Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய பட்டணத்திற்க்கு வரவேற்பு!, நவம்பர் 3

    அவனுடைய எஜமான் அவனை நோக்கு: “நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்க்குள் பிரவேசி” என்றான். - மத்தேயு 25:23.Mar 613.1

    விவரிக்கமுடியாத அன்போடு, இயேசு தமக்கு உத்தமமாய் வாழ்ந்தவர்களை தம்முடைய சந்தோஷத்திற்க்குள் பிரவேசிக்க அழைக்கிறார். அந்த இரட்சகருடைய சந்தோஷமெல்லாம், தம்முடைய வேதனையினாலும், சிறுமையினாலும் தாம் சம்பாதித்த ஆத்துமாக்களை மகிமையின் இராஜ்யத்தில் காண்பதே. ஆசீர்வதிக்கப்பட்ட அந்தக் கூட்டத்தில், தங்களுடைய ஊழியத்தினாலும், ஜெபத்தினாலும், அன்பான தியாகத்தினாலும் சம்பாதித்த ஆத்துமாக்களைக் காணும்பொழுது, மீட்க்கப்பட்டவர்கள் அவருடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார்கள். தாங்கள் கிறிஸ்துவிற்காக சம்பாதித்த ஆத்துமாக்களும், அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் சம்பாதித்த ஆத்துமாக்களுமாக, ஒரு பெரியகூட்டம், பெரிய வெள்ளைச் சிங்காசனத்தைச் சூழ்ந்து நிற்கும். அதைக் காணும்போது, சொல்ல முடியாத ஆனந்தம் அவர்களுடைய இதயங்களை நிறைத்து, அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கிரீடங்களைக் கழற்றி, கிறிஸ்துவின் பாதத்திலே வைத்து, என்றைக்கும் அவரைத் துதித்துகொண்டேயிருப்பார்கள்.Mar 613.2

    மீட்க்கப்பட்டவர்கள் தேவனுடைய நகரத்திற்க்குள் பிரவேசிக்கும் பொழுது, பக்தியோடுகூடிய பரவசமான துதியின் சத்தம் அங்கு எழும்பும். இரண்டு ஆதாமும் சந்திக்கபோகிறார்கள். தேவகுமாரன், தாம் உண்டாகின, தனக்கு விரோதமாகப் பாவஞ்செய்த, மனிதகுலத்தின் தகப்பனான ஆதாமை வரவேற்கும்படி, தமது கைகளை நீட்டுவார். அந்த ஆதாமுடைய பாவத்தினாலுண்டான சிலுவையின் தழும்பு அவர் மேனியிலே காணப்படும். அந்த கொடுமையான ஆணிகள் ஏற்படுத்திய கோரத் தழும்புகளை ஆதாம் தெளிவாகப் பார்க்கும்பொழுது, அவரது மார்பிலே சாய்வதற்குப் பதிலாக, தன்னைத் தாழ்த்தியவனாக, அவர் பாதத்தில் விழுந்து, “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் பாத்திரமானவர்” என்று கதறுகிரான். மிகவும் அன்போடு அவனைத் தூக்கியெடுத்து, நீண்ட காலமாக எந்த ஏதேன் வீட்டை மீண்டும் நோக்கிப்பார்க்குமாறு அவனை வேண்டுகிறார்.Mar 613.3

    ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டதற்க்குப் பிறகு, இந்த பூமியிலே ஆதாமுடைய வாழ்க்கை வருத்தம் நிறைந்ததாகவே இருந்தது. காய்ந்து விழுகிற ஒவ்வொரு இலையும், பலிசெலுத்தப்பட்ட ஒவ்வொரு உயிரும், அழகான இயற்கையின்மீது வந்த ஒவ்வொரு குறையும், மனிதனுடைய தூய்மையான குணத்திலே வந்த ஒவ்வொரு கறையும், தான் செய்த பாவத்தின் ஒரு புதிய நினைப்பூட்டுதலாகியிருந்தது... மிகவும் பொறுமையான தாழ்மையோடு, ஏறக்குறைய ஓராயிரம் வருடங்களாக, மீறுதலுக்கான தண்டனையை அவன் சகித்தான். தன் பாவங்களுக்கக உண்மையாகவே மனம் வருந்தி-மனந்திரும்பி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சகரின் புண்ணியங்களிலே உறுதியான நம்பிக்கை வைத்தான்; மறுபடியும் உயிர்த்தெழுவோம் என்கிற நம்பிக்கையிலேயே மரித்தான். தேவனுடைய குமாரன் மனுஷனுடைய தோல்வியினின்றும் விழுகையினின்றும் அவனை மீட்டார். இப்பொழுது, பாவ நிவாரண ஊழியத்தினாலே, ஆரம்பத்தில் ஆதாமுக்குக் கொடுத்திருந்த ஆளுகையை மீண்டும் அவனுக்குக் கொடுத்தார்.Mar 614.1

    வாக்குத்தத்த வசனம்:Mar 614.2

    “...நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.” -2 கொரிந்தியர் 6:16.Mar 614.3