Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கடைசி ஏழு வாதைகள் விழ ஆரம்பிக்கின்றன!, செப்டம்பர் 16

    “அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: ‘நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள்’ என்று சொல்லக்கேட்டேன்.” - வெளிப்படுத்தல் 16:1.Mar 517.1

    ஆசரிப்புக்கூடாரத்திலே கிறிஸ்து மத்தியஸ்த ஊழியத்தை முடிக்கும்பொழுது, மிருகத்தை வணங்கி, அதின் முத்திரையைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு (வெளிப்படுத்தல் 14:9,10) எதிரான கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட ஆண்டவருடைய உக்கிரம் ஊற்றப்படும். இஸ்ரவேலரை விடுவிக்கும்முன்பு அனுப்பப்பட்ட வாதைகள், தேவன், தமது மக்களை கடைசியாக விடுதலைசெய்யும் முன்னர் அனுப்பப்படப்போகிற பயங்கரமான காட்சியை விவரிக்கும்பொழுது, “மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதன் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.” “சமுத்திரம்… செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ளா பிராணிகள் யாவும் மாண்டுபோயின”; “ஆறுகளும், நீரூற்றுகளும்… இரத்தமாயின” என்று யோவான் எழுதுகிறார். இந்த பயங்கரமான தண்டனைகள் மூலமாக, தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் நீதியானவைகள் என்பது முற்றிலுமாக மெய்ப்பிக்கப்பட்டது. தேவனுடைய தூதன்: “அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தியபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள்”; “தேவரீர் இப்படி நியாயத்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்” (வெளி. 16:2-6) என்று கூறினான். தேவனுடைய மக்களை சாவிற்கு ஒப்புக்கொடுத்ததினிமித்தம், அவர்கள் தங்கள் சொந்தக்கைகளினாலேயே, கொலைசெய்ததைப்போல, தங்கள்மேல் ஆக்கினையைக் குவித்துக்கொண்டார்கள்.Mar 517.2

    அடுத்து வந்த வாதையில், “நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதை சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது…மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டார்கள்” - வெளி. 16:8,9.Mar 518.1

    இந்த வாதைகள் உலகம் முழுவதையும் ஒரே நேரத்தில் பாதிக்காது; அவ்வாறு பாதிக்குமானால், பூமியின் குடிகள் அனைவரும் முற்றிலுமாக அழிந்துபோய்விடுவார்கள்; என்றாலும் இதுவரையிலும் மனிதர் அனுபவித்திராத கொடிய-பயங்கரமான-வாதைகளும் இருக்கும். கிருபையின்கால முடிவிற்கு முன்னர் மனிதருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துத் தண்டனைகளிலும் இரக்கம் கலந்திருந்தது. பரிந்துபேசிக்கொண்டிருந்த கிறிஸ்துவின் இரத்தம், பாவங்களுக்கான முழுமையான தண்டனையையும் பெறாதபடிக்கு, பாவிகளை மறத்துக்கொண்டிருந்தது. ஆனால் கடைசி நியாயத்தீர்ப்பிலே, இரக்கம் கலந்திராத உக்கிர கோபம் பூமியின்மேல் ஊற்றப்படும்.Mar 518.2

    தேவனின் உக்கிரகோபம் விரைவாக வரவிருக்கிறது; மீறினவர்களை அவை கண்டிக்க ஆரம்பித்தபின்பு, இறுதிவரை எத்தகைய இடைவெளியுமின்றி தொடர்ந்திசெல்லும். தேவனுடைய கோபாக்கினையின் புயல் சூழ்ந்துகொண்டிருக்கிறது. தேவனுடைய அன்பிலே, சத்துயத்தின்மூலமாகப் பரிசுத்தமாக்கப் பட்டவர்கள் மாத்திரமே நிலைத்து நிற்பார்கள். அழிவு கடந்துபோகுமட்டும், அவர்கள் தேவனில் கிறிஸ்துவிற்குள் மறைத்து வைக்கப்படுவார்கள்.⋆Mar 518.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 518.4

    “சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்…” - சகரியா 2:10.Mar 518.5