Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பிப்ரவரி

    நெருக்கடியான ஒரு நேரம்...!, பிப்ரவரி 1

    “...அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்.” - மல்கியா 3:2.Mar 63.1

    தேவன் தமது நியாயப்பிரமாணத்தைப் பறைசாற்ற (சீனாய்) மலையின்மேல் இறங்கினபொழுது, தங்களது பாவத்தன்மையின் காரணமாக இஸ்ரவேலர்கள், மலையை நெருங்கிவராதபடிக்குத் தடைசெய்யப் பட்டிருந்தார்கள். அல்லது அவர்கள் தேவனுடைய சுட்டெரிக்கும் மகிமையால் அழிக்கப்பட்டுப் போயிருப்பார்கள். தேவன் தமது பிரமாணத்தை பறைசாற்றும்பொழுதே, அவரது வல்லமை இவ்வளவாக வெளிப்படுத்தப்பட்டதென்றால், அந்தப் புனிதமான பிரமாணத்தை நிறைவேற்ற வரும்பொழுது, அவரது நியாயசங்கம் இன்னும் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும். அவரது விதிமுறைகளை (நியாயப்பிரமாநத்தை௦ மிதித்துப் போட்டவர்கள் நியாயத்தீர்ப்பு நாளில் அவரது மகிமையை எப்படித் தாங்கிக் கொள்ளுவார்கள்?”Mar 63.2

    தெய்வீகப் பிரசன்னம் சீனாய் மழையிலே வெளிப்படுத்தப்பட்ட பொழுது, கர்த்தருடைய மகிமை பட்சிக்கிற அக்கினியைப் போன்று காணப்பட்டது... ஆனால் கிறிஸ்து, தமது பரிசுத்த தூதர்களோடு மகிமையிலே வரும்பொழுது, உலகம முழுவதும் அவரது பிரசனத்தின் பயங்கரமான ஒளியினால் பற்றியெரியும்.Mar 63.3

    மனிதன் தான் சிருஷ்டிக்கப்பட்டதுமுதல், சீனாய் மலையில் பிரமாணம் பறைசாற்றப் பட்டபொழுது வெளிப்படுத்தப்பட்ட தெய்வீக வல்லமைக்கு ஒப்பாக, வேறு எப்பொழுதும் அவரது வல்லமையைக் கண்டதில்லை.. இயற்கையின் மிகப் பயங்கரமான சீற்றத்திற்கு மத்தியிலும் தேவனுடைய குரல், ஒரு எக்காளத்தைப்போல் மேகத்தினின்று தொனித்தது. அந்த மலை அஸ்திபாரத்திலிருந்து உச்சிவரை அசைக்கப்பட்டது. இஸ்ரவேலர்கள், அச்சத்தால் வெளிறியவர்களாகவும் நடுங்கியவர்களாகவும் பூமியின்மேல் முகங்குப்புற விழுந்தார்கள். தமது குரலால் பூமியை அசைத்த அவர், “இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப் பண்ணுவேன்” என்றார்.Mar 63.4

    மோசே நியாயப்பிரமாணம் எழுதப்பட்ட கற்பலகைகளோடு அந்த மலையிலிருந்த தெய்வீகப் பிரசன்னத்திலிருந்து வந்தபோது பாவம் நிறைந்த இஸ்ரவேலர்களால், அவனது முகத்தினை மகிமைப்படுத்திய அந்த ஒளியையே தாங்கிக்கொள்ளக் கூடாதிருந்தது; அப்படியானால், பிரமாணத்தை நியாயந்தீர்க்கத்தக்கதாக, தேவகுமாரன் தமது பிதாவின் மகிமையோடு பரலோகத்தின் தூதர்கள் சூழ தோன்றும்போது, பாவிகள் அவரது முகத்தை எவ்வாறு கண்ணோக்குவார்கள்...Mar 64.1

    தெய்வீக நியாயத்தீர்ப்பின் புயலின் மத்தியிலும் தேவனுடைய பிள்ளைகள் பயப்படத் தேவையில்லை. “கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்” - யோவேல் 3:16. தேவனுடைய நியாயப் பிரமாணத்தை மீருகிரவர்களுக்கு அச்சத்தையும் அழிவையும் கொண்டுவரும் அந்த நாள், நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவோருக்கு, “சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷத்தை” கொண்டுவரக்கூடியதான நாளாக இருக்கும்.⋆Mar 64.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 64.3

    “உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் ணீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் ணீ பெயர் பெறுவாய்.” - ஏசாயா 58:12. Mar 64.4