Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆனந்த பாக்கியமான நம்பிக்கை!, அக்டோபர் 23

    “நான் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகாதேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கின்றது.” - தீத்து 2:13.Mar 591.1

    நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருக்கும்படி, உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணும்படி நான் போகிறேன்” என்று இயேசு கூறினார். நாம் என்றைக்கும் அவரோடு குடியிருந்து, அவருடைய முகத்தின் ஒளியில் பூரிப்போம்... வரப்போகும் அந்த உற்சாகமான நினைவுகளால் மகிழ்ச்சியோடு என் இதயம் துள்ளுகிறது; நாம் வீட்டை அடைந்துவிட்டோம். பரலோகம், இனிமையான பரலோகம்; அதுவே எங்களது நித்திய வீடு. இயேசு ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறதினால் நாமும் ஜீவிப்போம் என்பதை எண்ணி, ஒவ்வொரு கணமும் நான் மகிழ்ச்சியோடிருக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று என் ஆத்துமா கூறுகிறது. கிறிஸ்த்துவிற்க்குள் சகல பரிபூரணமும் இருக்கிறது. எல்லாருக்கும் தேவையானது அவரிடம் இருக்கிறது; இப்படியிருக்க, அப்பத்திற்காக மடிந்துஅல்லது அந்நிய தேசங்களிலே நாம் ஏன் பட்டினியால் அவதிப்படவேண்டும்?Mar 591.2

    இரட்சிப்பின்மேல் நான் பசியாயிருக்கிறேன்-தாகமாயிருக்கிறேன்; தேவனுடைய முழுச்சித்தத்தின்படி மாற வாஞ்சையாயிருக்கிறேன். கிறிஸ்துவின்மூலமாக, ஒரு நல்ல நம்பிக்கை நமக்கு இருக்கிறது. அது நிச்சயமாக-நிலையான-திரைக்குள்ளாகப் பிரவேசிக்கிற நம்பிக்கை. நம் உபத்திரவங்களில் அது நமக்கு ஆறுதலளிக்கிறது; வியாகுலங்களில் மகிழ்ச்சியளிக்கிறது; நம்மைச்சுற்றிலும் இருக்கிற சோர்வை நீக்குகிறது. அதின் வழியாக, அழியாமையையும் நித்திய ஜீவனையும் பார்க்கச் செய்கிறது... உலகத்தின் பொக்கிஷங்கள் நமக்கு பெரிய ஊக்கத்தைக் கொடுப்பதில்லை. இந்த நம்பிக்கை இருப்பதாலே, அது கடந்துபோகிற உலகப் பொக்கிஷங்களுக்கும் மேலாகச்சென்று, அழியாமையின் சுதந்தரத்தை நாம் பற்றிக்கொள்ளத்தக்கதாக, நிலைக்கிறதும், கெடாததும், அசுசிப்படாததும், மங்கிப்போகாததுமான நித்தியத்தைப் பிடித்துக்கொள்ளும்படி நம்மைக் கொண்டுசெல்கிறது...Mar 591.3

    நம்முடைய இந்த சரீரம் மரித்து, கல்லறையிலே வைக்கப்படலாம்; ஆனால், நித்திரையிலிருக்கிறவர்களை அழைக்கிற இயேசுவின் சத்தம் கேட்கப்படும் உயிர்த்தெழுதலின் காலைவரை, அந்த அந்த பாக்கியமான நம்பிக்கை தொடர்ந்து ஜீவிக்கிறது. நாம் அப்பொழுது, இந்த பாக்கியமான-மகிமையான நம்பிக்கையின் முழுமையை ருசிப்போம். நாம் யாரிடம் விசுவாசம் வைத்திருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். நாம் வீணாக ஓடவில்லை; வீணாக பிரயாசப்படவுமில்லை. ஒரு வளமார்ந்த-ஒரு மகிமையான வெகுமதி நமக்கு முன்பாக இருக்கிறது. அந்தப் பரிசுக்காக நாம் ஓடுகிறோம். நாம் தைரியத்தோடு விடாமுயற்சி செய்வோமானால், அதை நிச்சயமாக பெற்றுக்கொள்வோம்...Mar 592.1

    நமக்கு இரட்சிப்பு இருக்கும்போது, ஏன் ஜீவ ஊற்றிலிருந்து விலகி நிற்கிறோம்? நம் ஆத்துமாக்கள் புத்துணர்ச்சியடைந்து, புது பெலனடைந்து தேவனுக்குள் செழிக்கும்படி, ஏன் வந்து பருகக்கூடது? ஏன் உலகத்தோடு இவ்வளவு நெருக்கமாக ஒட்டிக்கொண்டிருக்கிறோம்? பேசிக்கொள்ளவும் யோசித்துப்பார்க்கவும் இப்பூமியைக் காட்டிலும் மேன்மையான காரியங்கள் இருக்கின்றன. பரலோக சிந்தையோடு நாம் இருக்க முடியும். ஆ! இயேசுவின் கறையற்ற, இனிமையான குணத்தைப்பற்றி தியானிப்போம். அவரை நோக்கிப்பார்ப்பதினால், அவருடைய சாயலுக்கு நாம் மாற்றப்படுவோம். பெலங்கொள்ளுங்கள்; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். ⋆Mar 592.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 592.3

    “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.” - ஏசாயா 60:2.Mar 592.4