Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நீதிமான்களின் மறுரூபமாகுதல் எப்பொழுது நடைபெறும்?, அக்டோபர் 24

    ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.” - 1 தெசலோனிக்கேயர் 4:16,17.Mar 593.1

    வெகு செக்கிரத்தில் பெரிய வெண்மேகம் காணப்பட்டது. எப்போதையும்விட, அது இப்பொழுது வெகு அழகாக இருந்தது. அதின்மேல் மனுஷகுமாரன் அமர்ந்திருந்தார். முதலாவது, அந்த மேகத்தின்மேல் இயேசுவை நாங்கள் பார்க்கவில்லை; ஆனால், அந்தமேகம் பூமிக்கருகில் நெருங்கி வந்தபோழுது, “இனிய தோற்றத்தையுடைய அவரைப் பார்க்கமுடிந்தது...” தேவகுமாரனுடைய சத்தம் நித்திரையிலிருந்து பரிசுத்தவான்களை அழைத்தது. அவர்கள் மகிமையுள்ள அழியாமயைத்தரித்துக்கொண்டவர்களாக வந்தனர். உயிரோடிருந்த பரிசுத்தவான்களும் ஒரு நொடியிலே மறுரூபமடைந்து அவரோடுகூட மேக ரதத்தினுள் எடுத்துக்கொள்ளப்பட்டனர். அது மேல்நோக்கி எழுந்தபோது, முழுவதுமாக மகிமையோடு காட்சியளித்தது. அந்த மேகரதத்தின் இருபுறமும் செட்டைகளிருந்தன; அதற்கடியில் சக்கரங்களிருந்தன. அது மேலே எழும்பும்பொழுது, சக்கரங்கள்: “பரிசுத்தர்” என்று சொல்லின. தூதர்களின் பரிவாரமும்: “சர்வ வல்லமையுள்ள தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று முழங்கின. மேகத்திலிருந்த பரிசுத்தவாங்களும் “மகிமை, அல்லேலூயா” என்று ஆர்ப்பரித்தார்கள்.Mar 593.2

    நாங்கள் அனைவரும் மேகத்திற்குள் ஒன்றாகப் பிரவேசித்தோம். அது கண்ணாடிக்கடலை நோக்கி, ஏழு நாட்கள் மேல் நோக்கிச் சென்றது. இயேசு கிரீடங்களைக் கொண்டுவந்து, தமது சொந்த வலதுகரத்தால் எங்கள் சிரசுகளில் சூட்டினார். எங்களுக்கு பொற்சுரமண்டலத்தையும் வெற்றிக் குருத்தோலைகளையும் கொடுத்தார். அந்த கண்ணாடிக்கடல்மீது 1,44,000 பேரும் பூரண சதுரமாக நின்றார்கள். அவர்களில் சிலர், பிரகாசமான கிரீடங்களை அணிந்திருந்தனர். மற்றவர்களுடைய கிரீடங்கள் அவ்வளவு பிரகாசிக்கவில்லை. சிலருடைய கிரீடங்கள் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு கனமாயிருந்தன. சிலருக்கோ சில நட்சத்திரங்களே இருந்தன. அனைவரும் தங்கள் தங்கள் கிரீடங்களைக்குறித்து மனநிறைவுடன் இருந்தனர். அவர்கள் மகிமையுள்ள வெண்மையான சால்வையை தோள்களிலிருந்து பாதம்வரை தரித்திருந்தனர். கண்ணாடிக்கடலிலிருந்து, நகரத்தின் வாசலிற்கு நாங்கள் கடந்து சென்ற பொழுது, தூதர்கள் எங்களைச்சுற்றிலும் இருந்தனர். இயேசு தமது வல்லமையுள்ள, மகிமையான புயத்தை உயர்த்தி, முத்தினாலான அதின் கதவுகளைத்திறந்தார். ஜொலித்துக்கொண்டிருந்த பொன்னாலான கீல்களிலே இருந்த கதவு பின் நோக்கிச் சென்றது. பின்பு அவர் எங்களைப்பார்த்து: “நீங்கள் என் இரத்தத்தினிலே உங்கள் இங்கள் வஸ்த்திரங்களைத் தோய்த்து வெளுத்தவர்கள். என் சத்தியத்துக்காக உறுதியாக நின்றவர்கள். உள்ளே பிரவேசியுங்கள்” என்றார். நாங்கள் அனைவரும் உள்ளே பிரவேசித்தோம். அந்தப்பட்டணத்திலே எங்களுக்கு முழுமையான உரிமை இருப்பதை உணர்ந்தோம்.Mar 593.3

    எந்த மானிடரின் காதும் கேட்டிராத கீதத்தைவிட இனிமையான குரலுல் கிறிஸ்து: “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதற்கொண்டு உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட இராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார். ⋆Mar 594.1

    வாக்குத்தத்த வசனம்:Mar 594.2

    “சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். - சகரியா 2:10.Mar 594.3