Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை!, அக்டோபர் 8

    “நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்கு முன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும். அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.” - சங்கீதம் 50:3,4.Mar 561.1

    வெகு சீக்கிரத்தில் கிழக்கு முகமாக எங்களுடைய கண்கள் திரும்பின. அங்கே மனிதனுடைய கைகளில் பாதி அளவான ஒரு கருத்த மேகம் தோன்றிற்று. அது மனுஷகுமாரனுடய அடையாளமென்று நாங்களனைவரும் அறிந்திருந்தோம். அது மிகப்பெரிய வெண்மேகமாக ஆகும்வரை, பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது அப்படி வரும்போது, அதன் பிரகாசம் அதிகமானதுடன் அது மகிமையாகவும் மேலும் அதன் மகிமை அதிகரிப்பதுபோலும் காணப்பட்டது. மகிமையால் நிறைந்து காணப்பட்டது. நாங்கள் அனைவரும் அதை மிக பயபக்தியுடன் கவனித்துக் கொண்டிருந்தோம். அதன் அடிப்பாகம் அக்கினியைப்போலத் தோன்றியது. அதன்மேலே ஒரு வானவில் காணப்பட்டது. பதினாயிரம் தேவ தூதர்கள் அதைச்சுற்றிலும் மிக இனிமையான பாடலைப்பாடிக்கொண்டு இருந்தார்கள். அதன்மேல் மனுஷகுமாரன் அமர்ந்திருந்தார்.Mar 561.2

    முதலாவது வெகுதூரத்திலிருந்து காணப்பட்டபொழுது, அந்த மேகம் மிகவும் சிறியதாகத் தோன்றிற்று. அது மனுஷ குமாரனுடைய அடையாளம் என்று தேவதூதன் சொன்னான். அது பூமிக்குச் சமீபமாக வந்தபோது, அதன் மேலான மகிமையையும், வெற்றி வேந்தனாக பவனிவந்த கிறிஸ்துவின் கெம்பீரத்தையும் எங்களால் பார்க்க முடிந்தது.Mar 561.3

    அவருடைய முடி வெண்மையாகவும் சுருண்டும் அவருடைய தோள்களின்மேல் தவழ்ந்துகொண்டுமிருந்தது. அவர் சிரசின் மேல் அநேக கிரீடங்களிருந்தன. அவருடைய பாதங்கள் அக்கினியைப் போலக் காணப்பட்டன. அவரது வலதுகரத்தில் கருக்கான அரிவாள் ஒன்றிருந்தது. அவரது இடது வெள்ளி எக்காளம் ஒன்று இருந்தது. அவருடைய கண்கள் எரிகிற அக்கினி ஜுவாலையைப் போல் இருந்தன. அது அவருடைய பிள்ளைகளை ஊடுருவிப்பார்த்தது. பின்னர் எல்லாருடைய முகங்களும் வெளுத்துப்போயின; தேவனால் தள்ளப்பட்டவர்களுடைய முகங்கள் கருத்துப்போயின. பின்பு நாங்கள் அனைவரும் “யார் நிலைத்து நிற்கக் கூடும்? எனது அங்கி கறையற்றிருக்கிறதா?” என்று உரத்து சத்தமிட்டோம். அப்போது, அந்தத் தூதர்கள் பாடுவதை நிறுத்தினர். சற்று நேரத்திற்கு அங்கு பயங்கர அமைதி நிலவியது. “கைகளில் சுத்தமுள்ளவர்களும் இதயங்களில் மாசில்லாதவர்களும் நிலை நிற்க முடியும்; என் கிருபை உனக்குப்போதும்” என்று இயேசு கூறினார். அந்த வார்த்தைகளை அவர் சொன்னபொழுது, எங்கள் முகங்கள் பிரகாசமாயின. மகிழ்ச்சி எங்கள் இதயத்தை நிரப்பிற்று. மேகம் பூமிக்கு மிகவும் அருகில் வந்தது. தூதர்கள் தொடர்ந்து உரத்த குரலில் பாடத்துவங்கினர்.Mar 561.4

    பூமி அவருக்கு முன்பாக நடுங்கியது. வானங்கள் சுருட்டப்பட்ட புத்தகத்தைப்போல சுருண்டு விலகிப்போயிற்று. எல்லா மலைகளும் தீவுகளும் தங்கள் ஸ்தானத்தைவிட்டு அகன்றுபோயின. பூமியின் இராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவாங்களும், சேனைத்தலைவர்களும், பலவாங்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக் கொண்டனர்.⋆Mar 562.1

    வாக்குத்தத்த வசனம்:Mar 562.2

    “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.” - வெளிப்படுத்தல் 21:7.Mar 562.3