Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நித்திய வாழ்வின் ஆரம்பம் எப்பொழுது...?, அக்டோபர் 21

    “தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியம்.” - 1 யோவான் 5:11Mar 587.1

    இயேசுவின் உயிர்த்தெழுதல், அவரிலே நித்திரை செய்கிற அனைத்து மக்களின் உயிர்த்தெழுதலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.Mar 587.2

    கிறிஸ்தவன் மரிக்கலாம்; ஆனால், கிறிஸ்துவின் ஜீவன் அவனுக்குள் இருக்கிறது. நீதிமான்களின் உயிர்த்தெழுதலிலே அவன் புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள எழும்புவான்.Mar 587.3

    “அவருக்குள் (கிரிஸ்து) ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.” இங்கு சரீர வாழ்க்கை சுட்டிக்கட்டப்படவில்லை. மாறாக, முற்றிலும் தனிப்பட்ட விதத்தில் தேவனுக்குச் சொந்தமான ஜீவனாகிய சாவாமை என்னும் நிலையே இதுவாகும். அதாவது நித்திய ஜீவனாகும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் பெற்றுக்கொள்ளும் ஒரு காரியமாகும். அது நித்தியமானதுமல்ல; ஏனெனில், ஜீவனைக்கொடுத்தவராகிய தேவன் அதை மீண்டும் எடுத்துக்கொள்கிறார். மனிதனுக்கு அவனது ஜீவன் மேல் அதிகாரம் கிடையாது. ஆனால், கிறிஸ்துவின் ஜீவன் இரவலாகப்பெற்ற ஒன்றல்ல. அவரிடமிருந்து அந்த ஜீவனை எவரும் எடுத்துக்கொள்ள முடியாது. நான் என் ஜீவனைக் கொடுக்கின்றேன் என்றார். இயேசுவிலுருந்த அவருடைய ஜீவன் தொடக்கமுதலே உள்ளதாக இருந்தது. அது பிரிதொன்றை மூலமாகக் கொள்ளாததாகும். அவரது ஜீவன் இரவலாகப்பெற்றுக்கொள்ளப்பட்டதல்ல. மேலும் மற்றொன்றிலிருந்து தருவித்து உருவாக்கப்பட்டதுமல்ல. இந்த ஜீவனானது, மனிதரும் உள்ளியல்பாக இருக்கவில்லை. கிறிஸ்துவின்மூலமாக அவன் இதை உடைமையாகப் பெற்றுக்கொள்ளலாம்.Mar 587.4

    அவர் (கிறிஸ்து) மானிட இயல்பைக் கொண்டிருந்தபோது, தமது ஜீவனுக்காக சர்வவல்லவரைச் சார்ந்திருந்தார். அவர் தமது மானுடத்திலே தேவனுடைய தெய்வீகத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்தார். மானிடக்குடும்பத்தின் ஒவ்வொரு நபருக்கும் இதைச் செய்வதற்கான சிறப்புரிமை இருக்கிறது...Mar 588.1

    நம் மீறுதலுக்காக நாம் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும்போது, கிறிஸ்துவை ஜீவனளிக்கிறவராக நாம் ஏற்றுக்கொள்கிறோம்... அவரோடு கூட இணைந்து ஒன்றாகின்றோம். நம்முடைய சித்தமானது தேவ சித்தத்தோடு இசைவாகக் கொண்டுவரப்படுகிறது. நித்தியமான கிறிஸ்துவின் ஜீவனை பெற்றுக்கொள்ளும் பங்காளிகளாக நாம் மாறுகிறோம். கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றுக்கொள்வதின்மூலமாக, தேவனிடமிருந்து நாம் சாவாமையைப் பெற்றுக்கொள்கிறோம். ஏனெனில், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் - கிறிஸ்துவுக்குள் வாசமாயிருக்கிறது. தெய்வீகம் மனுஷீகத்தோடு இணைந்து செயல்படுகிறது. இது ஒரு புரிந்துகொள்ளக்கூடாத இணைப்பாகும்.Mar 588.2

    நாம் அவரோடு ஒரே ஆவியில் இணைவதற்க்காக, கிறிஸ்து நம்மோடு ஒரே சரீரமானார். இந்த இனைப்பின் நற்பயனாக நாம் கல்லறையினின்று உயிர்த்தெழுந்து வெளியே வரவேண்டும். வெறுமனே கிறிஸ்த்துவின் வல்லமையின் வெளிப்பாடாக மாத்திரம் அல்ல; ஏனெனில், விசுவாசத்தின்மூலமாக, அவருடைய ஜீவன் நம்முடையதாகிவிட்டது. கிறிஸ்துவை அவரது உன்மையான குணத்தில் கண்டு, அவரை இதயத்தில் ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. பரிசுத்த ஆவியானவரின் மூலமாக கிறிஸ்து நம்மிலே வாசம் செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை விசுவாசத்தினாலே இதயத்தில் ஏற்றுக்கொள்ளும்போது, அது நித்திய வாழ்வின் ஒரு ஆரம்பமாக இருக்கிறது.⋆Mar 588.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 588.4

    “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப்போதித்து, நான் உங்களுக்குச்சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.” - யோவான் 14:26.Mar 588.5