Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஏழாவது வாதையைப்பற்றி சித்திரம்போன்ற ஒரு விளக்கம்!, அக்டோபர் 3

    “உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? …ஆபத்து வருங்காலத்திலும்…பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.” - யோபு 38:22,23.Mar 551.1

    ஆஸ்திரேலியாவிலுள்ள, புராஸ்பெக்ட் என்ற இடத்தில், எனக்காகக் காத்திருந்த பணியினிமித்தம் நான் செல்லும்போது பைரன் பெல்டன், சாரா பெல்டன், சகோதரி மே லேசி ஆகியோர் என்னுடன் வந்தார்கள். எங்களுடைய கூட்டத்தை முடித்துவிட்டு, அந்த வீட்டைவிட்டு வெளியேறும்போது, ஒரு புயல் வந்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்… எச்சரிக்கப்பட்டதால், எங்கள் குதிரைவண்டியில் துணிவுடன் வேகமாகச் சென்றுகொண்டிருந்தோம். ஏறக்குறைய வீட்டை அடைந்துவிட்ட நேரத்தில், பலமான புயல் காற்று எங்களைத் தாக்கியது. பெரிய பெரிய பனிக்கற்கள் விழத்தொடங்கின. ஒவ்வொன்றும் ஏறக்குறைய ஒரு கோழி முட்டையின் அளவில் இருந்தது…அவைகள் குதிரைக் குட்டிகளின்மேல் பயங்கரமான வேகத்தோடு மோதியதால், குதிரைக்குட்டிகள் மிரண்டுபோயின.Mar 551.2

    நான், பைரனிடம், நீ கீழே இறங்கு…போய் குதிரையின் காதில் பேசு. அதை அடித்துக்கொண்டிருப்பது நீ அல்லவென்று அவைகளுக்குத் தெரியட்டும் என்றேன்; நான் சொன்னதுபோலவே அவர் செய்தார்; அவ்வாறே சாராவையும் மே லேசியையும் பார்த்துச் சொன்னேன்; அவர்களும் இறங்கினார்கள். பின்னதாக அவர்கள் உதவியோடு நானும் இறங்கினேன். காற்று மிகவும் பலமாக வீசினபடியினால், எங்கள் தொப்பிகளெல்லாம் பறந்துபோயின; நாங்கள் அமர்ந்திருந்த மெத்தைகளும் அங்கிருந்த குடைகளும், அந்த வண்டியின் கயிறுகளும் நாலாபுறமும் பறந்து, வயல்களிலே விழுந்தன…Mar 551.3

    எப்படிப்பட்ட காட்சி அது! சகோதரி பெல்டனும், மே லேசியும் நானும் தொப்பியில்லாதவர்களாக வீடுபோய் சேர்ந்தோம்… பயந்து போன புதிய குதிரையோடு பைரன் இருந்தார்…ஆண்டவருடைய உதவிக்காக, எங்கள் நன்றிகளைத் தெரிவிப்பதுமட்டுமே எங்களால் அங்கே செய்யமுடிந்தது.Mar 551.4

    சாரட் வண்டியில் போகும்போது, புயலில் மாட்டிக்கொண்டது எனக்குப் பெரிய அனுபவமாக இருந்தது. தேவனுடைய நியாயத் தீர்ப்புகள் உலகத்தின்மேல் ஊற்றப்படுகிற நாளை நான் நினைத்துப் பார்த்தேன். இருளும், பயங்கரமான காரிருளும் ரோமத்தால் செய்யப்பட்ட இரட்டினால் போர்வையைப்போல வானங்களை மூடிக்கொள்ளப்போகிற நாளை நினைத்தேன். நீங்கள் உங்கள் வழியேபோய், தேவனுடைய உக்கிரமாகிய கோபாக்கினையை பூமியின்மேல் ஊற்றுங்களென்று ஆண்டவருடைய வல்லமையான சத்தம் தூதர்களுக்குக் கட்டளை கொடுக்கும்போது, அந்த நிலை எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை என் மனம் கற்பனைசெய்து பார்த்தது… (வெளிப்படுத்தல் 16:1)Mar 552.1

    வெளிப்படுத்தல் 6-ம், 7-ம் அதிகாரங்கள் மிகுந்த அர்த்த முள்ளவைகளாயிருக்கின்றன. ஆண்டவர் வெளிப்படுத்தியிருக்கிற அவருடைய நியாயத்தீர்ப்புகள் மகா பயங்கரமானவைகள். ஏழு தூதர்களும் தங்களது கட்டளைகளை பெற்றுக்கொள்வதற்காக, ஆண்டவருக்கு முன்பாக நிற்கவேண்டும். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன. இந்த பூமியின் குடிகளைத் தண்டிப்பதற்காக ஆண்டவர் செல்கிறார்… (வெளி. 16:21).Mar 552.2

    அவருடைய வாதைகள் பூமியின்மேல் வரும்போது, தாலந்து நிறையான கல்மழை வானத்திலிருந்து துன்மார்க்கர்மேல் விழும்.⋆Mar 552.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 552.4

    “…ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது வாதை உன் கூடாரத்தை அணுகாது.” - சங்கீதம் 91:10.Mar 552.5