Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    விழிப்போடிருப்புவர்கள்மீது பொழியப்படும் ஆசீர்வாதங்கள்!, ஜனவரி 28

    “எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள்... ” - லூக்கா 12:37.Mar 55.1

    வரப்போகும் நியாயத் தீர்ப்புகளைக் குறித்து (தண்டனைகளைக் குறித்து) தேவன் எல்லாக் காலங்களிலுமுள்ள மனிதருக்கு எச்சரிப்பைக் கொடுத்திருக்கிறார். யாரெல்லாம் தாங்கள் வாழ்ந்த காலத்திற்கேற்ற அவரது தூதிலே விசுவாசம் வைத்திருந்தார்களோ, யாரெல்லாம் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக அந்த விசுவாசத்தை செயல்படுத்தினார்களோ, அவர்கள் அனைவரும் கீழ்ப்படியாதவர்கள்மேலும், அவிசுவாசிகள் மேலும் விழுந்த தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். “கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்த சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” என்றார் - ஆதியாகமம் 7:1. நோவா கீழ்ப்படிந்தான், இரட்சிக்கப்பட்டான். “...நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப்புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார்” - ஆதியாகமம் 19:14. இவ்வாறு லோகத்திற்கு செய்தி கிடைத்தது. லோத்து பரலோக தூதர்களின் பாதுகாப்பிற்கடியில் தன்னை வைத்துக்கொண்டான்; இரட்சிக்கப்பட்டான். இதைப்போன்று, எருசலேமின் அழிவைக் குறித்து சீடர்களுக்கும் எச்சரிப்புக் கொடுக்கப்பட்டது, வரப்போகும் அழிவிற்கான அடையாளத்தை விழிப்போடு கவனித்துக் கொண்டு இருந்தவர்கள் பட்டணத்தினின்று ஓடி, அழிவிற்குத் தப்பி விட்டார்கள். அதேபோன்று, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும், இந்த உலகத்தின்மேல் வரப்போகின்ற அழிவைப்பற்றியும், இப்பொழுது எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது. இந்த எச்சரிப்பைக் குறித்து அக்கறையோடு கவனஞ்செலுத்துபவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.Mar 55.2

    அவரது வருகையின் சரியான நேரத்தை நாம் அறியாது இருப்பதால், நாம் அறியாது இருப்பதால், நாம் விழிப்போடிருக்க வேண்டுமென்று கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. “எஜமான் வரும்போது, விழித்திருகிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள்” - லூக்கா 12:37. ஆண்டவரின் வருகைக்காக விழிப்போடு காத்துக் கொண்டிருப்பவர்கள் வீணாக - விருதாவாக காத்துக்கொண்டிருக்க வில்லை. கிறிஸ்துவின் வருகைக்கான எதிர்பார்த்தலானது மனிதரை ஆண்டவருக்கும், மீறுதலிற்காக வரப்போகும் தண்டனைக்கும் பயப்படச் செய்யவேண்டும் என்பதற்காகவே. அவர் காட்டும் இரக்கத்தைத் தள்ளிப்போடுகின்ற, அந்த மாபெரும் பாவத்தைக் காணும்படி, அவர்களை விழிப்படையச் செய்வதற்காகவே, ஆண்டவரின் வருகைக்காக விழிப்போடு காத்திருக்கிறவர்கள், சத்தியத்திற்கு கீழ்ப்படிவதின் மூலமாக, தங்களது ஆத்துமாக்களை தூய்மைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எச்சரிப்புள்ள விழிப்போடு, ஊக்கம் உள்ள உழைப்பையும் அவர்கள் இணைத்துக்கொள்கிறார்கள். ஆண்டவர் வாசலருகே வந்துவிட்டார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறதால், ஆத்துமாக்களை ஆதாயஞ்செய்யும் ஊழியத்தில், தெய்வீக அறிவுஜீவிகளோடு ஒத்துழைப்பதில், அவர்களது ஆர்வமானது துரிதமாகச் செயல்படுகிறது. இவர்களே ஆண்டவருடைய குடும்பத்தினருக்கு, “தகுதியான காலத்திலே படி கொடுக்கும்படி” (லூக்கா 12:42)யாகக் காணப்படுகின்ற விசுவாசமும், ஞானமும் நிறைந்த பணிவிடைக்காரர்கள் ஆகும்; இப்பொழுது, சிறப்பாக பயன்படத்தக்க சத்தியத்தை அவர்கள் கூறியறிவிக்கின்றார்கள். ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், மோசே ஆகிய ஒவ்வொருவரும் தங்களது காலத்திற்கான சத்தியத்தைக் கூறியறிவித்ததுபோல, கிறிஸ்துவின் ஊழியக்காரர்களும் இந்த அவர்களது தலைமுறைக்கான, விசேஷ எச்சரிப்பை இப்பொழுது கொடுப்பார்கள்.⋆Mar 56.1

    வாக்குத்தத்த வசனம்:Mar 56.2

    “சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.” - ஏசாயா 51:11.Mar 56.3