Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நித்திய காரியங்களையே நோக்கிப்பாருங்கள்!, நவம்பர் 21

    “...காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.” - 2 கொரிந்தியர் 4:18.Mar 649.1

    சபை, கிறிஸ்துவினுடைய நீதியின் வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, உலகத்தின் பற்றுகளிலிருந்து விலகிக்கொள்ளுமானால், பிரகாசமான-மகிமையான காலைப்பொழுது, அதன் முன்பு இருக்கிறது. அதற்கு அவர் கொடுத்த வாக்குத்தத்தம் என்றென்றும் நிலைத்திருக்கும்... தன்னைப் புறக்கணித்து தள்ளிப்போடுகிறவர்களை, தாண்டிப்போகிற சத்தியம் ஜெயங்கொள்ளும்; அவ்வப்பொழுது, அதன் முன்னேற்றம் தடைபட்டதுபோல் தோன்றினாலும், அதன் முன்னேற்றம் ஒருபோதும் தடைபட்டிருக்காது. தெய்வீக சக்தியைப்பெற்று, மிக உறுதியான தடைவேலிகளையும் துண்டித்து, அனைத்து இடையூறுகள்மீதும் வெற்றிபெறும்.Mar 649.2

    கடுமையான ஊழியம் மற்றும் தியாகம் நிறைந்த அவரது வாழ்க்கையிலே தேவனுடைய குமாரனை தாங்கிப்பிடித்தது எது? அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டார்; கண்டு திருப்தியடைந்தார். தான் சகித்த அவமானத்தின்மூலமாக, மன்னிப்பு பெற்று நித்தியஜீவனைக் கண்டடைந்தவர்களுடைய ஆனந்தத்தை அவர் கண்டார். மீட்கப்பட்டவர்களின் ஆரவாரத்தை அவர் காதுகள் கேட்டன. மீட்கப்பட்டவர்கள் மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடுவதை அவர் கேட்டார்.Mar 649.3

    எதிர்காலத்தையும் பரலோக ஆசீர்வாதங்களையுங்குறித்த தரிசனங்களை நாமும் காணலாம். வேதாகமத்திலே வருங்கால மகிமை மற்றும் தேவனுடைய கரங்களால் வரையப்பட்ட காட்சிகள் ஆகியவைபற்றிய தரிசனங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகள் அவருடைய சபைக்கு மிகவும் விருப்பமானவைகள். விசுவாசத்தினாலே நாமும் நித்தியத்தின் வாசலிலே நின்று, தங்கள் வாழ்க்கையிலே கிறிஸ்துவிற்காக உபத்திரவப்படுவது தங்களுக்குக் கிடைத்த மேன்மை என்றெண்ணி, அவரோடு ஒத்துழைத்த மக்களுக்குக் கிடைக்கப்போகின்ற கிருபைபொருந்திய வரவேற்பின் வார்த்தைகளை கேட்கலாம். “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே” என்கிற வார்த்தைகள் கூறப்பட்டபொழுது, தங்கள் கீரிடங்களை மீட்பரின் காலடிகளில் வைத்து, “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார்”; “சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக” (மத்தேயு 25:34;வெளி. 5:12,13) என்று ஆப்பரிப்பார்கள்.Mar 649.4

    மீட்கப்பட்டவர்கள், தங்களை இரட்சகரண்டைக்கு நடத்தினவர்களை வாழ்த்துவார்கள். தேவனுடைய ஜீவனுக்கு ஏற்றதான ஜீவனை மானிடர்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, அதற்காக மரித்தவரை, அனைவரும் இணைந்து துதிக்கின்றனர். போராட்டம் முடிவடைந்தது; உபத்திரவங்களும், யுத்தங்களும் முடிந்துபோயின. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் பாத்திரமானவர், மீண்டும் ஜீவிக்கிறவர் பாத்திரமானவர், வெற்றிசிறந்தவர், துதிகளுக்குப் பாத்திரமானவர் என்று மீட்கப்பட்டவர்கள் ஆனந்தகீதமாகப் பாடும்பொழுது, அந்த வெற்றியின் கீதங்கள் பரலோகம் முழுவதையும் நிரப்பும்.⋆Mar 650.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 650.2

    “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்...” - சங்கீதம் 91:14,15.Mar 650.3