Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வெற்றியுள்ள சபை!, டிசம்பர் 16

    “...அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.” - வெளிப்படுத்தல் 15:2.Mar 699.1

    இப்பொழுது சபை போராடிக்கொண்டிருக்கிறது! ஏறத்தாழ முழுவதும் விக்கிரக ஆராதனைக்குச் சாய்ந்த நிலையில், இருளில் உள்ள உலகத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம்; ஆனால், போராடி வெற்றி பெறுகின்ற நாள் விரைவில் வருகிறது. தேவசித்தம், பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படவேண்டும். இரட்சிக்கப்பட்டவர்களின் இராஜ்யத்தில் பரலோகப்பிரமாணத்தைத்தவிர, வேறே பிரமாணம் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியோடு-ஒரே குடும்பமாக, துதியின்-ஸ்தோத்திரத்தின் உடைகளை அணிந்தவர்களாகக் காணப்படுவார்கள். அவ்வஸ்திரம் கிறிஸ்துவின் நீதியே! இயற்கை தன் மேலான அழகுடன் தேவனைத் துதித்துப் போற்றும். உலகம், பரலோக ஒளியில் நிறைந்திருக்கும். நிலவின் ஒளி சூரிய ஒளி போன்றும், சூரிய ஒளி தற்போது உள்ளதைவிட ஏழு மடங்கு அதிகமானதாகவும் இருக்கும். வருடங்கள் மகிழ்ச்சியிலே உருண்டோடும், அப்பொழுது, விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாகப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரிப்பார்கள். “இனி ஒரு பாவமுமிராது, இனி மரணமுமில்லை...” என்று தேவனும் கிறிஸ்துவும் ஒன்றாக விளம்புவார்கள்.Mar 699.2

    இவ்வுலகில் கிறிஸ்துவிற்காக பாடனுபவிப்பது பாக்கியம் என்றும், சிலாக்கியம் என்றும் கருதி, அவரோடு ஒத்துழைத்து வாழ்க்கை நடத்தியவர்களுக்குக் கொடுக்கப்படும் கிருபையின் வரவேற்பை, நித்தியத்தின் வாசலில் நின்று கேளுங்கள். தூதர்களோடு சேர்ந்து, தங்கள் கிரீடங்களை மீட்பரின் பாதங்களில் வைத்து, அவர்கள்: “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ள பாத்திரராயிருக்குறார். ...சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக” என்று மகா சத்தமிட்டுத் துதித்தார்கள்-வெளிப்படுத்தல்-5:12,13.Mar 699.3

    மீட்கப்பட்டவர்கள் அங்கே, இரட்சகரிடம் தங்களை வழிநடத்தியவர்களைக்கண்டு வாழ்த்தினர். தேவனுக்கு ஒப்பான வாழ்வை மனிதர்கள் பெற்றுக்கொள்வதற்காக, மரித்த கிறிஸ்துவை அவர்கள் ஒன்றுசேர்ந்து துதித்தனர். போராட்டம் முடிந்தது. எல்லா உபத்திரவமும் பாடுகளும் முடிவிற்கு வந்தன. தேவ சிங்காசனத்தைச் சூழ்ந்து மீட்கப்பட்டவர்கள் நிற்க, ஜெயகீதம் பரலோகத்தை நிரப்பிற்று. “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் பாத்திரராக இருக்கிறார். எங்களை தேவனுக்கென்று மீட்டுக்கொண்டார்.” என்று ஆனந்த கீதம் பாடினர்.⋆Mar 700.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 700.2

    “அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, அவன் அவருடைய சமூகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி, அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.” - யோபு 33:26.Mar 700.3