Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தவணையின்கால முடிவு கவனிப்பாரற்று கடந்துசெல்கிறது!, செப்டம்பர் 13

    “சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையும் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடையநாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.” - 1 தெசலோனிக்கேயர் 5:1,2.Mar 511.1

    நீதிமான்களும் துன்மார்கர்களும் அவர்களது மானிடத் தன்மையிலே (சாவுக்குரிய) இன்னும் தொடர்ந்து பூமியிலே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். திரும்பப் பெறக்கூடாத அந்த வாக்கியம் பரலோகக் கூடாரத்துலே சொல்லப்படும்வரைக்கும் மனிதர் நட்டும் கட்டியும், குடித்தும் புசித்தும் அந்த தீர்மானத்தைக் குறித்து ஒன்றும் உணராதவர்களாயிருப்பார்கள். ஜலப்பிரளயத்திற்கு முன்பு, நோவா பேழைக்குள் பிரவேசித்தபின்பு, தேவன் அவனை உள்ளேயும். தேவ பயம் இல்லாதவர்களை வெளியேயும் வைத்து அடைத்தார்; ஆனால், அந்த ஏழு நாட்களும், தங்களுக்கு அழிவு நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்பதை அறியாத அம்மக்கள், தங்களுடைய விசாரமற்ற களியாட்டுகளிலே பொழுதுபோக்கி, நேரிடப்போகிற நியாயத்தீர்ப்பைக்குறித்த எச்சரிப்புகளை பரிகாசம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். “இப்படியே மனுஷ குமாரனுடைய வருகையின் நாளிலும் இருக்கும்” என்று மீட்பர் சொல்லுகிறார். அமைதியான நடுராத்திரியில் திருடனைப்போல, எவரும் அறியாதவண்ணம், ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கிற மணிவேளை கடந்துபோகும்; பாவிகளுக்குக் கொடுக்கப்பட்ட இரக்கத்தின் சலுகை எடுபட்டுப்போகும்.Mar 511.2

    தேவனுடைய உக்கிரகோபம் உந்தப்படுவதினால் மாத்திரமே, விழிப்படையத்தக்கதான அந்தப் பொய்யான பாதுகாப்பை நம்பி, மக்கள் தாலாட்டப்பட்ட நிலையிலிருக்கிறார்கள்.Mar 511.3

    காலங்களின் முடிவிலே, நியாத்தீர்ப்பினிமித்தம் ஆண்டவர் இந்த பூமியின்மேல் நடந்துசெல்லவிருக்கிறார். பயங்கரமான வாதைகள் பூமியின்மேல் வந்துவிழும்; அப்பொழுது, தேவனுடைய வார்த்தையை அவமதித்து, அதை மிகவும் அற்பமாக மதிப்பிட்டவர்கள், அதைத்தேட ஒரு சமுத்திரம் தொடங்கி மறு சமுத்திரம் மட்டும், வடதிசை தொடங்கிக் கீழ்த்திசைமட்டும், அங்கும் இங்கும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற்போவார்கள்… தேவனுடைய ஊழியக்காரர்கள் தங்கள் வேலையைச் செய்தாயிற்று; கடைசி விண்ணப்பங்களை ஏறெடுத்தாயிற்று. கலகமுள்ள சபைக்காகவும், பக்தியற்ற மக்களுக்காகவும், அவர்களுடைய கடைசியான-கசப்பான-கண்ணீர்துளிகளையும்கூடச் சிந்தியாகிவிட்டது.Mar 512.1

    காலங்களைக் கடந்துவந்த கர்த்தருடைய கண்கள், நம்முடைய காலத்தைப் பார்க்கும்போது: “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானதுக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்” (லூக்கா 19:42) என்கிறார். அவருடைய பிரமாணத்தை வைத்துப்பாதுகாக்கின்ற பெட்டகமாக வைக்கப்பட்டிருக்கின்ற தேவனுடைய சபையே, இன்றும் இது உன்னுடைய நாளாகவே இருக்கிறது. நம்பிக்கையின்-தவணையின்-நாளாக இருக்கிற-இந்தநாள், அதன் முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறது. சூரியன் வேகமாக அஸ்தமித்துக்கொண்டிருக்கிறது; அந்தநாள் முடிந்துவிடும்வரை “உன் சமாதானத்திற்கு ஏற்றவைகளை நீ அறியமாட்டாயோ! “இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது” (லூக்கா 19:42) என்கிற, மாற்றமுடியாத அந்த நியாயத்தீர்ப்பு உன்மேல் சொல்லப்பட வேண்டுமோ?⋆Mar 512.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 512.3

    “விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.” - நீதிமொழிகள் 16:20. Mar 512.4