Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இறுதி நியாயத்தீர்ப்பு!, நவம்பர் 27

    “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தங்கள் திறக்கப்பட்டன;... அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” - வெளிப்படுத்தல் 20:12.Mar 661.1

    இப்பொழுது கிறிஸ்து தமது எதிரிகள்முன் மீண்டும் காணப்படுகிறார். நகரத்திற்கு மேலே-மிகுந்த உயரத்தில்-தங்கத்தால் ஆன-மெருகிடப்பட்ட-ஒரு அஸ்திபாரத்தின்மேல், மிக உயர்ந்த உன்னதமான சிங்காசனம் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிங்கசானத்தின்மேல் தேவனுடைய குமாரன் வீற்றிருக்கிறார். அவரைச் சுற்றிலும், அவருடைய இராஜ்யத்தின் பிரஜைகள் இருக்கிறார்கள். கிறிஸ்துவினுடைய வல்லமையையும் மகிமையையும் எந்த மொழியாலும் விவரிக்கமுடியாது. அதை எந்தப் பேனாவாலும் விவரித்துக் காட்டமுடியாது. நித்திய பிதாவினுடைய மகிமை அவருடைய குமாரனைச் சூழ்ந்திருந்தது. அவருடைய பிரசன்னத்தின் பிரகாசமானது தேவனுடைய நகரத்தை நிரப்பி, அதின் வாசல்களைக் கடந்துவந்து, பூமி முழுவதையும் அதின் ஒளிக்கதிர்களால் பிரகாசமடையச் செய்தது.Mar 661.2

    ஒரு காலத்தில் சாத்தானுக்காக வைராக்கியமாயிருந்து, அக்கினியிலிருந்து பிடுங்கப்பட்ட கொள்ளியைப்போல, இரட்சகருக்குத் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்தவர்கள், சிங்காசனத்திற்கு மிக அருகில் இருந்தார்கள். பொய்களுக்கு நடுவில், தேவனுடைய கற்பனைகளை முழுஉலகமும் ஒதுக்கித்தள்ளினபோதும், கிறிஸ்தவ குணங்களிலிருந்து சற்றும்விலகாமல், எல்லாக் காலங்களிலும், விசுவாசத்திற்காக இரத்தசாட்சியாக மரித்தவர்கள், அதற்கு அடுத்தபடியாக சிங்காசனத்தைச் சுற்றிலும் நிற்பார்கள். அதையும் அடுத்த, எண்ணிலடங்காத திரள்கூட்டமான--ஒருவரும் எண்ணக்கூடாத மக்கள்--எல்லா ஜாதி, பாஷை, கோத்திரங்களிலுமிருந்து சிங்காசனத்தின் முன்பாகவும் “வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி நிற்பார்கள்” - வெளி. 7:9.Mar 661.3

    மீட்கப்பட்டவர்கள், “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக” என்ற துதியின் பாடல் தொனித்த போது, அந்த சத்தம், பரலோகம் முழுவதும் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கும். தூதர்களும் சேராபீன்களும் அவர்களோடு சேர்ந்து அவரைத் துதிப்பார்கள்...Mar 662.1

    கூடியிருக்கும் விண்ணுலக-மண்னுலகவாசிகளுக்கு மத்தியிலே, தேவனுடைய குமாரனின் முடிசூட்டு விழா நடைபெறுகிறது. இப்பொழுது, சர்வவல்லமையும் பெற்றவராக, கெம்பீரத்தோடு இராஜாதி இராஜாவாக, தமது இராஜ்யத்திற்கு எதிராகக் கலகஞ்செய்தவர்கள்மேல் தீர்ப்புவழங்கி, அவருடைய கற்பனைகளை மீறி, அவருடைய பிள்ளைகளை உபத்திரவப்படுத்தினவர்களுக்கு தீர்ப்பு வழங்குவார்...Mar 662.2

    புத்தகங்கள் திறக்கப்பட்டவுடனே, இயேசுவின் கண்கள் துன்மார்க்கரைப் பார்க்கும். தங்கள்செய்த எல்லாத் தவறுகளையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.⋆Mar 662.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 662.4

    “உன்னோடே போராடினவர்களைத்தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.” - ஏசாயா 41;12.Mar 662.5