Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நீதிமான்களின் பொதுவான உயிர்த்தெழுதல்!, அக்டோபர் 18

    “...மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்.” - ஏசாயா 26:19.Mar 581.1

    இராஜாதி இராஜா, ஜுவாலித்து எரிகிற அக்கினியால் சூழப்பட்ட மேகத்தினின்று இறங்கி வருகிறார். வானங்கள் புத்தகச்சுருளைப்போல சுருண்டுபோகிறது. பூமி அவர் முன்பாக நடுங்குகிறது. அனைத்து மலைகளும், தீவுகளும், அவைகளுன் இடங்களை விட்டு அகன்று போயின...Mar 581.2

    பூமியுன் வேகமான சுழற்சிக்கு மத்தியும் மின்னல் மின்ன, இடி முழங்க, தேவகுமாரனின் குரல் நித்திரையிலிருக்கும் (மரணம்) பரிசுத்தவாங்களை அழைக்கிறது. அதன்பிறகு, அவர் நீதிமாங்களின் கல்லறைகளை நோக்கிப்பார்த்து, வானங்களுக்கு நேராக தமது கரங்களை உயர்த்தி: “பூமியின் தூளில் நித்திரை செய்கிறவர்களே, விழித்தெழும்புங்கள், விழித்தெழும்புங்கள்!” என்று உரத்த சத்தமிட்டார். பூமியின் நாலாத்திசையிலும் நித்திரையிலிருக்கும் பரிசுத்தவான்கள் அந்தக் குரலைக் கேட்பார்கள். அந்தக் குரலைக் கேட்பவர்கள் ஜீவனோடு இருப்பார்கள். அனைத்து ஜாது, கோத்திரத்தார், பாஷைக்காரர், ஜனக்கூட்டத்தார், ஆகியோரால் உண்டான - திடீரென்று எழும்பிய - மிகப் பெரிய - சேனையின் காலடியோசையால், பூமி முழுவதிலும் அதிர்வு ஏற்ப்பட்டது. மரணம் என்னும் சிறைக்கூடத்தினின்று, சாவாமை என்னும் மகிமையைத் தரித்தவர்களாக, அவர்கள் வெளியே வந்து: “ஓ மரணமே! உன் கூர் எங்கே? பாதளமே! உன் ஜெயம் எங்கே?” (1 கொரி. 15:55) என்று முழக்கமிட்டார்கள்; பின்பு, உயிரோடிருக்கிற நீதிமாங்களும், உயிர்த்தெழுந்த பரிசுத்தவாங்களும் ஒன்றாக இணைந்து, வெற்றியின் ஆனந்தத் தோனியை நீண்ட நேரம் வரையிலும் முழங்கினார்கள். கல்லறைகளிலிருந்து வந்த அனைவரும், கல்லறைக்குள் போகும்பொழுது இருந்த அதே வளர்த்தியிலேயே இப்பொழுதும் இருந்தார்கள்... ஆனால் நித்திய இளமையின் ஆற்றலோடும் புதுமலர்ச்சியோடும் அனைவரும் எழும்பினார்கள். சாவுக்கேதுவான - அழியக்கூடிய - அழகற்ற - பாவத்தால் முன்பு கேடடைந்த - அந்த உடலமைப்பு, பூரணமாக - அழகாக - சாவாமையைத்தரித்ததாக மாறிற்று. அனைத்து கறைகளும் குறைபாடுகளும் ஊனங்களும் கச்சறையிலேயே விட்டுவிடப்பட்டன.Mar 581.3

    உயிரோடிருக்கிற பரிசுத்தவாங்கள், ஒரு நொடியிலே-ஒரு இமைப் பொழுதிலே மறுரூபமடைகிறார்கள். தேவனின் குரலைக்கேட்டவுடனேயே அவர்கள் மகிமையடைந்தார்கள். இப்பொழுது அவர்கள் சாவாமையைத் தரித்தவர்களாக உயிர்த்தெழுந்த, பரிசுத்தவாங்களோடுகூட, ஆகாயத்தில் ஆண்டவரைச் சந்திக்க எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். தூதர்கள் பூமியின் ஒருமுனை முதற்க்கொண்டு அதின் மறுமுனை மட்டும், வானத்தி நாங்கு திசைகளிலும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைச் சேர்ப்பார்கள்.Mar 582.1

    சிறு குழந்தைகள் சாவாமையைத் தவிர்த்தவர்களாக, தங்களது மண்படுக்கைகளிளிருந்து எழும்பி, உடனே சிறகடித்துப்பறந்து, தங்களது தாய்மார்களின் புயங்களைச் சென்றடைந்தார்கள்.Mar 582.2

    மரணத்தினால் நெடு நாட்க்களாகப் பிரிந்திருந்த நண்பர்கள், இனி ஒருபோதும் பிரியக்கூடதபடிக்குச் சேர்ந்தார்கள்; பெரும் மகிழ்ச்சியின் பாடலோடு, அனைவரும் சேர்ந்து மேலெழும்பி, தேவனுடைய பட்டணத்தை நோக்கிச்சென்றார்கள்.⋆Mar 582.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 582.4

    “உன் ஜனங்கள் யாவரும் நீதிமாங்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாக இருப்பார்கள்.” - ஏசாயா 60:21.Mar 582.5