Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இறுதியில் பரமவீட்டை அடைந்துவிட்டோம்!, நவம்பர் 7

    அவனுடைய எஜமான் அவனை நோக்கி: “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்க்குள் பிரவேசி” என்றான். - மத்தேயு 25:21.Mar 621.1

    உங்கள் உணர்வுகள் இப்பூமியின் கவர்ச்சியான அழகினாலே மகிழ்ச்சியடையும்போது, பாவத்தினாலும் மரணத்தினாலும் கறை பட்டிராத வரப்போகிற உலகத்தைக்குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். அங்கே இயற்கை, சாபத்தின் நிழலை ஒருபோதும் அணிந்துகொள்ளாது. மீட்க்கப்படுகிறவர்களின் வீடுகளை கற்பனை செய்துபாருங்கள். நீங்கள் எவ்வளவு அழகான கற்பனைசெய்திருந்தாலும், அதைக் காட்டிலும் அது மிகவும் மகிமையுள்ளதாகவே இருக்கும். இயற்கையிலே தேவன் அளித்திருக்கும் பல்வேறு கொடைகளிலே அவரது மகிமையின் மங்கலான ஒளிர்வையே நாம் காண்கிறோம். “எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகளை மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” - கொரி. 2:9.Mar 621.2

    வருங்காலத்தில் தேவனுடைய பிள்ளைகளை அனுமதிப்பதற்காக பரலோகத்தின் கதவுகள் விரிவாகத் திறக்கப்படும்; அப்பொழுது, மகிமையின் இராஜாவுடைய உதடுகளிலிருந்து பிறக்கிற, “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற இராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” (மத்தேயு 25:34) என்கிற ஆசீர்வாதம் இனிமையான இசையாக, அவர்கள் காதுகளில் தொனிக்கும்.Mar 621.3

    பின்பு, மீட்க்கப்பட்டவர்களுக்காக இயேசு ஆயத்தம்பண்ணிக்கொண்டிருக்கிற அந்த வீட்டிற்குள் அவர்கள் வரவேற்று அழைத்துச்செல்லப்படுவார்கள்.Mar 621.4

    பின்னர், மீட்கப்பட்ட அந்த கூட்டத்தை இயேசு நகரத்தின் வாசலுக்கு அழைத்துச்சென்றதை நான் கண்டேன். அவர் அந்த கதவுகளைத் திறக்க, அவைகளின் ஜொலிக்கின்ற கீல்களிலே அமைந்திருந்த கதவுகள் அசைந்து பின்னாகச் சென்றது. சத்தியத்தைக் கைகொண்ட ஜாதிகளை உள்ளேவரும்படி அவர் அழைத்தார். கண்களுக்கு விருந்தளிக்கும் அனைத்தும் அந்த நகரத்தினுள்ளே இருந்தது. எல்லா இடங்களிலும் அதிமேன்மையான மகிமை தங்கியிருந்தது; பின்பு இயேசு மீட்கப்பட்ட பரிசுத்தவாங்களைப் பார்த்தார். அவர்கள் முகங்கள் மகிமையினால் பிரகாசித்தன. தமது அன்பான பார்வையை அவர்கள்மேல் நிறுத்து, கீதம்போன்ற இனிமையான குரலில் “என் ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டேன்; திருப்தியடைந்தேன். இந்த மேலான மகிமையெல்லாம் நித்தியத்துக்கும் நீங்கள் அனுபவிக்கும்படி உங்களுடையதே. உங்கள் வருத்தமெல்லாம் முடிவடைந்தது. இனி மரணமில்லை, வருத்தமில்லை, அழுகையில்லை, வேதனையும் இல்லை ...என்றார்.”Mar 622.1

    பரலோகத்தின் மாட்சியை வர்ணிக்க எந்த மொழியும் போதாது. அந்தக் காட்சிகள் என்முன் தோன்றும்பொழுதுஎல்லாம், நான் வியப்பில் அமிழ்ந்துபோகிறேன். அதன் சிறந்த பிரகாசத்திலும் உன்னத மகிமையிலும் மூழ்கிப்போகிற நான் எழுதுவதை நிறுத்திவிட்டு, “ஆ! எத்தகைய அன்பு, எத்தகைய ஆச்சரியமான அன்பு” என்று வியக்கிறேன். மிகவும் உயர்ந்த மொழியுங்கூட, பரலோகத்தின் மகிமையும், இணையற்ற இரட்சகருடைய அன்பையும் விவரிப்பதில் குறைவுள்ளதாகவே இருக்கிறது.⋆Mar 622.2

    வாக்குத்தத்த வசனம்:Mar 622.3

    “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு, கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.” - யாக்கோபு 1:12.Mar 622.4