Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவரது தோற்றம்!, அக்டோபர் 10

    “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.” - பிலிப்பியர் 3:20,21.Mar 565.1

    கிறிஸ்து மானிட சாயலில்தான் பரலோகத்திற்கு ஏறிப்போனார். மேகம் அவரை எடுத்துக்கொண்டதை சீடர்கள் பார்த்தார்கள். அவர்களோடு பேசி-நடந்து-ஜெபித்த-அதே இயேசு-அவர்களோடு அப்பம்பிட்ட- அதே இயேசு, ஏரியிலும் படகுகளிலும் அவர்களோடு பிரயாணஞ்செய்த-அதே இயேசு, அதே நாளில். அவர்களோடு சேர்ந்து ஒலிவ மலையின் உச்சியிலே கடுமையாக உழைத்த-அதே இயேசு, இப்போது தமது பிதாவினுடைய சிங்காசனத்தைப் பகிர்ந்துகொள்ளும்படி அங்கே சென்றிருக்கிறார். அவர்களிடத்திலிருந்து பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அதே இயேசுவானவர் எப்படி பரமேறிச்சென்றாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்ற உறுதியை தூதர்கள் அவர்களுக்கு நிச்சயப் படுத்தினார்கள்.Mar 565.2

    கிறிஸ்து இவ்வுலகிலே மானிடனாக அவதரித்து வாழ்ந்துவந்த போது, அவருடைய மகிமை மானுடத்தில் வெளிப்படவில்லை… மகிமையின் உடையோடு-வெற்றி ஆரவாரத்தோடு-மிகவும் உயர்த்தப்பட்டவராக, பரலோகத்திலிருந்து இறங்கிவரும்பொழுது, அதே மானுடம் அப்பொழுது காணப்படுகிறது.Mar 565.3

    கிறிஸ்து தமது சொந்த மகிமையிலும், தம்முடைய பிதாவின் மகிமையிலும், பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வருவார். ஆயிரமாயிரம், பதினாயிரம் பதினாயிரம் தூதர்கள், அதாவது அழகிய வெற்றியாளர்களாகிய தேவகுமாரர்கள் (தூதர்கள்), மேம்பட்ட அழகும் மகிமையும் உடையவர்களாக, அவரது பாதையிலே அவரை அழைத்து வருவார்கள். முட்கிரீடம் இருந்த இடத்திலே, ஒரு கிரீடத்தினுள் இன்னொரு கிரீடமாக ஒரு மகிமையின் கிரீடத்தை அணிந்திருப்பார். அவருடைய அந்த பழைய சிவப்பான ஆடைக்குப் பதிலாக, “பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையிலும் வெண்மையான ஆடை” (மாற்கு 9:3) அணிந்திருப்பார். அவருடைய வஸ்திரத்தின் மேலும், அவருடைய தொடையின்மேலும், “இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா” என்னும் நாமம் (வெளியாகமம் 19:16) எழுதப் பட்டிருக்கும்.Mar 565.4

    அனைத்து தூதர்களும் வந்துவிட்டபடியால், பரலோகம் முழுவதும் வெறுமையாக இருக்கும். கிறிஸ்து ஒலிவமலையிலிருந்து பரமேறினபொழுது, கலிலேய மனிதர்கள் வானத்தைப்பார்த்துக் கொண்டிருந்ததுபோலவே, கீழேயிருக்கிற காத்திருக்கும் பரிசுத்தவான்கள், அவர் வருகைக்காக பரலோகத்தை அண்ணாந்துபார்த்து நோக்கிக்கொண்டிருப்பார்கள். அதன்பின்புதான், சாந்தத்தின் மொத்த உருவமான அவரை, முற்றிலுமாகப் பின்பற்றிய பரிசுத்தவான்கள், அடக்கமுடியாத ஆனந்தத்தோடு, அவரைக் கண்டு: “இதோ, இவரே நம்மை இரட்சிப்பார்” (ஏசாயா 25:9) என்று குதூகலிப்பார்கள். அவர்கள் கடைசி எக்காளம் தொனிக்கும் போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே மறுரூபம் ஆக்கப்படுவார்கள். (1 கொரிந்தியர் 15:51). இந்த எக்காளம் மரித்த பரிசுத்தவான்களை எழுப்பி, அவர்களது மண்படுக்கைகளினின்று சாவாமையைத் தரித்தவர்களாக, மரணத்தின்மீதும் பாதாளத்திம்மீதும் ‘வெற்றி! வெற்றி!’ என முழக்கமிட்டவர்களாக வெளியே வருகிறார்கள்!⋆Mar 566.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 566.2

    “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படு முன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்…” - எரேபியா 1:5.Mar 566.3