில்லை... சீடர்களுக்கு கிறிஸ்து விளக்கிச் சொன்னதைப்போலவே, தீர்க்கதரிசனங்களின் வாயிலாக, எதிர்காலம் நமக்கு முன்பாகவும் திறக்கப்பட்டிருக்கிறது. கிருபையிங்கால முடிவோடும், இக்கட்டுக்காலத்திற்கான ஆயத்தத்தோடும் தொடர்புடைய சம்பவங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன; ஆனால், அவர்களுக்கு ஒருபோதும் வெளிப்படுத்தப்படவேயில்லை என்பது போல, திரளான கூட்டத்தார். இந்த முக்கியமான சத்தியங்களைப் புரிந்துகொள்ளாமலிருக்கிறார்கள்.⋆Mar 500.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 500.2

    “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்...” -யோவான் 8:32.Mar 500.3