Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மிகவும் கொடிய இக்கட்டுக்காலம்!, செப்டம்பர் 24

    “ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இது வரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.” - மாற்கு 13:19.Mar 533.1

    இதுவரை ஒருபோதும் நிகழ்ந்திராத இக்கட்டுக்காலம் நம்முன் சீக்கிரமாக வரவிருக்கிறது; நாம் பெற்றிராத அனுபவத்தை இப்போது, பெற்றுக்கொள்வது அவசியமாகும். அத்தகைய அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாத அளவிற்கு, அநேகர் மிகவும் சோம்பலுடன் இருக்கிறார்கள். நிஜத்தைப் பொறுத்தமட்டில் எப்பொழுதுமே பிரச்சனையைவிட, அதை எதிர்பார்க்கிறதினால் உண்டாகிற வேதனையே அதிகம்; ஆனால், நம்முன் இருக்கிற நெருக்கடியைப் பொறுத்தவரையில் அது உண்மையல்ல. வரப்போகும் அந்த இக்கட்டுபற்றி மிகவும் முனைப்பான தெளிவோடு விவரித்துக் கூறினாலும்கூட, அந்த கடுந்துயர் வேளையின் பரிமாணத்தை, துல்லியமாக எடுத்துக்காட்ட முடியாது; எனவே, இப்போது நமது அருமையான மீட்பர், நமக்காக பாவநிவர்த்தி செய்துகொண்டிருக்கும் போது, நாம் அவரில் பூரணப்பட பிரயாசப்படவேண்டும். தேவனின் அருளால் திட்டமிடப்பட்ட பள்ளியில்தான் இயேசுவின் தாழ்மையையும் சாந்தத்தையும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நாம் தெரிந்துகொள்ளுகிற பாதை மிகவும் சுலபமாகவும் இனிமையாகவுமிருக்கிறது. அத்தகைய பாதையை ஆண்டவர் ஒரு போதும் நமக்கு முன்பாக வைக்கிறதில்லை. வாழ்வின் உண்மையான குறிக்கோள்களையே எப்பொழுதும் நமக்குமுன் வைக்கிறார். தங்களுடைய ஆத்துமாக்களை மிகவும் பயங்கரமான ஆபத்திற்குள் கொண்டுவரத்தக்கதான அளவிற்கு, ஒருவரும் இத்தகைய பணியை அலட்சியம் செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ கூடாது.Mar 533.2

    “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” என்று பரலோகத்திலிருந்து வந்த ஒரு உரத்த சத்தத்தைக் கேட்டதாக, அப்போஸ்தலனாகிய யோவான் கூறி அதிர்ச்சியடைகிறார். பரலோகத்தினின்று வரும் குரலே இத்தகைய அதிர்ச்சியைக்கொடுக்குமானால், அந்த காட்சிகள் எத்தனை பயங்கரமானவைகளாக இருக்கும்? சாத்தானுடைய காலம் குறுகக்குறுக, அவனுடைய உக்கிரமான கோபம் அதிகமாகிறது. அவனுடைய தந்திரங்களும் அழிவுகளும் இக்கட்டுக்காலத்திலே உச்சக்கட்டத்தை அடைகின்றது. தேவனுடைய நீடிய பொறுமை முடிவிற்கு வந்துவிட்டது; உலகம் அவருடைய இரக்கத்தைத் தள்ளிப்போட்டது; அவரது அன்பை அவமதித்தது; அவருடைய பிரமாணத்தை மிதித்துப்போட்டது; துன்மார்க்கர் கிருபையின் காலத்தின் எல்லையைக் கடந்துவிட்டார்கள். ஆண்டவர் தமது பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுகிறார். அவர்கள் தாமே தெரிந்துகொண்ட தலைவனுடைய இரக்கத்திற்கு அவர்களை ஒப்புக்கொடுக்கிறார். தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு ஒப்புக்கொடுத்த மக்களை அவன் ஆளுவான். அவர்களெல்லாரையும் ஒரு மாபெரும் இறுதி இக்கட்டிற்குள்ளாக, பூமியின் குடிகள் அனைவரையும் சாத்தான் அமிழ்த்திப்போடுவான். மானிட இச்சைகளின் கொடிய வெறியாட்டங்களை தேவதூதர்கள் தடுத்துநிறுத்தாமல் விட்டுவிடும்போது, கலகத்தின் மூலகூறுகள் அனைத்தும் கட்டவிழ்த்துவிடப்படும். பழைய எருசலேமின்மேல் ஏற்பட்ட அழிவைக்காட்டிலும் மிகவும் பயங்கரமான அழிவில், உலகம் முழுவதும் சிக்கிக்கொள்ளும். உலகம் உண்டானதுமுதல் உண்டாயிராத இக்கட்டுக் காலத்தின் மத்தியிலே, தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட பிள்ளைகள் அசையாது நிற்பார்காள். சாத்தானும் அவனுடைய தீய சேனைகள் அனைத்துங்கூட, தேவனுடைய பரிசுத்தவான்களில் மிகவும் பலவீனமான ஒரு நபரையுங்கூட அழித்துப்போட முடியாது.⋆Mar 533.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 534.1

    “நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.” - சங்கீதம் 138:7.Mar 534.2