Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    விசேஷ உயிர்த்தெழுதல்!, செப்டம்பர் 30

    “பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.” - தானியேல் 12:2.Mar 545.1

    தமது மக்களை விடுவிக்கும்படி ஆண்டவர் நள்ளிரவைத் தெரிந்துகொண்டார். துன்மார்க்கர் அவர்களைச் சுற்றிலும் பரிகாசம்பண்ணிக்கொண்டிருந்தபோது, சூரியன் தன் மகா வல்லமையில் பிரகாசமாகக் காணப்பட்டது. சந்திரன் தன் ஸ்தானத்தில் நின்றுபோயிற்று…இருண்ட-கனத்த மேகங்கள் மேலேவந்து ஒன்றோடொன்று மோதின; ஆனால், நிலைபெற்ற மகிமையோடு, தெளிவான ஒரு இடம் காணப்பட்டது. திரளான தண்ணீர்களைப்போன்று அங்கிருந்து வந்த தேவனின் குரல், வானங்களையும் பூமியையும் அசைத்தது. மகா பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. கல்லறைகள் திறவுண்டன. அங்கேயிருந்த, மூன்றாம் தூதனின் செய்தியைக் கேட்டு, அந்த விசுவாசத்தில் மரித்திருந்த-ஓய்வுநாளை ஆசரித்திருந்த பிள்ளைகள், பூமியின் தூள் படுக்கைகளினின்று மகிமையடைந்தவர்களாக, ஆண்டவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டவர்களோடு, அவர் செய்கிற சமாதான உடன்படிக்கையைக் கேட்கும்படி எழுந்துவந்தார்கள்.Mar 545.2

    கிறிஸ்துவிற்குள் நித்திரையடைந்தவர்கள், அவர்களுடைய சிறைகளிலிருந்து அழிவில்லாத மகிமைக்கு அழைக்கப்படுவார்கள்… அவர் உயிர்த்தெழுந்திருக்கிறார்; எனவே, அன்பான நண்பர்களே, உங்களது நம்பிக்கையற்ற தருணத்திலே, உங்கள் அருகிலே அவர் நின்று, உங்களுக்குச் சமாதானம் அருளுவார்.Mar 545.3

    நான் பேசுகிறதைக்குறித்து நான் நன்கு அறிந்திருக்கின்றேன். எனது தலைக்குமேல் அலைகள் புரண்டுபோவதாக நான் நினைத்த அந்த நேரத்தை நான் கண்டிருக்கிறேன். அச்சமயத்திலே, என் இரட்சகரை எனக்கு மிகவும் அருமையானவராக உணர்ந்திருக்கின்றேன். என் மூத்த குமாரன் என்னைவிட்டு எடுக்கப்பட்டபொழுது, எனது துக்கம் மிகவும் அதிகமாகி இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். எனினும் இயேசு, என் அருகில் வந்தார். என் ஆத்துமாவிலே அவரது சமாதானத்தை நான் உணர்ந்தேன். ஆறுதலின் பாத்திரம் எனக்கு அளிக்கப்பட்டது.Mar 545.4

    அதன் பின்னர் முப்பத்தாறு வருடங்களாக எனக்கு மிகவும் அருகாமையில் நின்றிருந்தவர்…எடுத்துக்கொள்ளப்பட்டார். ஊழியத்திலே நாங்கள் இருவரும் சேர்ந்து உழைத்தோம்; ஆனால், அந்த வீரனுடைய கரங்களை மடித்து, அவரை அமைதியான கல்லறையிலே இளைப்பாறச் செய்யவேண்டியதாயிற்று; அப்போது மீண்டும் என் துக்கம் அதிகரித்தது; அப்போது மீண்டும் அதே ஆறுதலின் பாத்திரம் என் உதடுகளில் வைக்கப்பட்டது. இயேசு எனக்கு மிகவும் அருமையானவர். அவர் என் அருகில் நடந்தார்…அவர் உங்களுக்கு அருகிலும் நடப்பார். நமக்கு அன்பானவர்கள் மரணமடையும்பொழுது, அவர்கள் மிகவும் பிரியமானவர்களாக, அழகானவர்களாக நமக்கு இருக்கிறார்கள். அது நம்முடைய தாயாகவோ, அல்லது தகப்பனாகவோ இருக்கலாம். அவர்கள் உயிர்த்தெழுந்து வரும்பொழுது, அவர்கள் முகத்திலிருந்த சுருக்கங்கள் அனைத்தும் போய்விடும். அவர்கள் சாயலிலிருந்து நாம் அவர்களை அறிந்து கொள்வோம். Mar 546.1

    உயிர்த்தெழுதலின் காலையிலே எழும்பிவருகிற நம் நண்பர்களைச் சந்திக்க நாம் ஆயத்தமாக வாஞ்சிக்கிறோம்… “அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாக இருப்போம் என்று சுவிசேஷத்திலே கூறப்பட்ட நம்பிக்கையை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோமாக.”⋆Mar 546.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 546.3

    “உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்திரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்.” - ஏசாயா 61:7.Mar 546.4