Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்து வரப்போகும் நாளும் மணி நேரமும் எப்பொழுது அறிவிக்கப்படும்?!, அக்டோபர் 6

    “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.” - மத்தேயு 24:36.Mar 557.1

    இயேசு வரப்போகிற நாளையும் மணி நேரத்தையும் அறிவிக்கிற தேவனுடைய சத்தம் பரலோகத்திலிருந்து கேட்கப்படுகிறது. அவர் தமது மக்களோடு செய்கிற நித்திய உடன் படிக்கையையும் அறிவிக்கிறார். இடிமுழக்கத்தின் பேராசைகளாக அவருடைய வார்த்தைகள் பூமி முழுவதிலும் உருண்டோடுகிறது.Mar 557.2

    அவர் ஒரு வாக்கியத்தைச் சொன்னபின்பு, சற்றுநேரம் நிதானித்தார். அந்த இடைவெளியிலே அவரது வார்த்தைகள் உலகமெங்கும் உருண்டோடின. தேவனுடைய இஸ்ரவேலர், மேலே நோக்கி, கண்களைப் பதித்தவர்களாய், யேகோவாவின் வாயிலிருந்து இடிமுழக்கத்தின் பேரோசையைப்போல பூமி எங்கும் உருண்டோடிய அந்த வார்த்தைகளை கவனித்துக் கேட்டனர். அது மிகவும் பக்தி விநயத்தோடும் அச்சந்தரக்கூடியதாகவுமிருந்தது. ஒவ்வொரு வாக்கியம் முடிவடைந்தபோதும், “மகிமை! அல்லேலூயா”! என்று சொல்லி, பரிசுத்தவான்கள் ஆர்ப்பரித்தார்கள்.Mar 557.3

    உயிரோடிருந்த 1,44,000 பேரான பரிசுத்தவான்களும் அந்த சத்தத்தைப் புரிந்துகொண்டார்கள். துன்மார்க்கரோ, அதை இடி முழக்கமென்றும், பூமியதிர்ச்சியென்றும் நினைத்துக்கொண்டார்கள்.Mar 557.4

    தேவனுடைய ஜனமாகிய இஸ்ரவேலர், மேலே பார்த்தபடி நின்றார்கள். மோசேயின் முகம் சீனாய் மலையிலிருந்து இறங்கியபோது பிரகாசித்ததைப்போல, அவர்கள் முகங்களும் அவருடைய மகிமையால் பிரகாசமடைந்தன. துன்மார்க்கரால் அவர்களை நோக்கிப் பார்க்கமுடியவில்லை. ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரித்ததின்மூலம் தேவனை கனம்பண்ணியவர்கள்மீது ஆசீர்வாதம் கூறப்பட்டபோது, அங்கே வல்லமையான வெற்றிமுழக்கம் எழுந்தது.Mar 557.5

    அதன் பின்னர், தேசம் ஓய்வெடுக்கிற யூபிலி ஆண்டு தொடங்கியது.Mar 558.1

    பரிசுத்தவான்கள்மேல் மகிமையான ஒரு ஒளி பிரகாசித்தது. அவர்கள் அப்போது எவ்வளவு அழகாகக் காணப்பட்டார்கள்! சோர்வு, கவலை ஆகியவைகளின் அனைத்து அடையாளங்களும் மாறிப்போயின; எல்லா முகங்களிலும் அழகும் ஆரோக்கியமுமே காணப்பட்டது. அவர்களைச் சுற்றிலுமிருந்த அவர்களது சத்துருக்களாகிய அஞ்ஞானிகள், செத்த மனிதரைப்போல் விழுந்தார்கள். பரிசுத்தவான்களின்மீது பிரகாசித்த ஒளியை அவர்களால் தாங்கிக் கொள்ளக்கூடாதிருந்தது. கிறிஸ்து வானத்தின் மேகங்கள்மேல் வரும் வரைக்கும். அந்த ஒளியும் மகிமையும் அவர்கள் மீது தங்கியிருந்தது.Mar 558.2

    இயேசு நின்றிருந்த இடத்திலே அக்கினி மேகம் ஒன்றை நான் கண்டேன்; பின்பு…கிறிஸ்து அந்த மேகத்திலே தமது இடத்தில் அமர்ந்தார். அந்த மேகம் அவரை கிழக்குத் திசைக்கு சுமந்துசென்றது. அங்கே மனுஷகுமாரனின் அடையாளமான சிறிய கார்மேகம் பூமியிலிருந்த பரிசுத்தவான்களுக்குக் காணப்பட்டது. பரிசுத்தமான இடத்திலிருந்து அது கிழக்கிற்குச்செல்ல சில நாட்களாயின; அந்த நேரத்தில் சாத்தானுடைய கூட்டத்தார் பரிசுத்தவான்களுடைய பாதத்திலே விழுந்து பணிந்து கொண்டார்கள்.⋆Mar 558.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 558.4

    “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,” - பிலிப்பியர் 2:8,9.Mar 558.5