Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மீட்கப்பட்டோரின் சுதந்திரம்!, டிசம்பர் 11

    “என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.” - ஏசாயா 32:18.Mar 689.1

    வேதாகமத்தில் மீட்கப்பட்டோரின் சுதந்தரவீதம், “ஒரு நாடு” என்று அழைக்கப்படுகிறது-எபிரேயர் 11:14-16. அங்கே பரலோக மேய்ப்பன் தன் மந்தையை, ஜீவதண்ணீருக்குள்ள ஊற்றுகளண்டை வழினடத்துகிறார். ஜீவவிருட்சம் மாதந்தோறும் தன் கனிகளைக் கொடுக்கும்; அதின் இலைகள் மக்களின் நலனுக்கு பயனுள்ளதாயிருக்கும். பளிங்கிற்கு ஒப்பான-தெளிந்த-வற்றாத-நீரோடைகள் அங்குண்டு. அதன் கரைகளில் அசைந்தோடும் மரங்கள், தேவனால் மீட்கப்பட்டோர் நடந்துசெல்லும் பாதைகளில் நிழல் பரப்பிடும். அங்கே பரந்து விரிந்த சமவெளிகள், அழகான குன்றுகளாகவும், உயரிய கொடுமுடிகளோடுகூடிய தேவ பர்வதங்களாகவும் காணப்படும். அந்த ஜீவ ஊற்றுகளண்டையில், அமைதியான சமவெளியில், இதுகாறும் அந்நியரும் பரதேசிகளுமாயிருந்த தேவனுடைய மக்கள் தாங்கள் தங்கித் தாபரிக்கும் ஒரு வீட்டைக் கண்டடைவார்கள்...Mar 689.2

    அங்கே, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்”; “முட்செடிகளுக்குப் பதிலாக மிருதிச்செடி எழும்பும்”; ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்,.. ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்;” “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை” - ஏசாயா 35:1; 55:13; 11:6,9. அங்கே மனிதன், தான் இழந்த ஆளுகையைத் திரும்பவும் பெற்றுக்கொள்வான். ஏனைய ஜீவராசிகள் அவன் அதிகாரத்தை அங்கீகரித்து அடங்கும். கொடூரமானவை சாந்தமாகவும், பயந்த சுபாவம் கொண்டவை நம்பிக்கையோடும் நடமாடும்.Mar 689.3

    பரலோகச் சூழ்நிலையில் வேதனைகளுக்கு இடமில்லை. அங்கே கண்ணீர் இல்லை; மரண ஊர்வலங்கள் இல்லை; துக்கத்தின் அடையாளங்கள் இல்லை; “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை... முந்தினவைகள் ஒழிந்துபோயின”; “வியாதிப் பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்” - வெளி 21:4; ஏசாயா 33:24.Mar 689.4

    தோட்டத்திலும, வயலிலுமான வாழ்க்கையை அங்கு-ஏதேனில் வாழ்வார்கள். “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல, என் கனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடு நாளாய் அனுபவிப்பார்கள்” -ஏசாயா 65:21,22.⋆Mar 690.1

    வாக்குத்தத்த வசனம்:Mar 690.2

    இயேசு அவர்களை நோக்கி: “ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” என்றார். - யோவான் 6:35.Mar 690.3