Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சமாதானமும், சௌக்கியமும் ஏற்படுமா?, செப்டம்பர் 9

    “சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.” - எரேமியா 6:14.Mar 503.1

    பாப்பு மார்க்கமும், புரொட்டஸ்டாண்டுகளும், உலகப்பற்றுடையோரும் இணையும்... இந்த மாபெரும் இயக்கம் உலகத்தின் மனந்திரும்புதலையும் வெகுகாலம் காத்திருந்த ஆயிர வருட அரசாட்சியும் கொண்டுவரும்மென்று எண்ணுகிறார்கள்.Mar 503.2

    “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்”-2 பேதுரு 3:10 உலகம் சார்ந்த தத்துவங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளைக்குறித்த பயத்தை மக்கள் மனதிலிருந்து அகற்றிக்கொண்டிருக்கும்பொழுது, மார்க்கத்தலைவர்கள் சமாதானமான-செழிப்பான-நீடித்த நாட்களைக் குறித்துப் போதித்துக் கொண்டிருக்கும்பொழுது, உலகம் முழுவதும் வியாபாரத்திலும், உலக இன்பங்களிலும், நடுவதிலும், கட்டுவதிலும், விருந்துகளிலும், களியாட்டங்களிலும் பங்கெடுப்பதிலும் மூழ்கியிருக்கும்பொழுது, தேவனுடைய எச்சரிப்புகளை உதறித்தள்ளி, அவருடைய ஊழியக்காரரை பரிகாசம்பண்ணிக்கொண்டிருக்கும்பொழுதும், “அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை” —1 தெசலோனிக்கேயர் 5:3.Mar 503.3

    சீத்திம் பள்ளத்தாக்கிலே வசித்தவர்களைப்போல, மக்கள் சமாதானத்தையும் செழிப்பையுங்குறித்து கனவுகண்டுகொண்டிருக்கிறார்கள். “உன் ஜீவன் தப்ப ஓடிப்போ” என்பதுதான் தேவனுடைய தூதர்களிடமிருந்து வருகின்ற எச்சரிப்பு; ஆனால், மற்ற குரல்களெல்லாம், “பரபரப்படைய வேண்டாம், பயப்படத்தேவையில்லை” என்கின்றன. திரள்கூட்டமானவர்கள் “சமாதானமும் சௌக்கியமும்” என்று சொல்லும்பொழுது, கீழ்ப்படியாதவர்கள்மேல் அழிவு சடிதியாக வருகிறது என்று பரலோகம் உறுதிபட அறிவிக்கிறது. அழிவிற்கு முந்தின இரவிலே, சமவெளியிலிருந்த அந்த பட்டணங்கள், கட்டுக்கடங்காத களிப்பிலே மூழ்கி, தேவனுடைய ஊழியக்காரரின் பயங்களையும் எச்சரிப்புகளையும் பரிகாசம்பண்ணிக் கொண்டிருந்தார்கள்; ஆனால், அந்த பரிகாசங்கள் அக்கினியிலே அழிந்து போனார்கள். அதே இராத்திரியில் தானே, கிருபையின் கதவு என்றென்றைக்குமாக சோதோமிலிருந்த நிர்விசாரமான துன்மார்க்கருக்கு மூடப்பட்டது. தேவன் தம்மை எப்பொழுதும் பரியாசம்பண்ணவொட்டார்... நீண்ட காலமாக அசட்டைபண்ணப்படவும் அனுமதிக்க மாட்டார். இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதன் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிர கோபமுமாய் வருகிறது.” ஏசாயா 13.9. உலகத்தின் பெரும் திரள்கூட்டமானவர்கள், தேவனுடைய இரக்கத்தை உதறித்தள்ளினவர்கள், அனைவரும் மீளமுடியாத-விரைந்து வரவிருக்கும் அழிவிலே அமிழ்ந்துபோவார்கள்; ஆனால், எச்சரிப்புகளுக்குச் செவிகொடுக்கிறவர்களோ, “உன்னதமானவரின் மறைவில்” இருந்து, சர்வ வல்லவரின் நிழலில் தங்குவார்கள். அவருடைய சத்தியம் அவர்களுக்கு பரிசையும் கேடகமுமாகும்.⋆Mar 503.4

    வாக்குத்தத்த வசனம்: Mar 504.1

    கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.” ---சங்கீதம் 9:10.Mar 504.2