Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கடுமையான சோதனையின் வேளையில் நீ நிலைநிற்பாயா?, பிப்ரவரி 4

    “உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும் படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.” - உபாகமம் 8:2.Mar 69.1

    1844-ல் கூறியறிவிக்கப்பட்ட தூது நம்மில் பலர் எண்ணுவது போல, குறுகிய காலக்கட்டத்திற்குள் நிறைவேறுமானால், அவர்கள் தங்கள் குணங்களை முன்னேற்றுவித்துக்கொள்ள காலம் இருக்காது.. இதை தேவன் தம் மக்களுக்கு நிரூபித்துக் காட்டுவார். அநேகர் மன உணர்வுகளினால் உந்தப்பட்டார்களேயொழிய, கொள்கை, விசுவாசம் ஆகிய இலட்சியங்களால் உந்தப்படவில்லை. இந்த பக்திவிநயமான - பயங்கரமான தூது அவர்களைக் கிளர்ந்தெழச் செய்தது. அவர்களுடைய உணர்வுகளிலே அது கிரியைசெய்து, அவர்களது பயங்களைச் தூண்டிவிட்டது; ஆனால், அந்தத் தூதானது என்ன செய்யவேண்டுமென்று தேவன் திட்டமிட்டிருந்தாரோ, அந்த வேலையை அது நிறைவேற்றவில்லை...Mar 69.2

    தேவன் தமது ஜனத்தை படிப்படியாக வழிநடத்துகிறார். தங்கள் இதயத்திலுள்ளதை அவர்கள் வெளிப்படுத்தும்படி வெவ்வேறு இடங்களுக்கு அவர்களை அவர் கொண்டுசெல்கிறார். சிலர் ஒருசில இடங்களில் நிலைநிற்கின்றனர்; ஆனால் மற்றொன்றில் விழுந்துவிடுகின்றனர். ஒவ்வொரு இடத்தையும் கடக்கும் பொழுது, இதயம் சோதிக்கப்பட்டு, இன்னும் சிறிது தேர்ச்சியடைகிறது. ஒருவேளை தேவனுடைய ஜனங்கள் என்று தங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்பவர்கள் இந்த நேர்வழிக்கு எதிராக, தங்கள் இதயத்தைக் காண்பார்களேயாகில், அதை மேற்கொள்ளும் பணி அவர்களுக்கு இருக்கிறது என அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்... சிலர் ஒருசில காரியங்களை ஏற்றுக்கொள்வர்; ஆனால், தேவன் மற்றொன்றை கொண்டுவரும்பொழுது, அவர்கள், தங்கள் மனதில் ஊற்றி வளர்ந்துள்ள சில விக்கிரகங்களை அது தாக்குவதைக் கண்டு, அதிலிருந்து பின்வாங்கி விடுகின்றனர். இங்கே அவர்கள் இயேசுவை வெளியே வைத்து, அடைத்துக் கொள்ளும்படியாக எந்தெந்த காரியங்கள் தங்கள் இதயத்தில் இருக்கிறது என்று கண்டுகொள்ள, ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் சத்தியத்திற்கும் அதிகமாக மற்றொரு காரியத்தை மதிப்பிட்டு, தங்கள் இதயத்தை இயேசுவை ஏற்றுக்கொள்ள ஆயத்தப்படுத்தவில்லை. ஒவ்வொரு தனிநபரும் குறிப்பிட்ட காலம்வரை சோதிக்கப்பட்டு, அவர்கள் தங்கள் விக்கிரகங்களை தியாகஞ்செய்கிறார்களா, தியாகஞ்செய்யவில்லையா என்று நிரூபிக்கப்படுவர்... ஒவ்வொரு நிலையையும் கடந்து, ஒவ்வொரு சோதனையிலும் நிலைநின்று, அதற்கான விலை எதுவாயிருப்பினும், அனைத்தையும் மேற்கொள்பவர்களே மெய்சாட்சியாகிய தேவனுடைய ஆலோசனைகளைக் கவனித்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்பவர்கள்; அவர்களே பின்மாரியைப் பெற்று, மறுரூபமாவதற்குத் தகுதியைப் பெறுவார்கள்.Mar 69.3

    தேவன் இவ்வுலகத்திலுள்ள தம் மக்களைச் சோதித்து நிரூபிக்கிறார்.. இவ்வுலகில் கடைசிக்காலத்தில் மக்கள் எந்த சக்தி தங்கள் இதயங்களைப் பாதித்து, தங்கள் செய்கைகளை அடக்கியாளுகின்றன என வெளிப்படுத்துவர். அது தெய்வீக சத்தியத்தின் வல்லமையாக இருப்பின், அது நல்ல செய்கைகளுக்கு வழி நடத்தும். தன்னை பெற்றுக்கொள்வோரை அது உயர்த்தி, தங்கள் புனிதமானவராகிய கர்த்தரைப் போன்றே மேன்மையான இதயமுள்ளவர்களாகவும் பெருந்தன்மையுடையவர்களாகவும் அவர்களை மாற்றும்...Mar 70.1

    இளைஞர்களே, முதியோர்களே, தேவன் இப்பொழுது உங்களை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் நிச்சயத்திற்கான முடிவை நீங்களே தீர்மானித்துக்கொண்டிருக்கிறீர்கள்.⋆Mar 70.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 70.3

    “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறையுள்ளவனாயிருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” - யாக்கோபு 1:5.Mar 70.4