Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வெற்றியுடன் பெற்றுக்கொள்ள ஒரு பரலோகம்!, ஜனவரி 27

    “...எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்...” - லூக்கா 21:36Mar 53.1

    நாம் வாழுகின்ற இந்நாட்கள், முக்கியமான பக்திவிநயமான நாட்களாகும். இவ்வுலகினின்று தேவனுடைய ஆவியானவர் படிப்படியாக, ஆனால் நிச்சயமாக எடுத்துக்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்...Mar 53.2

    இவ்வுலகக் காரியங்களின் நிலையானது, துன்பம்மிகுந்த காலங்கள் நம்மீது நேராக வந்துவிட்டன என்பதைக் காட்டுகிறது. அன்றாடச் செய்தித்தாள்கள், வெகுசீக்கிரத்தில் பயங்கரமான ஒரு போராட்டம் நடைபெறவிருக்கிறது என்பதை முழுக்கமுழுக்க சுட்டிக் காட்டுகின்றன. துணிகரமான கொள்கைகள் அடிக்கடி சம்பவிக்கும் நிகழ்வுகளாக இருக்கின்றன. வேலை நிறுத்தங்கள் என்பது ஒரு சாதாரண காரியமாகிவிட்டது. கொலைகளும், களவுகளும் எங்கணும் நடைபெறுகின்றன. பிசாசுபிடித்த மனிதர்கள், ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறார்கள் ஆகியவருடைய உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் தீமையின் சக்தியில் மயங்கியவர்களாக அத்துடன் ஒன்று பட்டிருக்கிறார்கள். தீமையின் ஒவ்வொரு வகைப் பிரிவும் நிலைபெற்றிருக்கின்றது.Mar 53.3

    உலகிலுள்ள அனைத்தும் ஒரு குழப்பத்திலிருக்கிறது. காலத்தின் அடையாளங்கள் பேரிடர்களை முன்னறிவிக்கின்றன. இனி நடைபெறப்போகும் சம்பவங்கள் முன்னரே அவைகளின் நிழல்களைப் பதியவைத்துக் கொண்டிருக்கின்றன. தேவ ஆவியானவர் இவ்வுலகினின்று எடுத்துக்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார். கடலிலும், தரையிலும் பயங்கரச் சமபவங்கள் ஒன்றையொன்று பின் தொடர்ந்து வருகின்றன. புயல்கள், நிலநடுக்கங்கள், நெருப்பினால் ஏற்படும் அழிவுகள், வெள்ளங்கள், கொலைகள் ஆகியவை அனைத்துத் தரங்களிலும் காணப்படுகின்றன. மனிதர் தாங்கள் தெரிந்துகொண்ட கொடியின் கீழாக தாங்களாகவே அணிவகுத்து நிற்கின்றார்கள். பரபரப்போடு தாங்கள் தெரிந்துகொண்ட இயக்கங்களின் தலைவர்களுக்காக விழிப்புடன் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது ஆண்டவரின் வருகைக்காக விழிப்புடன் காத்துக்கொண்டு உழைத்துக் கொண்டுமிருக்கிற ஒரு கூட்டம் உண்டு. இன்னொரு கூட்டம் முதன்முதலாக மருள விழுந்துபோன அந்த படைத்தலைவனுக்கு அடியில், அவர்கள் வரிசையை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெகுசிலரே தங்களது இதயத்தோடும் ஆத்துமாவோடும் “அறவே வெறுத்துத்தள்ள வேண்டிய நரகம் ஒன்று உண்டு, பெற்றுக்கொள்ள வேண்டிய பரலோகம் ஒன்று உண்டு” என்று விசுவாசிக்கிறார்கள்.Mar 53.4

    நாம் அறியாத நிலையில், அந்த நெருக்கடி நேரம் நம்மீது மெல்லமெல்ல வந்து கொண்டிருக்கிறது. சூரியன் வழக்கம்போல வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது... மனிதர்கள் இன்னும் புசித்துக்கொண்டும், குடித்துக் கொண்டும், நாட்டிக்கொண்டும், கட்டிக்கொண்டும், பேன் கொண்டும், பேன் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். வியாபாரிகள் இன்னும் வாங்கிக் கொண்டும், விற்றுக்கொண்டும் இருக்கிறார்கள். மண்டிகர் ஒருவருக்கொருவர் விரோதமாக முட்டிமோதிக்கொண்டு, உயர்ந்த இடத்தைப் பெறுவதற்காகப் போட்டிபோட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். சிற்றின்ப விரும்பிகள் சினிமா கொட்டகைகளிலும், குதிரைப் பந்தயங்களிலும், சூதாட்ட நரகங்களிலும் இன்னும் கூடிக் குவிந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு அதிகமான பரபரப்பு காணப்படுகிறது; ஆனால், தவணையின் வேளையானது துரிதமாக முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகிலுள்ள ஒவ்வொருவருடைய காரியமும் நித்தியமாகத் தீர்மானிக்கப்படப் போகிறது. ஒலிவ மலையினின்று ஆண்டவரால் கூறப்பட்ட, நூற்றாண்டுகள் நெடுகிளுமாக பக்திவிநயத்தோடு நம்மை வந்துசேருகின்ற, எச்சரிப்பின் வார்த்தைகள் பின்வருமாறு கூறுகிறது : “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடியாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்தநாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்” - லூக்கா 21:34.Mar 54.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 54.2

    “கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்: அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.” - சங்கீதம் 40:1.Mar 54.3